ராதா படையணி – பிரபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைமையகம் படைவசம்

udaya_nanayakkara_.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    இம்சை அரசனை (23ஆவது புலிகேசி) தோற்க்கடித்து விட்டார். எமது மே த கு தேசிய தலைவர் புறமுதுகு காட்டுவதில் என போலகிடக்கு.
    இந்த ஓட்டமும் தலைவரின நேரடி கண்காணிப்பில்தான் நடக்குதோ. அல்லது அவரது ஓட்டத்தை பார்த்து ராதா படையணி பின்நகருகுதா??

    Reply
  • santhanam
    santhanam

    நீங்கள் நினைக்கிறமாதிரி மேதகு காளைவாருகிறார் ஏன் என்றால் இன்று விடுதளைபுலிகள் வெளியிட்ட படம் இல்லாத ஆயுத விபரம்.

    Reply