உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். இன்னும் முன்று விக்கெட்டுக்களைப் அவர் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக கூடிய விக்கெட்டக்களை கைப்பற்றிய வீரர் இவராகத் திகழ்வார்.
37 வயதான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராகவும் திகழ்கிறார். 125 டெஸ்ட் போட்டிகளில் 769 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு ஜாம்பவானாகத் திகழ்கின்றார். ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முரளிதரன் 2ஆவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக (24)நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.