சுமார் மூன்று தசாப்த காலமாக செயலிழந்துபோயுள்ள யாழ் குடாநாட்டுக்கான ரயில் சேவையை இந்தியவின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளில்; சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து உரிய தரப்பினருடனும் கலந்துரையாடி வரும் அமைச்சர் இதற்காக இந்தியாவின் உதவிகளையும் நாடியுள்ளார்.
வெகுவிரைவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் மூலம் யாழ் குடாநாட்டு மக்களும் ஏனைய பிரதேச மக்களும் பாரிய நன்மைகளை அடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
palli
அந்த புகைவண்டிக்கு என்ன பெயர் வைப்பதாக உத்தேசம். மகிந்தா தள்ளுவண்டியா? அல்லது பட்ச்சா குடும்ப தொடர் வண்டியா? எதுசெய்தாலும் மகிந்தாவை சந்தோசபடுத்த மறக்கமாட்டீர்கள். அதனால்தான் கேட்டேன்.
தோழரின் கவனத்துக்கு…..
வன்னியை மகிந்தா புலியிடம் இருந்து தங்களுக்கு வேண்டி தந்ததால் அவருக்கு சில மரியாதை உங்கள் பானியில் செய்யலாமே. உதாரனத்துக்கு….
வன்னி பட்ச்சா..
மகிந்தா குளம்..
மகிந்தா கிணறு..
மகிந்தா தெரு..
மகிந்தா பண்ணை..
மகிந்த வரம்பு….
மகிந்தா பாடசாலை..
மகிந்தா கோவில்..
மகிந்தா குட்டை..
மகிந்தா பரவை
மகிந்தா வேலி..
ம்ம் மகிந்தா புரம்..
இப்படிஒரு கோவிலை கட்டி கரடிபோக்கு சந்தியில் மகிந்தாவின் சிலையையும் வைத்து விட்டால் வருகிற போகிற தமிழருக்கு …………… வசதியாக இருக்குமல்லவா?? இதைவிட அந்த கோவிலுக்கு பூசை வைக்க அமெரிக்கா கண்டத்தில் இருந்தும் மணியடிக்க ஜரோப்பா கண்டத்தில் இருந்தும் பல வித்துவான்களை தெரிவு செய்யலாம். அதுக்கு பல்லியின் உதவி இந்த தேசமூலம் எப்போதும் இருக்கும். அதுசரி மகிந்தா முன்னேற்ற தமிழர் அமைப்பு என ஒன்று கொழும்பில் தொடங்கியதாக சில செய்திகள் அது உன்மையா??
mutugan
புகை வண்டிக்கு என்ன பெயர் வைத்தாலும் சரி . அதில் குண்டு வைக்க புலி இல்லாமல் இருந்தால் இப்போதைக்கு நிம்மதி என யாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லி உமக்கு தெரியுமோ? யாழின் குச்சொழுங்கைகளுக்குள் இலங்கை ஆமி ஒற்றை ஆளாய் தனியே ரோந்து போவது?
பகீ
“….அதில் குண்டு வைக்க புலி இல்லாமல் இருந்தால் இப்போதைக்கு நிம்மதி என யாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்…”
1983 ம் ஆண்டு கோண்டாவில் ஸ்ரேசனில வச்சு யாழ்தேவியை பெற்றோல் ஊத்தி கொழுத்தினது ஆரெண்டு தெரியுமோ?
santhanam
ஆமி வாறான் பலத்துடன் வாறான் தந்திரோபாயமாக மக்களும் நாங்களும் பின்வாங்குவோம் என்று 1995ம் ஆண்டு அன்ரன் பால அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இடப் பெயர்வு வடக்கு கிழக்கு அனைத்து தமிழனும் ஏதிலிகளாக அளைகிறார்கள் ஆனால் சிங்கள ஆமி தன்னால் மிதிக்கமுடியாத தமிழனின்முற்றம் வீடு எல்லாம் அவன் கால் படுகிறது இதற்கு யார் காரணம் பல்லி?
Julian
//1983 ம் ஆண்டு கோண்டாவில் ஸ்ரேசனில வச்சு யாழ்தேவியை பெற்றோல் ஊத்தி கொழுத்தினது ஆரெண்டு தெரியுமோ?//பகி
தெரியும் நல்லாத் தெரியும் கோண்டவிலில் ரெலோவை விட்டு விலகிய பின்பு ஒபரேய் தேவன் – ரெலா இரானுவம் தான் இதை செய்தது இதற்குப் பிறகு தைமாதம் 1985 17ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ரெலோ ரெயினுக்கு குண்டு வைத்து தகர்த்தது
இந்த ரெயில்வே தண்டவாளங்களையும் சிலிப்பர் கட்டைகளையும் புலிகள் எடுத்து தமக்கு பாதுகாப்பிற்கு பங்கர் கட்டடினார் பங்கர் தலைவர்
ரெலாவை- ரெலோவை புலிகள் தான் சுட்டுக் கொன்றது தெருத்தெருவாய் அன்று அலைய வெளிக்கிட்ட எமது சனங்கள் இன்றும் தெருத்தெருவாய் அலைய புலிகளின் வெற்றிகர பின்வாங்கல்கள் தொடருது
palli
//யாழின் குச்சொழுங்கைகளுக்குள் இலங்கை ஆமி ஒற்றை ஆளாய் தனியே ரோந்து போவது?//
இதுக்கு பெயர் ரோந்து அல்ல வேறு. ஆனால் எம்மின அவமானத்தை நான் சொல்ல விருமபவில்லை. ஆக யாழில் இருக்கும் ஆமிக்கு பயம்விட்டு போச்சு அப்படிதானே பகீ அதுவெல்லாம் சிலருக்கு தெரிந்தாலே தமிழர் நின்மதியாக வாழலாம். ஆனால் யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. தெரிந்தவர்களும் எமக்கேன் வம்பு என ஒதுங்கியிருப்பதும் சிலருக்கு கொண்டாட்டமே.
செல்லையா
இதுதான் எங்களுக்கு தேவை. நாங்கள் புலிகளின் தலைவன் பங்கருக்குள் இருக்கும் போது (நன்றாக ஆமை இறைச்சி சாப்பிட்டு கொழுப்பேறி இன்சுலின் ஏற்றிக் கொண்டு இருப்பதை) எந்த வழியும் இல்லாமல் சாபாட்டுக்கு தோட்டம் செய்ய முடியாமை போக்குவரத்தை தடைசெய்தது ஏன்? புலிகள் என்ன கண்டார்கள் மக்களிட்ம் எப்ப சரி பிரபாகரனால் வரமுடியுமா? அவை திண்டு கொழுக்க நாங்கள் சாப்பாடு இல்லாமல் சாகும் நிலைக்கு யார் காரணம்? ஏன் இப்படி புலிகள் செய்தார்கள் ? எங்களுக்கு இப்ப யாழ்தேவி ஓடவேணும் தோட்டம் செய்ய பொருட்டகள் வேணும் அப்பதான் சாப்பிடலாம்.
palli
//இதற்கு யார் காரணம் பல்லி?//
இதுக்கு புலிகள் காரணம் உன்மைதான். ஆனால் மக்கள் புலியை நம்ப்பி அல்லது அதுக்கு பயந்து மற்ற அமைப்புகளை ஒதுக்கியது காரணமல்லவா?? அல்லது இன்றய அரசுசார்ந்த அமைப்புகள் தமிழர் கேனையர்கள்தான். ஆமி என்ன வேண்டுமானாலும் செய்யலாமென பதவிக்காக போட்டிபோட்டு காட்டி கொடுப்பது காரணமல்லவா?? ஏன் நாம்(புலம்பெயர்தமிழர்) இங்கு வந்து பாதுகாப்பாக்கவும் வசதியாகவும் இருந்து கொண்டு மக்களை பற்றி கவலைப்படாமல் புலிக்கு உசுப்பேத்திக்கொண்டு இருப்பது ஒருகாரணம் இல்லையா?? அங்கே பசியால் அவதிப்படும் மக்களுக்கு பத்துரூபா கொடுக்க முடியாத நாம் புலிகேட்டால் பல்லாயிரத்தை கேள்வி இன்றி கொடுப்பது காரணமல்லவா?? ஆகவே தவறு அனைவரதும்தான். ஆனாலும் பாதிக்க படுவது என்னவோ மக்கள்தான்.
santhanam
அங்கே பசியால் அவதிப்படும் மக்களுக்கு பத்துரூபா கொடுக்க முடியாத நாம் புலிகேட்டால் பல்லாயிரத்தை கேள்வி இன்றி;…..
அனைத்து தரப்பினர் மீது பழியை போட்டு புலி தப்ப முனைகிறது 1987ம் ஆண்டு புலிகள் அனைத்து தரப்பினரிடம் இருந்து இந்தவிடுதலை போரட்டத்தை அபகரித்தது. ஆகவே விடுதலைபுலிகள்தான் இதற்கு முழுப்பொறுப்பும் பதில் சொல்லவேண்டும். புலி இந்த குண்டு வைப்பிற்கும் தமது நலன் சார்ந்தஅரசியலிற்கு அனைவரையும் பயன்படுத்தி பதவிக்காக போட்டிபோட்டு காட்டி கொடுப்பவர்களையும் பயன்படுத்தியது. இதற்கு என்னபதில்
accu
அன்பின் பல்லிக்கு, உங்கள் நகைச்சுவை உணர்வுடன் கூடிய ஆதங்கங்களை மதிப்பவன் நான். எல்லாத்தையும், எல்லோரையும், எதிர்மறையாக நோக்கும் நீங்கள் இன்றைய சூழலில் யார்? எதை? எங்கே? ஏன்? எப்படி? செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம் என்று உங்களால் முடிந்தவரை விளக்கிச் சொன்னால் நாமும் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிய ஏதுவாக இருக்குமல்லவா? உதாரணத்திற்க்கு டக்கிளஸை உங்களுக்குப் பிடிக்காது அது எனக்கு நன்கு தெரியும் அதற்க்காக யாழ்குடாநாட்டு மக்களுக்கு மிக அத்தியவசியமான புகையிரத சேவையை அவர் தொடங்கக்கூடாதா? அப்போ எமது மக்களின் தேவைகளை யார் கவனிப்பது? ஈ பி டி பி யினரும் கொலை மற்றும் மனித உரிமை மீறல் எல்லாம் செய்தவர்கள்தான் எமது நாட்டில் எவருமே அதற்க்கு விதிவிலக்கல்ல. அவர்களைக் கேட்டால் தம்மை அழிக்க முனைந்தவர்களையும் அதற்குத் துணை போனவர்களையுமே தாம் அழித்ததாக கூறுகிறார்கள்.[இது எனக்கு ஒரு ஈ பி டி பி உறுப்பினர் கூறியது] ஆனால் போன மாதம் யாழ்ப்பாணம் சென்று வந்த என் நண்பர் ஒருவர்[எந்த அரசியல் சாயமும் பூசாதவர்] கூறினார். யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு டக்கிளஸ் நிறைய நன்மைகள் செய்வதாக அம் மக்கள் கூறியதாகவும், அவரை சந்திப்பதற்க்கு மக்கள் எந்நாளும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும். இது அரசியல் லாபம் கருதியென்றிருந்தால் கூட அவலநிலையில் உள்ள மக்களுக்கு நன்மை கிடைப்பது போற்றப்பட வேண்டியதில்லையா?
இங்கே நான் ஒருவரை பற்றி கூற விரும்புகிறேன். பொன்.சிவபாலன் யாழ் மேயராக இருந்து புலிகளின் குண்டுக்குப் பலியானவர். எனது மிக நெருங்கிய நண்பர், தமிழுணர்வு நிறைந்தவர், எழுபதின் கடைசிகளில் என் நண்பரானவர், அப்போ அவர் சட்டக்கல்லூரி மாணவர். இன்றும் என் மனதை விட்டகலாத ஒரு நிகழ்ச்சி அவரும் நானும் வேறு நண்பர்களும் யாழ் சிறீதர் தியேட்டரில் இரண்டாவது ஷோ படம் பார்த்து விட்டு பலாலி வீதியால் வந்து கொண்டிருக்கிறோம் ஆரியகுளம் சந்தியில் இரண்டு சிங்களப் பொலிசார் லைற் இல்லாமல் போவோருக்கு இருட்டில் நின்று வெளுக்கிறார்கள். எமக்கு முன்னால் போனோர் சைக்கிள்களை போட்டுவிட்டு சிதறி ஓடுகிறார்கள். சிவபாலன் திடீரென தன் சைக்கிளை போட்டு விட்டு சிங்களத்தால் ஏதோ கத்தியபடி பொலிசை நோக்கி நடக்க பயந்து ஓடியவர்களும் இப்போ பொலிசை நோக்கி திரும்பி வர பொலிசார் பயந்து ஏதோ மென்மையாக சொன்னபடி தமது சைக்கிளில் அந்த இடத்தை விட்டு மாறிவிட்டார்கள்.[இது நடந்தது 78ல் என்று நினைக்கிறேன்] பின் எண்பதின் தொடக்கத்தில் நான் நாட்டை விட்டு வெளியேற சில வருடங்களில் அவருடனான தொடர்பும் அற்றுவிட்டது. பின் அவர் மேயரானது அதைத் தொடர்ந்து அவரின் மரணம் எல்லாம் செய்திகள் மூலம் அறிந்ததுதான். பின் எமது நண்பர் ஒருவருடன் பேசும் போது சொன்னார் தான் சிவபாலன் மேயராக இருக்கும் போது அவருடன் கதைத்ததாகவும் அவர் தான் ஏற்றிருக்கும் பதவியின் ஆபத்தை அறிந்திருந்ததாகவும் ஆனாலும் எல்லோரும் பயந்து ஒதுங்கினால் யார் மக்களின் தேவைகளை கவனிப்பதென்று கேட்டதாகவும் சொன்னார்.[தேசத்தின் ஊடாக இதை எழுதியதின் மூலம் என் இனிய நண்பன் சிவபாலனுக்கு அஞ்சலி செலுத்தியதான ஒரு மனநிறைவு]
பல்லி நாங்கள் மீண்டும் விசயத்துக்கு வருவோம். இனி மகிந்தா, இவர் நல்லவரா? [அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது அதுவும் இலங்கை அரசியல் சான்ஸே இல்லை]அல்லது கெட்டவரா? [நல்லவர் இல்லையென்றால் கெட்டவர்தானே! கெட்டவராய் இருந்தால் சமாளிக்கலாம் கேடுகெட்டவராய் இல்லாவிட்டால் சரி.] இந்தக் கேள்விக்கு நான் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஏனெனில் மகிந்தா பதவிக்கு வரும் போது மற்ற நாடுகளின் தலைவர்கள் போலன்றி மிகப் பலம்வாய்ந்த, இதற்க்கு முன் இருந்த ஜனாதிபதிகளின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த, தமது வல்லமையை இந்தியாவிலேயே நிரூபித்துக் காட்டிய, இலங்கையின் எந்த மூலையிலும் தமது குண்டுகளை வெடிக்கவைக்கக்கூடிய, உலகில் எந்த தீவிரவாத இயக்கங்களும் கற்ப்பனையே பண்ணமுடியாத சாகஸங்களை புரிந்து காட்டிய, அதீத பணபலம் கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளை அல்லவா எதிர் கொள்ளவேண்டியிருந்தது. இந்நிலையில் சமாதான தீர்வுகளில் எந்தவித நாட்டமும் அற்ற புலிகள் அரசை வலிந்து போருக்கு இழுத்த நிலையில் அந்தப் போருக்கு முகம்கொடுக்க வேண்டிய அரசு மென்மையாக, கண்ணியமாக நடக்குமென எதிர்பார்க்க முடியுமா? அரசின் மனித உரிமை மீறல்களை நான் நியாயப்படுத்தவில்லை. இது கொசோவா,ஈராக்,செச்சினியா,ஆப்கானிஸ்தான், என எத்தனையோ உலக நாடுகளில் நாம் காணும் போர் யதார்த்தம். நாளை புலிகள் ஒடுக்கப்பட்டு அதன் பின்னரும் தமிழர் நசுக்கப்பட்டால் மகிந்தாவின் உண்மை முகம் தெரியும். அவருடன் ஆதரவாக இருக்கும் தமிழ்க்கட்சிகளையும் அறியமுடியும். இது என் தனிப்பட்ட கணிப்பு. இது முற்றிலும் தவறாகவும் இருக்கலாம். பல்லி உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி.
mutugan
கூல் டவுன் நண்பர்களே.முதலில் றெயின் ஓடட்டும். பாதை திறக்கட்டும் .யாழில் தெரிந்தவரோ சொந்த பந்தமோ இருந்தால் கதைத்துப் பாருங்கள்-ஏ9 ற்காக ஏங்கிப் போய் சனம் கிடப்பது புரியும்.
palli
அச்சு; பல்லியின் எழுத்தை படித்து ரசித்து அதில்உள்ள தவறையும் சுட்டி காட்டியதுக்கு நன்றி.
தோழரும் நானும் நண்பர்கள்தான். அதனால் அவரை பிடிக்காது என தங்கள் கருத்து சரியல்ல. நான் ஏற்க்கனவே சந்திரன் ராஜாவுக்கு பின்னோட்டம் விடும்போது எனக்கும் தோழருக்கும் என்ன நட்ப்புஎன சொல்லியுள்ளேன். நான் தோழரை நேசிப்பவனும்கூட காரனம் தமது உயிரை பற்றி கவலை படாமல் பலதாக்குதலுக்கு பின்னும் அவர் தொடர்ந்து அரசியலில் இருப்பது பாராட்ட வேண்டிய விடயம். ஆனால் அதுக்காக அவர் செய்யும் தவறை சுட்டி காட்டாமல் இருக்க முடியுமா? புகைவண்டி விடவேண்டியது அவசியம்தான். அனால் அதுக்கு இது நேரமல்ல. உங்கள் வாதபடி புலியிடம்இருந்து மக்களை அரசு விடுவிக்கும். ஆனால் அவர்களை புலியை விட அரசு துன்புறுத்தும் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆகையால் மக்களை அரசிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இவர்களுக்கு வேண்டாமா?? என்ன செய்யலாம். இது பல்லிக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் தெரிந்ததுதான் ஏன் தாங்களே 8ம் தேதி விட்ட பின்னோட்டத்தில் மிக அருமையான ஒரு அவ்சிய நிலைபாட்டை சொல்லியிருக்கிறியள். அதேபோல் பார்திபன் கருத்தும் உள்ளது. மக்களை இரு மிருகத்திடம் இருந்தும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து அமைப்பும் கருத்து முரன்பாடின்றி சர்வதேச உதவியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். அதே போல் புலிகளிடம் இருந்து ஆயுதம் சர்வதேசம் வேண்டி அவர்களுக்குரிய பாதுகாப்பை சர்வதேசம் உறுதி செய்ய வேண்டும். இவைகளை பல முறை முயற்ச்சி செய்யும்படி தோழரிடம் மட்டுமல்ல சங்கரியர் மற்றும் அமைப்பிடமும் நட்ப்பு ரீதியாக சொல்லிவிட்டோம்.
பல்லி தேசத்தில் எழுதும் போது உறவுகளை பற்றி சிந்திப்பதில்லை. உடகத்தால் எதுவெல்லாம் தட்டி கேக்கமுடியுமோ அதுவெல்லாம் எழுதுவேன். அதேவேளை தோழரை பல்லி பல முறை பாராட்டிய பின்னோட்டம் அச்சு பார்க்கவில்லபோல் உள்ளது. ஜனாதிபதியின் பலம். இதை பலம் என சொல்ல முடியாது.(புலிகளின் இழப்புக்கு பல காரணம் அதை பின்பு பார்ப்போம்.) மகிந்தாவும் ஒரு பிரபாகரந்தான். உயிர் அருமை தெரியாதவர். எப்படி புலிகள் கொலை கொள்ளையுடன் வீர நடை போட்டார்களோ. அதேபோல்தான் இவரது செயல்களும். புலிகளை அழிப்பதால் இவர் திறமையானவர் என்பது சரியல்ல. இவர் சிறிய சதாமுஸையிந்தான்.
சிவபாலன் எனக்கும் மிகநெருங்கிய நண்பர் 1996ல் அவர் இங்கு வந்து எம்மோடு சில விடயங்களை பேசியபோது நாம் அதனால் வரும் விளைவுகளை அவருக்கு எடுத்து சொன்னோம். அதை அவர் ஏற்க்கவில்லை. புலிகள் தன்னை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நான் அவர்களுடன் மல்லுகட்ட போகவில்லை. மக்களுக்கு சேவை செய்யதான் போகிறேன் என சொன்னார். இருப்பினும் அவரோடு தொடர்பு கொள்ளும் போதெல்லாம் புலியின் ரத்தவேடையை சொல்லிய வண்ணமே இருந்தோம். ஆனாலும் அவர் இந்த மிருகத்திடம் இருந்து தப்பமுடியாமல் போனது தமிழரது சாபகேட்டில் ஒன்று. இதை அவரது நினைவு கட்டுரையில் கூட பல்லி எழுதியுள்ளது.
எமது கருத்தை பயப்பிடாமல் சொல்ல இந்ததேசம் எமக்கு கிடைத்த மிக பெரிய சொத்து. ஆகவேதான் இதில் யார் தவறு செய்தாலும் விமர்சிக்க பலர் தயங்குவதில்லை. அதனால் பல வெற்றிகளையும் தேசம் சாதித்துள்ளது. இதில் தேசம் ஆசிரியர்களைகூட நாம் விமர்சித்ததை தேசம் தணிக்கையின்றி வெளியிட்டதை பல்லி இங்கே நினைவூட்டுகிறது.
தொடரும் பல்லி