இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்வானி வாழ்த்திப் பேச்சு:
உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.
பின்னர் வைகோ பேசுகையில்,
பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.
1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.
வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு
முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.
இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.
ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.
இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.
K. Moorthy
திரு. வைகோ உண்ணாவிரதம் இருப்பதை நான் வரவேற்கிறேன். அப்போதுதான் இந்திய மத்திய அரசாங்கம் கண்விழிக்கும்.
உண்ணாவிரதம் இருக்கும் திரு.வைகோ திருமாவளவன்போல் பாதியில் விட்டுவிடாமல் தொடர்ந்து இருக்கவேண்டும். அப்போதுதான் உலகத்திற்கு அவர் உண்மையான இலட்சியவாதி. தமிழினத்திற்காக. அதுவும் இலங்கைத் தமிழருக்காக உயிரை விட்டவர் என்ற அழியாப்புகழைப் பெறுவதுடன் திலீபனுக்குப்பின் தியாகியான வரலாற்றையும் பெறுவார்.
தன்மானச்சிங்கம் வைகோ இதை நிச்சயம் செய்வார்!
Mr Cool
அண்ணாச்சி உங்கள் உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமா? அல்லது சாகும்வரை உண்ணாவிரதமா?
தமிழ் ஈழத்தில் காந்திய வழியில் போராட்டம் நடத்திய திலீபனின் வழிகாட்டலில் நீங்களும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதே எமது தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். தமிழன் சாதனைக்குரியவன். முத்துகுமார் தீக்குளித்து சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார். தோழர் திருமாவைப் போல அரைகுறையாக உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளாதீர்கள். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சரித்திரத்தில் இடம் பிடியுங்கள். வாழ்த்துக்கள்.
lavan
“விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம்”
காலத்தின் கட்டயம் அது புலிகள் அழிவதன்முலம்தான் மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கை கிடைக்கும். வைக்கோல் போன்றவர்களின் உண்ணாவிரதம் வெறும் பம்மாத்து பழச்சாருடன் தான் உண்ணாவிரதத்தை தொடங்குவார்.
tamil
உங்கள் உண்ணாவிரதம் தமிழருக்கு விடிவை கொண்டுவர வாழ்த்துக்கள்
hot-tamilan
அண்ணே! வைக்கோ இந்திய பாராளுமன்ற வரலாற்றில், பிரதமர் பங்கேற்காத முதல் கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்து விட்டது. இந்திய பொதுத்தேர்தலுக்கு முன்பாக, பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரும் இதுவாகும்.
எனவே – அண்ணே! உண்ணாவிரதம் இருக்குறதெல்லாம் பழைய ஸ்டைல். பேசாம நீங்க ……………. . அதான் உங்களுக்கும் நல்லது நம்ம தமிழ் நாட்டுக்கும் நல்லது.
chandran.raja
இந்தியா பல்லின இனங்களையும் மதங்களையும் கொண்ட நாடு. எந்த இனத்திற்கோ மதத்திற்கோ விஷேச சலுகை வழங்கிடமுடியாது. இனத்திற்கோ மதத்திற்கோ குறையிருக்குமானால் ஜனநாயக வரையறைக்குள் போராடமுடியும். இது உலகத்திலும் இந்தியாவிலும் இலங்கையிலும் தடையில்லை.
நியாமான கோரிக்கைகளை தவறான வழிகளைகொண்டு போராடப் புறப்பட்டால் அவர்களின் உரிமைகள் மறுக்கப்டுவதுடன் பல வருடங்கள் சகாப்தங்கள் பின் தள்ளிப்போகும். நாடுசீர்அழிக்கப்பட்டு அவலத்துகுள்ளாக்கப்படும். இலங்கை இதற்கு நல்லதொரு உதாரணம்.
இதையே வை.கோவும் அவரின் இணைக்கூட்டாளிகளும் விரும்புகிறார்கள். இந்தியா சீரழிக்கப்படுவதையா ? தற்கொலை குண்டுதாக்குதலும் வாகனம் நிறைந்த வெடிபொருள்களை வெடிக்கச்செய்து பொதுமக்களையும் பொதுசொத்து அழிபடுவதையுமா? உண்னாநோன்பு மூலம் பயங்கரவாதத்திற்கு அங்கீகாரம் பெறவா?
Kullan
வைகோ! நீங்கள் புலிகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் சோனியாவை ஏமாற்ற ஏலாது. யாரிடம் சொல்லிவிட்டு வந்தீர்கள் உங்கள் உண்ணாவிரதத்தை இடை நிறுத்துமாறு? ஜெயலலிதா வருவாரா? தமிழக உண்ணாவிரதங்களைப் பார்த்தோம் தானே. முத்துக்குமாரின் உண்மை உணர்வை அரசியலாக்கிய தமிழ்நாட்டு அரசியலை எந்தக்குப்பையில் போடுவது? எல்லாக் குப்பைத்தொட்டிகளும் ஏற்கமறுக்கின்றன. காரணம் குப்பைத்தொட்டிகள் தம்மை அசுத்தப்படுத்த வேண்டாம் என்கின்றன.
ஒரே ஒரு பிரபாகரனுக்காகத்தான் இவ்வளவு போராளிகளும் அப்பாவித்தமிழ் மக்களும் அழிகிறார்கள் என்பது ஏன் இன்னும் உங்களுக்கும் உங்கள் போன்றோருக்கும் புரியவில்லை? பிரபாகரன் கிட்லரைப் போல்ஆயுதத்தில் காதல் கொண்ட மனநோயாளி என்பது ஏன்புரியவில்லை? இதற்காக இராசபக்ச குடும்பம் திறம் என்று நாம் நம்பவில்லை. களை எடுக்கிறோம் என்று எத்தனை அறிவுயீவிகளை புலிகள் கொன்று குவித்தது தெரியுமா? இதன் விளைவுதான் ஐரோப்பிய இந்திய அமெரிக்கத் தெருக்களில் தமிழ் சனம் கத்திக் கொண்டு திரிந்தும் பலன் எதுவும் இல்லாது போனது. மண்ணுக்கான போராட்டம் என்று மண்ணும் இல்லாமல் மக்களும் இல்லாமல் போகிறார்கள் புலிகள். புலிகளால் கொல்லப்பட்ட குடும்பம் மட்டுமல்ல அவர்கள் பரம்பரையே புலிகளை மன்னிக்காது
புலிகள் அழிந்தால் தமிழர் நிலை என்ன? என்று பலர் எண்ணுகிறார்கள். புலிகள் என்று தமிழர்களை மக்களை எண்ணினார்கள். மண்மண் என்று மண்ணாங்கட்டியும் இல்லாமல் கிடக்கிறார்கள். 60000 ஆமி யாழ்மண்ணில் விதைக்க்பட்டிருக்கிறது. காரணம் யார்? சிங்களக் குடியேற்றம் குடியேற்றம் என்ற புலிகள் இராணுவத்தைக் கொண்டுவந்து இன்று வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றியது போதாதா?
விடுதலைப் போராட்டங்களில் மண் மக்களில் இருப்புக்கான ஒரு காரணியே தவிர போராட்டம் மக்களுக்காகவே இருக்கவேண்டும். மக்களையும் எம்மொழியையும் நேசிக்காத எந்தத் தலைவனும் எமக்கு வேண்டாம். மொழியே எமது இன அடையாளம் பிரபாவுக்கு மண்தான் வேண்டும் என்றால் வெளிநாட்டுத் தமிழர்கள் காசுசேர்த்து முல்லைத்தீவில் காணிவாங்கி விடுகிறோம் மக்களை விட்டுவிடுங்கள் பிரபா? இல்லை யென்றால் போதியளவு காடுகள் இருக்கிறது போய் அங்கே இருங்கள் மக்களை விட்டுவிடுங்கள்.
பிரபா! நீர் இழந்திருந்தால் தான் அதன் வலி தெரியும். உம் ஒருத்தனைப் பாதுகாக்க எவ்வளவு மக்கள் அழிந்தார்கள் உம்மால் அழிக்கப்பட்டார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். நீர் மக்களின் மேல் நேசமற்ற கொலைக்கருவிகளின் மேல் காதல் கொண்ட மனநோயாளி என்பது நிரூபணமாகிறது. மீழாய்வு செய்யுங்கள்.
புலி விழுத்தால் யாரை ஏற்பது என்பது பலரது கேள்வி. இன்று சரியான தலைமை தமிழர்களுக்கு இல்லைத்தான் ஆனால் அரசின் ஆட்சியில் தமிழர்க்கு என்று ஒரு தமிழ்தலைவன் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. வேலுப்பிள்ளை மகனின் தலைமையில் எத்தச் சரியான தலைமையும் உருவாகாது. புலியின் கட்டுப்பாட்டுக் காலத்திலேயே எல்லா இயக்கங்களும் புலிகளால் அழிக்கப்பட்டது. இயக்கங்கள் வெறும் கட்டிடமோ மண்ணோ அல்ல மனிதர்கள் மனித வளங்கள். பிரபாகரன் போல்தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்றால் வேலுப்பிள்ளைதான் எல்லோருக்கும் தகப்பனாக இருந்திருக்க வேண்டும். நல்ல வேளை மாற்றுக்கருத்துள்ளவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். மண்ணை மட்டும் நேசிக்கும் மனிதரையும் மனிதத்தையும் நேசிக்காத மாவியா போன்ற புலிகளை இன்னும் மக்கள் ஆதரிக்கத்தான் போகிறீர்களா?அப்படியானால் நல்லது தற்கொலை செய்யுங்கள். புலிகளை ஆதரிப்பது தற்கொலைக்கு ஒப்பானது. புலிகளை நேசித்த ரஜினி திரணகம கிட்டு விக்ரர் மாத்தையா போன்றோர்க்கு நடந்தது தான் உங்களுக்கு. புலி ஆதரவாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்களும் தமிழர்கள் என்பதால் எழுதுகிறேன். தயவுசெய்து மூளையைக் களற்றி எங்காவது ஒழித்து விட்டுப் புலிகளை ஆதரியுங்கள் இல்லையேல் நீங்களும் புலிகளால் சுடப்படுவீர்கள். சிந்திப்பவர்களை புலிகள் விடுவதில்லை.
Kullan
வைகோ உண்ணாவிரத்தை ஒரு பக்கம் வையுங்கோ. 13ம் திகதிகளில் வரும் வெள்ளிக்கிழமைகள் திற்குறியானது என்பது ஐரோபிய ஐதீகம். உங்கள் உண்ணாவிரத்தை நாள் தேள் பார்க்காது வைத்து விட்டீர்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இதை ஒரு நல்ல சாட்டா காட்டி பசி எடுக்கும் போது உண்ணாவிரதத்தை முடித்து விடுங்கள். தமிழர்தானே. சுகமாக ஏமாற்றலாம். இவ்வளவுகாலமும் நீங்கள் கருநாகம் கருணாநிதி அரசியலில் இருக்கவில்லையா? மக்கள் இன்றும் வோட்டுப் போடுகிறார்கள் தானே. சும்மா பகிடி விடாமல் உண்ணாவிரதத்தை அங்காலை வையுங்கோ.
அருட்செல்வன்
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது கப்பல், கப்பலாக ஆயுதங்கள் இறக்குமதி செய்தது இலங்கை அரசு. ஆனால் இங்கிருந்து என் சகோதரர்களுக்கு 10 லீற்றர் டீசல் போய் விட்டால் கடத்தல் என்கிறார்கள்.
-இனிவரும் இளைஞர்கள் எங்களைப் போன்று இருக்கமாட்டார்கள்.
-இனிவரும் இந்நாட்டு இளைஞர்கள் கடல்வழியாக ஆயுதங்களோடு புறப்படுவார்கள்.
-அப்படி ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை வந்தால் நான் முதல் ஆளாக நிற்பேன்.
-உன் பாதுகாப்புச் சட்டம் கால் தூசிக்கு சமம்.
-மாணவர்களே வீதிக்கு வாருங்கள்,
-கிளர்ச்சி பரவட்டும்,
-தமிழகம் கொந்தளிக்கட்டும்.
-இந்திய ஒருமைப்பாடு சிதறிவிடும் என்ற பயம் இந்திய அரசுக்கு வரட்டும்.
-என்னுடைய இந்த நிலைப்பாட்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றார்.
இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவரும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அமைந்தகரையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
thurai
தற்சமயம் உலகில் எந்தப்பகுதியில் யார் ஈழத்த்மிழர்களிற்காக எதைச் செய்தாலும், புலியின் செயலாகவே உலகம் பார்க்கின்றது. முதலில் வன்னியில் போய் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க முயன்றால் வை.கோ வின் புலித்தோல் உரிவதற்காவது வாய்ப்புக் கிடைக்கும்.
துரை
seelan
காந்திய வழியில் போராட்டம் நடத்தி உங்கள் கோரிக்கை நிறைவேர்ருவதற்கு இந்தியா இப்போதும் பிரிட்டிசாரின் ஆழ்சியில் இல்லை அண்ணே
காந்திய வழியிலான போராட்டத்தை இந்தியா எப்போது மதித்தது
பார்த்திபன்
உங்க உண்ணாவிரதமும் ஏதொ ஒரு சாட்டைச் சொல்லி இடையில் நிறுத்தும் உண்ணா விரதம் தான். இதன் மூலம் நீங்கள் அடுத்தவர்களையும் ஏமாற்றி உங்களையும் ஏமாற்றும் நிகழ்வு தான் அரங்கேறுகின்றது. உண்மையில் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று விரும்பினால் பிரபாகரனை ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணடையச் சொல்லுங்கள். ஒரு தனிமனிதனுக்காக பல இலட்சம் மக்கள் காவு வாங்கப்படுவதை உடன் நிறுத்தப் பாடுபடுங்கள். அதைவிடுத்து புலிப்புராணம் பாடிக் கொண்டிருப்பதால் யாருக்கு இலாபம்.
lavan
“அதைவிடுத்து புலிப்புராணம் பாடிக் கொண்டிருப்பதால் யாருக்கு இலாபம்.”
லாபம் இல்லாமல்லா? அதுவும் இந்திய அரசியல்வாதி என்ன?
padamman
வைக்கோ அவர்களே நீங்கள்ளாவது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பிகளா? வேண்டிய பணத்துக்கு இதைகூட செய்யமுடியாது போனால் உங்கள் தலைவர் உங்களை மண்னிக்கமாட்டார். அப்புறம் பொட்டுத்தான் மாலைதான் அதுசரி நண்பன் திருமா ஆளைக்காணோம் அவரும் எங்காவது உண்ணுகிண்ற விரதம் இருக்கின்றரா?
செல்லாச்சி
/உங்கள் உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமா? அல்லது சாகும்வரை உண்ணாவிரதமா?/ ரெண்டுமில்லை. ரெண்டுக்கும் இடைப்பட்டதாம்.
தம்பிமார் உந்த உண்ணாவிரதம் தீக்குளிப்பு போராட்டம் எண்டு கேட்டுக் கேட்டு காது புளிச்சுப்போச்சு. வேறஏதும் வித்தியாசமான போராட்டம் செய்யமாட்டியளோ??;
SUDA
அப்ப இந்தியாவில தேர்தல் திருவிழா இப்பவே களைகட்ட ஆரம்பிச்சிட்டுதுன்னு சொல்லுங்கோ என்ன?
Kugan
அண்ணே வைகோ
ஆதரவற்று வந்த ஈழத்தமிழரை மனிதர்களாக கூட நடத்தாத நீங்களும் உங்கள் தமிழக தலைவர்களும் தயவு செய்து வேறு உத்திகளை கையாண்டு உங்கள் கேவலங்கெட்ட அரசியல் புழைப்பை நடத்துங்கோ. ஆனால் அண்ணை பிரபாவின்ர ஏஜண்டுகளிட்ட வாங்கின காசுக்கு> சொன்ன மாதிரி இல்லாம ஏய்ச்சா பிராபாண்ணை ஒண்டாச் சாப்பிட்டு சகோதரம் மாதிரி இருந்தனீங்கள் எண்டு கூட பாக்கமாட்டார் போட்டுத்தள்ளிப் போடுவார். கவனம். எதுக்கும் தயவு செய்து ஈழத்தமிழரை காட்டி ஈனத்தனமாய் அரசியல் நடத்துறதை விட்டிடுங்கோ ஈழத் தமிழர் தமிழக தமிழன் போலில்லை. அது புலியாய் இருந்தாலும் சரி இல்லாட்டிலும் சரி. ஏன் உமக்கு இந்த பொல்லாத விஷப்பரீட்சை
குகன்
அருட்செல்வன்
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இந்தியா இராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் டில்லி யில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் தமிழக இந்தியக் கம்யூனிஸ்ட், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை இனப் படுகொலையை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது, இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
அருட்செல்வன்
இன்று வைகோ டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு உண்ணா விரதப்போராட்டத்தை நடத்துவதாக நேற்றுமுன்நாள் அறிக்கை விட்டாலும் கூட இன்று உண்ணா விரதப்போராட்டம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. நாளை மதிமுக சார்பில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட கோரிக்கைகளை வலியுறூத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக தெரிகின்றது. இதற்காக வைகோ டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள வைகோவின் வீட்டில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பாரதீய ஜனதா வட்டாரங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் வைகோவுக்கு பாரதீய ஜனதா தனது ஆதரவை தெரிவித்து இருப்பதாகவும் மற்றபடி இந்த சந்திப்பு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.
Kullan
வைக்கோ அண்ணா!
ஈழத்தமிழர் பிரச்சனை ஒருபக்கம் இருக்கட்டும். 900 மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டனரே என்ன செய்து முடித்தீர்கள். தீர்வு என்ன கிடைத்தது. இந்திய உங்கள் மத்திய அரசு இலங்கை அரசுக்கும் சிங்களவருக்கும் கொடுக்கும் மரியாதையும் மதிப்பும் உங்கள் நாட்டு அதாவது இந்திய மீனவர்களுக்கு இல்லை. இதன் அர்த்தம் இந்தியத்தமிழரையே இந்தியராக ஏற்க உங்கள் இந்தியா தயாராக இல்லை. உங்கள் உண்ணாவிரதத்தையா ஏற்கப்போகிறார்கள். சாகவிட்டு விடுவாங்கள் அண்ணை. இடையிலை எழும்பிவிடுங்கோ….
பார்த்திபன்
/லாபம் இல்லாமல்லா? அதுவும் இந்திய அரசியல்வாதி என்ன?/- லவன்.
அதுதான் வைகோவிற்கும் நெடுமாறனுக்கும் பலதடவை தானே பணம் கொடுத்தாக கருணாவே கூறியுள்ளாரே. ஆனால் வைகோவிற்கு கருணாவை யார் என்று தெரியாதாம் என்று வைகோ காதிலை பூச் சுற்றுகின்றார்.
palli
குரல் கொடுஉக்க வேண்டியதுதான் ஆனால் அதுவே ஓவராகி கொடுத்தால் வடிவேலு ஜெயிலுக்கு தானாக போனதுமாதிரி முடிந்துவிடும் இல்லையா??பேசுங்கள் செயல்படுத்த கூடியதனை அம்முட்டுதான்.
Nantha Sri
Many of you are here …. “மக்களின் அழிவிலிருந்து அதுவும் அப்பாவிப் பொதுமக்களினது குழந்தைகளினதும் சாம்பல் மேட்டிலிருந்து ஜனநாயகப் பூக்கள் மலரும் என கோழைத் தனமாகப் பிரச்சாரம் செய்யும், மனித விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைகுழிக்குள் அனுப்பிவிட்டு போரை ரசித்துக் கொள்ளும் குரூரம் மிக்கவர்கள்.”
anpu
சரியாகச் சொன்னீர்கள் நந்தசிறீ, அதேபோல இதன் மறுதலையாக– “மக்களின் அழிவிலிருந்து அதுவும் அப்பாவிப் பொதுமக்களினது குழந்தைகளினதும் சாம்பல் மேட்டிலிருந்து “தமிழீழம்” மலரும் என கோழைத் தனமாகப் பிரச்சாரம் செய்யும் மனித விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைகுழிக்குள் அனுப்பிவிட்டு போரை ரசித்துக் கொள்ளும் குரூரம் மிக்கவர்கள்.” –புலிகளும் உள் வெளி நாடுகளிலுள்ள புலியாதரவாளர்களும் என்பதையும் குறிப்பிடலாம்.
Nantha Sri
Anpu! சரியாகச் சொன்னீர்கள். Thanks!
அருட்செல்வன்
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்களும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களும் 2வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாதும் என்றும், இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுக்க கடந்த சில தினங்களாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம், உண்ணா விரதம் மேற்கொண்டனர்.
Mr Cool
டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் 28 பேர் கைது செய்யப்படுள்ளனர்.
டெல்லியின் மத்திய பகுதியான ஜந்தர் மந்தர் இடத்தில் நேற்று முதல் ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் ஈழப்பிரச்சனைக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ஏ.கே.மூர்த்தி எம்.பி., பாண்டிச்சேரி பாமக எம்.பி. ராமதாஸ், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், நீதிபதி சச்சார், இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் உட்பட பலர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினர்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சில பேர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பு சென்று ராஜபக்சேயின் உருவமொம்மையை எரித்து இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முற்ப்பட்டனர். இதனால் டெல்லி போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவத் தலைவர்கள் மற்றும் படைப்பாளிகள் லீனாமணிமேகலை, மாலதிமைத்ரி, கோணங்கி, யவனிகா, இன்பா, அஜயன்பாலா, மீனவ பிரதிநிதி தலைவர் லிங்கன், கருக்கல் சுரேஷ்வரன், உதவி இயக்குநர் திருமுருகன் உட்பட 28 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.
chandran.raja
ஈழத்து பயங்கரவாதத்தை வை.கோபாலசாமி தத்தெடுக்கிறார். அதற்கு அத்வாணியும் உதவிபுரிகிறார்…..
எப்படியாவது இந்தியாவை சில்லு சில்லாக உடைத்து.. உடைப்பதின் மூலம் அதனில் பயன் பெறுவேருக்கு தனது சுயநலஅரசியலுக்காக எல்லா இனமக்களையும் காட்டிக்கொடுப்பதே!
எப்படி பிரபாகரன் தமிழ்மக்களை இந்திய இராணுவத்திற்கும் சிங்கள ராணுவத்துவத்திற்கும் காட்டிக்கொடுத்தானே அதே போல்… இந்தியமுழு இனத்தையும் தன்தேவைக்காக காட்டிக்கொடுக்க தயாராகிறான் அத்வாணியுடன். இந்தஇனவெறியருடனும் மதவெறியருடனும் நாம்கணக்கு தீர்கவில்லையென்றால் எமக்கு ஏன் அரசியல்? எமக்கு ஏன் தேசபக்தி ? எமக்கு ஏன் பொதுயுடமை ?.
பார்த்திபன்
அதுசரி அண்ணாவின் உண்ணாவிரதம் என்னாச்சு. நேற்றையோடையே முடித்து விட்டார் போலுள்ளது. மூக்கப் பிடிக்க சாப்பிட்டு விட்டு மதியம் தொடங்கி இரவு முடித்தவிட்டு திரும்புவதற்கு பெயர் தான் உண்ணாவிரதமா ??