மத்திய மாகாணத்தில் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்கள் 33,322 பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மாகாணத்தில் தற்போது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 955108, 338946, 452395 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேர்தல் மத்திய நிலையங்களாக கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் முறையே 680,296,393 ஆக மொத்தம் 1369 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை (14) நடைபெறும் மத்திய மாகாண சபை தேர்தல் நடவடிக்கை கடமைகளை மேற்கொள்ளுமுகமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 12000, 3900, 4800 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.