“விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யு எஸ் ஜரோப்பிய ஒன்றியம் யப்பான் நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள்”

BBC NEWS: 03 FEB2009

விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யுஎஸ், ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் மிக குறைந்தளவிலான தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தமது இறுதி யுத்தத்தை செய்யும் இவ்வேளையில் இலங்கை அரசு இலகுவாக இராணுவரீதியாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள இந்த வேளையில் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கடைசித் துண்டு நிலத்தில் உள்ள 250 000 மக்களையும் போராளிகளையும் மனித அவலங்களிலிருந்து தவிர்க்கும்படி கேட்டுள்ளது. இந்த வேண்டுகோளில் அந்தப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் கவனத்திலேயே இந்த மேற்குறிப்பிட்ட நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் இந்த நாடுகள் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அரசினால் அளிக்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமபடியும் இலங்கைத் தமிழர்க்கான இறுதியான அரசியல்த்தீர்வை எட்டும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள ஒரே ஒரு மருத்துவமனை கடந்த சில தினங்களாக பல தடவைகள் மோட்டார் தாக்குதலுக்குள்ளாகி பலர் இறந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.

இக் கூட்டறிக்கையில் இரு தரப்பினரம் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து செயற்ப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கு தாம் பொது மக்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விலகிப்போகும்படி கேட்டுக் கொண்டதாயும் அவர்கள் அப்படிபோக முடியாததிற்கு தாம் பொறுப்பில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் தொடர்ந்து குறுகிய வண்ணமே உள்ளது. ஆயுதபாணிகள் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதும், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என யுஎஸ் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இந்த கூட்டறிக்கையில் முன்னைய பேச்சுவார்த்தகைளில் நோர்வே மத்தியஸ்த்தம் வகித்து செயற்ப்பட்டபோதிலும் அரசுக்கும் – புலிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தை பயனளிக்காது போனதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to SUDA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • SUDA
    SUDA

    அடக்கடவுளே இதுக்குப் பிறகும் …..
    இந்த இராணுவ நடவடிக்கை யாரின் ஆசீர்வாதத்துடன் நடக்குது? ஏன் இந்த யுத்தம் தொடர்பாக சர்வதேசம் எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை? அவர்கள் விரும்புவது என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடை இன்னும் எங்கட சனங்களின்ர மண்டையில உறைக்கல்லையென்டா எங்கட சனங்களின்ர அவலங்கள் சோமாலியா ஈராக் ஆப்கான் மக்களது நிலைமையப்போல பேப்பரில ஒரு துண்டுச் செய்தியா முடிஞ்சு போறத்த யாராலையும் தடுக்க இயலாது.
    இதற்கான முழுப்பலியையும் பாவத்தையும் புலிக்கு பால்(எண்ணெய்) வார்த்துக் கொண்டிருக்கின்ற புலம்பெயர் எஜமானர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    Reply
  • புரியாதவன்
    புரியாதவன்

    /இதற்கான முழுப்பலியையும் பாவத்தையும் புலிக்கு பால்(எண்ணெய்) வார்த்துக் கொண்டிருக்கின்ற புலம்பெயர் எஜமானர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்./— சரியாகச் சொன்னீர்கள்!, மகாபாரதத்தில், திரெளபதி கையை உயர்த்தியமாதிரி, காட்சிப் பொருள்களாக விட்டுச் செல்லும் அமைப்புக்களைப் பார்த்தால், சாட்சிக்காரர்களைவிட, சண்டைக்காரர்கள் தேவலாம் என்று எண்ணுகிறமாதிரி தெரிகிறது.

    இரு தரப்புமே, வெளிப்படையான, அவமானகரமான, சரணடைவுகளை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆகையால், திரைமறைவில் ஒரு ஒப்பந்தத்தை நடத்தி, அதை “போர் நிறுத்தமாக” இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, வெளியே கொண்டு வரலாம்.

    Reply