தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.
ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
இருப்பினும் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து இலக்குகளையும் இழந்து இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 60 ஓட்டங்களையும் கசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றதே அதிகமாக காணப்பட்டது. ஏனைய வீரர்களுள் 07 பேர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணி பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 6 இலக்குகளை கைப்பற்றினார். முதலாவது இனிங்சுக்காக தொடர்ந்து ஆடிவரும் தென்னாபிரிக்க அணி 48 ஓட்ங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.