முல்லைத் தீவு கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
முல்லைத்தீவு ஏரிக்கு வடக்கே புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்றினை அவதானித்த விமானப் படையினர் கிபிர் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.35 மணியளவில் புலிகளின் இலக்குகளைத் துல்லியமாக அவதானித்ததன் பின்னர் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு விசுவமடுவில் இராணுவத்தின் 58 ஆம் படைப் பிரிவினரிடம் நேற்று முன்தினம் மாலை 541 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். மேலும், படகில் வந்த ஏழு சிவிலியன்கள் யாழ்ப்பாணம் முனை கடற்படை முகாமில் தஞ்சமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்