இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.
முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.
அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
kunam
அதற்காகத்தான் இங்கு லண்டனில் வீடுவீடாக புலிஆதரவு அமைப்பினர்கள் முத்துக்குமாருக்குஎன காசு சேர்க்க எப்பவோ தொடங்கிவிட்டினமே.
chandran.raja
தீ குளித்து இறப்பவனை வீரமரணமாகவும் பல்லாயிரம் கொலைகளையும் பல்லாயிரம் கோடி பொதுசொத்துக்களை அழித்தவனை ஒருஇனத்தின் தலைவனாகவும் ஏற்றுக்கொண்டு தாமே “இனஉணர்வு” உள்ளவர்கள் என்று மேடைபோட்டு பிரச்சாரம் செய்து அரசியல் லாபம் தேடுபவர்களை எப்படி? நாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வதே என்பது தான் இன்று எம்முன்னால் நிற்கும் கேள்வியாகும்.
BC
chandran.raja, நீங்கள் சொன்ன தீ குளித்து இறப்பவனை வீரனாகவும், கோடி பொதுசொத்துக்களை அழித்தவனை இனத்தின் தலைவனாகவும் ஏற்றுக்கொண்டு லாபம் அடைபவர்கள் சொல்வதை நம்புபவர்களாக தான் மக்கள் பலர் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் புலிகளின் தமிழ் ஊடகங்கள், புலி ஆதரவாளர்கள் ஊடகங்களை மட்டுமே பார்க்கிறார்கள். accu குறிப்பிட்ட மாதிரி தாம் வாழும் நாட்டின் பிரதமரையே இந்த ஊடகங்கள் முலமே அறிந்து கொள்கிறார்கள்.
பகீ
இவர் கொடுத்த 3 லட்சத்தை இறந்தவரின் குடும்பம் நிராகரித்த போது தெரிந்து கொண்டு விட்டார். கலைஞரின் பம்மாத்துகள் இனிச் செல்லாது என்று தெரிந்தவுடன் இனி மூக்குடைபடுவதிலும் பார்க்க தனது ‘கதை’ விடுதலால் மண்படவில்லை பம்மாத்து காட்டுகிறார். பாவம் 1970/80 களில் இருந்த நிலை மாறி நிறயக்காலம் ஆச்சு என அறியாமல் இருப்பது வேதனைதான்.
பார்த்திபன்
பகீ, தகவலை சரியாக அறிந்து எழுதலாமே. தமிழக அரசு அறிவித்த நிதியுதவி 2 இலட்சம். அதைத் தெளிவாக இந்தக் கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியிருக்க தங்களுக்கு மட்டும் அது 3 இலட்சமாக எப்படி தெரிகின்றது. தமிழக அரசின் நிதியை முத்துக்குமாரின் குடும்பத்தினர் நிராகரித்த போது சொன்ன விடயம் முத்துக்குமாரின் தியாகத்திற்கு விலை பேச வேண்டாமென்று. ஆனால் அதன் பின்பு வை கோ திருவாவளவன் இராமதாசின் கூட்டு கொடுத்த 3 இலட்சத்தை பெற்றுக் கொண்டார்கள். அதற்கு என்ன விளக்கம். ஒரு வேளை தமிழக அரசு கொடுத்த விலை போதவில்லையென்பதா??
Hazan
தீக்குளித்து உயிரை விட்டவர்கள் பலர். ஆனால் ஏன் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு மட்டும் நிதியுதவிபற்றிக் கதைக்கிறார்கள். மற்றவர்களின் உயிர்த்தியாகங்கள் மதிப்பற்றுப் போனதேன்??
பார்த்திபன்
முத்துக்குமாரை தீக்குளிக்க வைத்தவரே இராமதாசு தான். இதை முன்பும் ஒருமுறை தேசத்தில் குறிப்பிட்டிருந்தேன். முத்துக்குமார் இறுதியாக வசித்தது கொளத்தூர் அதாவது கொளத்தூர் மணியின் இடம். அதுபோல் முத்துக்குமார் பணியாற்றிய “பெண்ணே நீ” பத்திரிகை இராமதாசினுடையது. எனவே இவர்களால் காவு வாங்கப்பட்ட உயிருக்கு ஊர்பணத்தை சுருட்டி நிதி கொடுக்கத் தானே வேண்டும்.
பகீ
பார்தீபன், இங்கு நான் சொல்ல வந்தது கருணாநிதின் திடீர் ஞனோதயம் பற்றியே. காலங்காலமாகவே தீக்குளிப்போருக்கு நிதியுதவி வழங்கியவர் இன்று ஞானம் பெற்றதேன்? இறந்தவர்களின் குடும்ப உள்விடயங்களோ அன்றி எவ்வளவு பணம் என்பதோ அல்ல. கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால் அவரின் ‘மாய்மாலங்கள்‘ இனி செல்லுபடியாகாது என்பதை அறிந்து விட்டார் என்பதே.
Thaksan
வை.கோ. தி.மு.க.வில் இருந்து பிரிந்தபோது புலிகள் 5 கோடி இந்தியப்பணத்தை வை.கோ. கட்சி தொடங்க கொடுத்ததாக பாலா(தேசத்தின்குரல்) சொன்னது மறந்தா போய்விட்டது? காசிருந்தால் தமிழகத்தில் வாங்கமுடியாதது என்று எதுவுமில்லை என ரஜீவ் காந்தி கொலையின்போது புலிகள் சொல்லித் திரிந்தது தெரியாதா? புலன் பெயர்ந்தவர்களிடம் வாங்கும் காசில் கொஞ்சத்தை கிள்ளி தெளிக்க தெரியாதா? இதென்ன கஸ்டப்பட்டு வேர்வை சிந்தி புலி உழைச்ச காசா? ஆத்தில போகுது அண்ணை பிடி> தம்பி பிடி எண்ட கணக்கில தானே அள்ளி விசுறுகினம். திருமா> வை.கோ.> ராமதாஸ்> நெடுமாறன்> விகடன் நிருபர்…… வாங்கோ…வாங்கோ….வாங்கோ… வாங்கிக்கோங்கோ. நீங்க பேசுற பேச்சின்ர நீளத்திற்கும் காரத்துக்கும் ஏற்ப காசு. வாங்கோ…வாங்கோ….வாங்கோ… வாங்கிக்கோங்கோ.