இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர் கள், மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு- “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை” என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
palli
ஜயா தங்கள் அறிவுக்கு எமது ஈழத்து பிரச்சனை போதாது என நினைக்கிறேன். ஆகவே தாங்கள் தமிழரை குழப்பாமல் இருப்பது தங்கள் ஆட்ச்சி தொடர உதவும்.
பகீ
சீமான், அமிர், திருமாவளவன், வைகோ , கொளதூர்மணி…எல்லாரையும் உள்ளுக்கு போட்டு பார்த்தார்,
ஆசுப்பத்திரியில ஒளிச்சு இருந்து பார்த்தார், பள்ளிக்கூடங்களை மூடிப்பார்த்தார், முழு அடைப்பு சட்டவிரோதம் எண்டெல்லாம் சொல்லி ”தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் ” நடத்தப்போறார் போல கிடக்கு! இபதானே விழங்குது தமிழினத்தலைவரின்ர சாணக்கியத்‘திட்டம்’ இப்பிடி எல்லாரைஉம் உள்ளுக்கு தூக்கிப்போட்டு “இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது ‘ எண்டு!!!! வாழ்க கலைஞர்!!!
கனிமொழி எல்லாரையும் எழுச்சி கொள்ளச்சொல்ல இவர் எழுச்சி கொண்ட ஆக்களை உள்ளுக்கு போட்டதை மறக்காதையுங்கோ.
Anonymous
இவர் ஏதாவது செய்வார் எண்டு பட்டி-தொட்டிச் சனங்கள் நம்பியது போய் சனம் தானாகவே திரண்டு பட்டணம் வரை வந்து நிக்குது. இவர் இனித்தான் பட்டி-தொட்டியில சனத்தை திடரட்டப்போகிறராம். செத்தவன் சரியாத்தான் சொல்லிப்போட்டு செத்திருக்கிறான். ‘தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான் என்றார்..இப்பதானே தெரியுது இவர் எவ்வளவு தேன் எடுத்திருக்கிறார்” என்று என.
பாவம் மனிசன் தன்க்குப்பிறகு ஆட்சியில மகன்களை பாக்கிறதா..மகளை பாக்கிறதா..பேரன்மாரை பாக்கிறதா
palli
பகி நாம் அரசியலைவிட அனுபம் வாய்ந்தவர்களல்லவா? ஆகவே இவர்களது தில்லுமுல்லைவிட எமது மக்களுக்காகஏதாவது நமது தேசத்துக்கு இந்த தேச மூலம்செய்ய முற்படுவோம். அப்புறமா இந்த புலியோ புழியோ பாத்துக்குவோமே. இது ஆள் சேர்பல்ல என்னை விட தங்களுக்கு அனுபவம் என்னும் ஆதங்கமே. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.