இலங்கை சட்டக்கல்லூரி 2010 ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 2000 ஆம் ஆண்டும் அதற்கு பின்னரும் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த (பழைய பாடத்திட்டமாயின் 4 பாடங்கள்) சட்ட கல்விப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுடன் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியிலும் தமிழ் அல்லது சிங்கள மொழியிலும் திறமைச் சித்தி பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரி விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதிவரை அலுவலக நேரத்தில் சட்டக்கல்லூரியில் பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அத் திகதிக்கு முன்னர் அதிபர், இலங்கை சட்டக் கல்லூரி, கொழும்பு12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரிகள் 2009 ஜுன் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள அனுமதிப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.