இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன். அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Show More
Leave a Reply to sivan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • sivan
    sivan

    உங்கட தமிழ் நாட்டில் உங்கட வீட்டுப் பிரச்சினை, காதல்ப் பிரச்சினை, காசு கடன் பிரச்சினை எல்லாத்தையும் தமிழீழப் பிரச்சினையாக்கி உயிர் கொடுத்து தீர்க்கிறீர்கள். சிலவேளை முதல்வர் கருணாநிதி 2லட்சம் தருவார். இதுவும் ஒரு பிழைப்பாய் போய்விட்டது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Thatstamil இணையத்தில் வந்த வாசகர் கருத்தொன்றை இங்கே இணைக்கின்றேன். அவரது கருத்து புறந்தள்ளக் கூடிய ஒன்றாக எனக்குத் தெரியவில்லை. தேசம் வாசகர்களுக்காக.

    “வைகோ உட்பட சில அரசியல் வாதிகள் முத்துக்குமரன் என்ற அப்பாவியை தமது அரசியல் இலாபங்களுக்காக தீக்குளிக்க வைத்துள்ளனர். இதுதான் உண்மை. முத்தக்குமரன் இறுதியாக வசித்து வந்த இடம் கொளத்தூர் அதாவது கொளத்தூர் மணியின் இடம். அதுபோல் முத்துகுமரன் பணியாற்றிய “ பெண்ணே நீ “ பத்திரிகை பாமக நிறுவனர் இராமதாசினுடையது. மிகுதியை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகின்றேன். எப்படியெல்லாம் அப்பாவிகளைக் கொன்று இவர்கள் அரசியல் நடத்துகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்“.

    Reply