உலகின் 50 நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ் பரவல் தற்போது 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியகொரோனாவைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும்கொரோனாவைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்று பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகைகொரோனாவைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இது எதிரொலித்துள்ளது.
உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.