உணவு நிவாரணப் பொருட்களும் விநியோகம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இருந்து யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மிருசுவில் றோ.க.பாடசாலை , மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மடம், புனித நீக்கிலார் ஆலய வளாகம் என்பவற்றில் தங்கியுள்ள 333குடும்பங்களைச் சேர்ந்த 1313 பேரையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அதி. வண தோமஸ் சவுந்தர்நாயகம் மற்றும் குருமார் சந்தித்து ஆறுதல் கூறினர். யாழ். ஆயர் இல்ல நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உடுபுடைவைகள் , சமையல் பாத்திரங்கள் , உணவுப் பண்டங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல யாழ். ஆயர் இல்லத்தை சூழவுள்ள பங்குகளைச் சேர்ந்த மக்கள் சமைத்து வழங்கிய உணவுப்பொதிகளும் எடுத்துவரப்பட்டு இந்த அகதிகளிடம் கையளிக்கப்பட்டன. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தாங்கள் அனுபவித்து வந்த துன்பமான நிகழ்வுகளை கண்ணீர் மல்க ஆயரிடம் கூறினார்கள்.
இவர்களுக்கு தம்மால் இயன்றவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயர் கூறினார். குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் தருவதாகவும் ஆயர் கூறினார். ஆயர் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன் சிறு வழிபாடும் இடம்பெற்றது. மிருசுவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு 15 மைல் தூரத்தில் இருந்து தாம் கால் நடையாகவே இங்கு வந்ததாக தெரிவித்தனர
ramesh
உதவி செய்யப்போகும் ஆயர் உடனே பூசை என்று தமது சமயத்திற்கான ஆட்சேர்ப்பையும் இந்த நேரத்தில் தவறாமல் செய்துவிடுவார்கள் இவர்கள் செய்யும் உதவியிலும் மதமாற்றம் கலந்து விடும்.
palli
இது தற்ப்போது தேவையா?? ரமேஸ்.
ramesh
அதைத்தான் நானும் சொல்லுறன் பல்லி