காங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
accu
வீரமணி ஐயா அவர்களே! பெரியாரால் தொடக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவராக இருக்கிறீர்கள் பகுத்தறிவுக்குப் பெயர் போன அப் பெரும் தலைவரின் வாரிசாகக் காட்டிக்கொள்ளும் நீங்கள் ஏன் இப்படி அறிவுக்கு ஒவ்வாதவாறு கதைக்கிறீர்கள். மும்பாய் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதாலேயே கிரிக்கெட் அணியை அங்கு அனுப்பவில்லை. இலங்கை அப்படி ஒரு பயங்கரவாதத் தாக்குதலையும் இந்திய மண்ணில் செய்யவில்லையே பின்பு ஏன் கிரிக்கெட் அணியை அங்கு அனுப்பாமல் விடவேண்டும். இந்திய மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது நீங்கள் ஆதரிக்கும் புலிகள்தானே! எமது பிரச்சனை மட்டும் இல்லாவிட்டால் வீரமணி என்று ஒருத்தர் இருப்பதே இலங்கைத் தமிழருக்குத் தெரிந்திருக்காது.
மாற்றுகருத்துதோழர்
“மும்பாய் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதாலேயே கிரிக்கெட் அணியை அங்கு அனுப்பவில்லை. இலங்கை அப்படி ஒரு பயங்கரவாதத் தாக்குதலையும் இந்திய மண்ணில் செய்யவில்லையே பின்பு ஏன் கிரிக்கெட் அணியை அங்கு அனுப்பாமல் விடவேண்டும். ”
தமிழககடலில் சிங்களப்படை தாக்கியதில் 450 மேற்பட்ட தமிழகமீனவர்கள் பலியாகியுள்ளனர். தமிழககடல் இந்திய மண்ணில்லையா?
accu
தோழரே புலிகளுக்கான பெற்றோல், வெடி குண்டுகளுக்கான மூலப்பொருட்கள் இன்னும் பலவற்றை கடத்துவது மீனவப் போர்வையில் புலிஆதரவாளர்கள் மற்றும் பணத்துக்காக இந்திய மீனவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதில் ஓரிரு அப்பாவி மீனவர்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அது கூட இலங்கை கடல் எல்லையிலேயே இது உங்களுக்கு தெரியாமல் போக நியாயமில்லை. என்ன செய்வது பிடித்த முயலுக்கு மூன்று கால்தானே.