இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பொக்ஷிங்டேய் டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அவுஸ்திரேலியா, விரைவில் இழந்தது. லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் சீரான இடைவெளியில் இலக்குகள் சரிந்ததால், அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும் லபுசாக்னேவும் 48 ஓட்டங்களும் எடுத்திருந்தமையே அதிகபட்சமாக காணபபட்டது.
இந்தியா தரப்பில் பும்ரா 4 இலக்குகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 இலக்குககள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ஓட்மெதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு இலக்கு இழப்பிற்கு 36 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இந்தியா அவுஸ்திரேலியாவை விட 159 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. ஷுப்மான் கில் 28 ஓட்டங்களுடனும், புஜாரா 7 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.