வன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற மக்களின் நலன் கருதி வவுனியா இ.போ.ச.டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சு ஐந்து பஸ்களை வழங்க இணங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியா டிப்போவுக்கு ஐந்து பஸ்கள் கிடைத்துள்ளன எனவும் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த பஸ்கள் வன்னியில் இருந்து வருகின்ற மக்களை ஏற்றிவருவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள வன்னிப் பகுதி அகதிகளை இந்த பஸ்கள் மூலம் செட்டிகுளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பஸ்கள் இரவு பகலாக வன்னிப் பகுதி அகதிகளின் சேவைக்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.