சூரிய கிரகணம் இன்று (26ம் திகதி) பிற்பகல் 1.59 மணி முதல் மாலை 4.10 மணிவரையும் இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் – சி- கிளார்க் நிலைய ஆலோகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.
வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகளைக் கொண்டோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ணப்புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர் இவ்வாறு சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் பார்வை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அதேநேரம் சூரிய கிரகணத்தை மொரட்டுவ, கட்டு பெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும், விசேட நிலையத்திலிருந்த படியும், இப்பாகவமுக மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி காட்டியகத்திலிருந்த படியும் பார்க்கலாம்.
அத்தோடு www.actimt.ac.lk என்ற இணை முகவரி ஊடாகவும் பொருத்துனர்கள் (Welders) பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடிகளை பாவித்தும் இதனைப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.