இலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.என்.ஸ்ரீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்த அவர், இலங்கையில் சண்டையை நிறுத்த இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மத்திய அரசு இதனை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நா.மற்றும் வெளிநாடுகளை நாடி யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை என்றும் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ.செய்திச் சேவை இதனைத் தெரிவித்தது.
SUDA
ஸ்ரீகாந்தா! அதுதான் வெளிநாடுகள் உங்களுக்கு எற்கனவே சொல்லியாச்சே!! ஆயுதங்களைக் கீழே போட்டுட்டு சரணடையச் சொல்லி. நீர் எந்த உலகத்தில இருக்கிறீர்?
padamman
“கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை”
அது இல்லை வேறு வரு(மானம்)இல்லை
பார்த்திபன்
அட அருமையான ஒரு சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டீர்கள் ஸ்ரீகாந்தா!! இப்ப கொஞ்ச நாட்கள் முன்பு தானே ஐ.நாச் செயலாளர் இந்தியா வந்தவர். அப்ப நோர்வே எரிக் சொல்கெய்மும் இந்தியா வந்து சேர்ந்து கதைத்து விட்டுத் தானே புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு அறிக்கை விட்டவை. நீங்களும் தமிழ்நாட்டில் அறிக்கை விடுறதிலை மும்மூரமாய் இருந்ததிலை இந்த விடயம் உங்களுக்கு தெரியாமல் போச்சுதோ??
இதைத் தான் சொல்லுறவை கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் போற கதை சொல்லுறதெண்டு.
lavan
அந்த நேரத்தில் எதாவது சொல்லவேண்டும் வாயில் வந்ததை சொல்லிப்போட்டார் இப்போது அவருக்கே என்ன சொன்னனான் என்று ஞாபகம் இருக்காது அது அவருக்கு தேவையும் இல்லை
palli
//மத்திய அரசு இதனை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நா.மற்றும் வெளிநாடுகளை நாடி யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை //சரி
ஜ. நா .நாடும் மறுத்தால் ஒதுங்கி கொள்வீர்களா?? ஏன் எனி வன்னி போகும் நோக்கம் இல்லையா??? இது மக்களுக்கல்ல உங்களுக்கும் விடிவு காலம். புரிந்து செயல் படலாமே.
seelan
இது சரியான நிலைபாடே