பிரிவினை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, முழு நாட்டுக்கும் சாத்தியமற்ற செய்திகளை தேசிய வானொலியின் அலை வரிசைகள் மூலம் ஒலிபரப்புச் செய்ய முடியாதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழோசை மற்றும் பி.பி.சி. சந்தேசிய ஆகியவற்றை முன்னறிவித்தல் எதுவுமின்றி பி.பி.சி. நிறுவனம் நிறுத்தியுள்ளது.
பி.பி.சி. நிறுவன அதிகாரிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக அவர்களிடமிருந்து எமக்கு இது வரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைச் சோதனையிடுவதற்காக விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் அண்மையில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி.யின் சந்தேசிய சிங்கள செய்திச் சேவையில் ஒலிபரப்பான செய்தி உண்மையை மூடி மறைப்பதாக அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்