தென் கிழக்கு பல்லைக் கழகத்தின் 5 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு விழாவில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சூழல் கற்கை நெறியில் முதுநிலை பட்டத்தை நிறைவு செய்து கொண்ட 5 பட்டதாரிகளுடன் 75 விஞ்ஞான பட்டதாரிகளும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 70 பட்டாரிகளும், கலை கலாசார பீடத்தில் 138 பட்டதாரிகளும் அரபு மொழி பீடத்தில் 2 பட்டதாரிகளுமாக மொத்தம் 285 பேர் பட்டமளித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.