உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 2 கற்பழிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிறுமி ஒருவரை மர்ம கும்பல் கற்பழித்து கொன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினரின் 4 வயது குழந்தையுடன் வயல் வெளிக்கு சென்றார். சிறுமியின் தந்தை வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சிறுமியும், அந்த குழந்தையும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர். 04 வயது குழந்தையை அடித்து அங்கிருந்து விரட்டிய கும்பல் பின்னர் அந்த 15வயது சிறுமியை அவர்கள் கற்பழித்துள்ளனர். மேலும் கோடாரியால் வெட்டி அவரை கொலை செய்தனர்.
கும்பலால் தாக்கப்பட்ட 04வயது குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறினாள். உடனே ஊர் மக்கள் அந்த பகுதிக்கு திரண்டு சென்றனர். ஆனால் சிறுமியை காணவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தூரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
செய்தி – மாலைமலர்