இனப்படுகொலையை தடுக்கக் கோரி மலேசியாவில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

0802-raja.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்வர வேண்டும், முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஈழத்தைச் சேர்ந்தவர் ராஜா. 27 வயதாகும். இவர் கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த  சம்பவம் நடந்துள்ளது. உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டைரி, ஒரு பர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, இலங்கை ராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம். தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய போலீஸார் மீட்டுள்ளனர்.

அதில் ராஜா கூறியிருப்பதாவது …

எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன். எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் நான் ஈடுபட்டேன்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே அமைதித் தூதர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும். எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • bala
    bala

    /எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன். எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.?/
    தம்பி நீர் கரும்புலி. அதாலதான் தற்கொலை செய்து கொண்டீர்!!

    Reply
  • uma
    uma

    இத் தீக்குளிப்பு தற்கொலைகளை அங்கீகரிக்கக் கூடாது இவைகள் கண்டிக்கப்பட வேண்டும்

    Reply
  • palli
    palli

    ராஜா உமது போராட்டத்தால் சம்பந்த பட்டவர்களுக்கு எந்த அளுத்தமும் இல்லை. இருப்பினும் நீர் இருந்திருந்தால் உமது குடும்பத்துக்காவது விடுதலை கிடைத்திருக்கும். உயிரின் அருமை தெரியாது வியாபாரம் செய்யும் புலிகளுக்கோ அல்லது இறக்குமதி செய்யும் அரசுக்கோ
    இப்படியான போராட்டங்கள் வேடிக்கையாகி விட்டது. ஆகவ்வே ஆககூடிய உணர்ச்சியும் மனிதர்களை சிந்திக்கவிடுவதில்லை என்பது உன்மைதானோ?

    Reply
  • thambi
    thambi

    இன்னுமொரு முட்டாள் கரும் புலி மலேசியாவிலும் தமிழர்களின் மரியாதையையும் மானத்தையும் வாங்கி விட்டான்

    புலிகளின் குரல் இனிமேல் இப்படித்தான் இருக்கப்போகிறது உலகம் முழுக்க புலிகள் இனிமேல் இதைத்தான் செய்விக்கப் பொகிறார்கள் தம் இனத்தைஅழித்தத மட்டுமல்ல உலகம் முழவதும் எமது இனத்தின் மானத்தை கெடுக்கிறார்கள் கெடுவான் கேடு தான் நினைப்பான்

    புலி தான் தனத கடைசிக்காலத்திலும் சர்வதேச மனித சட்டங்களைமீறும் செல்களை செய்வது கேவலத்திலும் கேவலம் கடந்த கிழமை 13வயது குழந்தையை தற்கொலை செய்ய அனுப்பியது எவ்வளவு கேவலம் வெளிநாட்டிலுள்ள புலிப்பினாமிகள் இதைஒத்துக் கொள்கிறார்களா?

    Reply
  • kamal
    kamal

    முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா…..
    முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது………..
    http://thesamnet.co.uk/?p=7111

    /அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதி நார்வே அமைதித் தூதர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும். எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும்/
    முத்துக்குமார் கடிதம் போல் ராஜா கடிதமும் அவரை காட்டிக்கொடுத்து விட்டது

    Reply
  • palli
    palli

    தற்கொலையாளிகள் கூட எம் தேசத்திடம் இருந்து தப்ப முடியாதபோது இந்த அமைப்புகளோ அல்லது மிருகங்களோ எப்படி தப்பமுடியும். ஆகவே எழுதால் மட்டுமே பலரது முகம் மக்களுக்கு அம்பலம். இதை நம்தேசம் சலிப்பின்றி தொடர்வது பல்லியும் தேசத்தின் வாசகன் என்பதால் மகிழ்ச்சி.

    Reply
  • SUDA
    SUDA

    என்னது ஒபாமா இலங்கைக்கு போகனுமா? அதுவும் கூடவே வை.கோவும் போகனுமா? டையரிய வை.கோவுக்கிட்ட ஒப்படைக்கனுமா? அவராலதான் உம்மிட விருப்பத்த நிறைவேற்றி வைக்க முடியுமா?
    அடக்கடவுளே தம்பி நீ இப்படி கடிதம் எழுதி வைச்சிட்டு செத்தா என்னத்த உம் குடும்பத்துக்கு செய்யிறதா வை.கோ வாக்குறுதியளிச்சவர்? தம்பி நீ அவசரப்பட்டுட்டாப்பா. காசு கொடுத்து தனக்கே மாலை போட வைக்கும் பட்டாசு கொளுத்த வைக்கும் கட்அவுட் கட்டவைக்கும் வை.கோ போன்ற அரசியல்வாதிகளுக்கெல்லாம் இது ரொம்ப சகஜம்பா.

    Reply
  • Mr. Cool
    Mr. Cool

    சென்னை திருவெற்றியூரில் அமரேசன் என்பவர் இன்று மாலை தீக்குளித்தார். ஈழத்தமிழருக்காகத் தீக்குளித்தாரா என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் அமரேசன். இவருக்கு வயது 60. இவர் திருவெற்றியூரில் கோழி கடை வைத்து நடத்தி வருவதாகவும், கடைக்கு அருகில் உள்ள மில்லிருந்து இன்று மாலையில் தீ பற்றியபடி ஓடி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றுவதற்கு முன் பெரும் தீக்காயங்களுடன் அவர் உரியிழந்தார். ஈழத்தமிழர்களுக்காகத்தான் இவர் தீக்குளித்தார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அவர் கைப்பட எழுதிய கடிதம் எதுவும் சிக்கவில்லை. மேலும் அவர் தீக்காயங்களுடன் ஓடிவந்தபோது எந்த கோஷமும் எழுப்பவில்லை. எனவே அவருடை மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சீர்காழி ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சென்னையில் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Reply