முல்லைத் தீவு தர்மரபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கும் காயமடைந்தோருக்கும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் குடும்பஸ்தர் அல்லாத ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் 18 வயதுக்குக் குறைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதமும் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக காயமடைந்தோருக்கு முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. காயமடைந்தோரின் வைத்திய அறிக்கையின்படி இத்தொகை மேலும் அதிகரிக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
msri
புலிகள் செய்த கொலைளுக்கு நீங்கள் நன்டஈடு கொடுக்கின்றீர்கள்! உங்கள் கொலைகளுக்கு யார் கொடுப்பது! >என்ன மனிதாபிமானம்! என்னே மகிந்த சிந்தனை!
xavier
why compansate only people dies in tharmapuram isit becouse they killed by them