இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன்.
98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராபின் மெய்யன்
இந்திரா காந்தி அம்மையாரின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பல பதவிகளை வகித்தவர். துணை ஜனாதிபதியாகவும், பின்பு ஜனாதிபதியாகவும் உயர்வதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளும் டெல்லி அரசியல் வட்டாரத்திலும் தென்னிந்தியப் பிராமணாளுக்கு இருந்த செல்வாக்கே காரணமன்றித் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவல்ல. முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் தனது கைக்குள் வைத்திருந்த திறமையால் இது சாத்தியமாயிற்று.பாரதிராஜாவின் “வேதம் புதிது” படம் பிராமணாத்துப் பையனைக் கருவாடு தின்னிகள் வீட்டில் வளர்வதாகக் காட்டியதில் கோபம் கொண்டு, தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் (தவறாக) பயன்படுத்தி தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டார். இப்படி இன்னும் பல…
எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பும் இந்திரா காந்தி அம்மையாரின் விருப்பத்திற்கு எதிராக இருந்தார் என்ற அபிப்பிராயமும் உண்டு. தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்த போதிலும், ஈழத் தமிழருக்கான மக்களாதரவு அதியுச்சத்தில் இருந்த வேளையிலும்கூட, அவர்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தைகூடப் பேசாதவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பொமாக..