இலங் கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பிலிருந்து விசேட விமானமொன்றில் திருகோணமலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கும் யசூசி அகாசி பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.