இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் ஒத்திகைகளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் நான்காம்திகதி வரை கொழும்பில் முக்கிய வீதிகள் சில மூடப்படவுள்ளன. இதனால், கொள்ளுப்பிட்டி சந்தி முதல் செரமிக் சந்தி வரையான வீதி மற்றும் கொம்பனி வீதிச் சந்தி முதல் காலிவீதி வரையான வீதிகள் குறிப்பிட்ட நாட்களில் அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மூடப்பட்டிருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இவ்வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.