LPL 2020 எட்டாவது போட்டி நேற்றைய தினம் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் கண்டிடஸ்கர்ஸ் இடையே நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆரம்ப வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கிய போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 38 பந்துகளில் 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் திஸரபெரரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்டத்தை வலுப்படுத்திதினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் 185 ஓட்டங்களை பெற்றது. கண்டி சார்பாக பந்து வீச்சில் நவீன்- உல்-க 03 இலக்குகளையும் குணரட்ணே 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.
186 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி சார்பாக சிம்பாவே அணி வீரர் ப்ரெண்டன்டெய்லர் 46 ஓட்டங்களையும் குணரட்னே 31 ஓட்டங்களையும் பெற்றமையே அதிகமாக காணப்பட்டது. ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டத்துடனேயே ஆட்டமிழந்து போயினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து கண்டி அணி 131 ஓட்டங்களை மட்டுமே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. ஜஃப்னா சார்பாக பந்து வீச்சில் உஸ்மன்-சின்வாரி 03பந்துப்பரிமாற்றங்களில் 03 இலக்குகளையும் திஸரபெரரா 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர பெரரா தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தன்னுடைய முதலிடத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது .