இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் நிரந்தரமாக அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Kugan
பிரதீபா புலியள் ஆயுதத்தை போட்டிட்டு பேச்சுக்கு வரோணும் எண்டுறா. அவையள் ஆயுதம் போட்டிட்டா மக்கள் அவையளைப் போட்டிடுவினும் எண்டும் பிரபாவுக்கு அறிவு சார் அரசியல் எண்டா அலர்ஜி எண்ட புதினம் இவவுக்கு தெரியாது போல.
குகன்