மட்டு. நிவாரணம் வவுனியாவில் கையளிப்பு

aid-bati.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ஏழுமில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரணப் பொருட்கள் நேற்று வவுனியா அரச களஞ்சியத்தில் வைத்து மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். திரு ஞானசம்பந்தரிடம் கையளிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் ஏ. ஜோர்ச்பிள்ளை உத்தியோகபூர்வமாக பொருட்களை கையளித்தார். ஏழு லொறிகளில் இந்தப் பொருட்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நல்லவிடயம் பிள்ளையான் அவர்களே. அப்படியே கருணாவுடன் உங்களுக்குள்ள பிணக்குகளையும் தீர்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள். அப்போது தான் மக்களுக்கும் உங்கள் மீதும் ஒரு நம்பிக்கை வரும். இல்லையேல் பழைய புலியாகவே நீங்கள் என்றும் மக்கள் பார்வையில்.

    Reply