வடக்கு வசந்தத்தின்மூலம் மீண்டும் அந்த பிரதேசத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகின்ற மக்களுக்காக 3 நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்
அந்த கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் குறைவின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நெலுக்குளம் மெனிக்பாம் மற்றும் ஓமந்தை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள நிவாரண கிராமங்களை அண்மித்தவகையில் தபால் நிலையம் வங்கி கூட்டுறவு நிலையம் சதோச காரியாலயம் என்பவற்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.