ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளிவிடாது முஸ்லிம் இளைஞர்களை பாதுகாத்தது மு.கா.தான்- ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgவடக்கில் புலிகளின் பயங்கரவாதத்திற்கும், தெற்கில் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்திற்கும் மத்தியில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போரட்டத்திற்குள் தள்ளாது ஜனநாயக ரீதியான போரட்டத்திற்குள் உள்வாங்கியது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி ரெஹான்ஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஒருவித பீதி மனப்பான்மை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இச்சமூகத்தை வெளிக்கொணர வேண்டும். இந்த அரசு மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால், சகல இன மக்களையும் இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது கட்சியின் எதிர்காலப் போராட்டத்திற்கும் பேரம் பேசலுக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். 1988 மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 12 பிரதிநிதிகளை வட கிழக்குக்கு வெளியில் வென்றெடுத்தது. அதன் பிறகு 2004 மாகாணசபைத்  தேர்தலில் நாம் இந்த 12 ஆசனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அமைச்சரவையில் 27 சதவீதமானோர் முஸ்லிம்கள் . ஆனால் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்தான் என்ன? இவர்களின் கையாலாகாத நிலை அவர்களுக்கே தெரியும். இதுபோன்று இக்கட்சியின் தலைமைத்துவமும் இருக்க விரும்பவில்லை. எனவேதான், வெளியே வந்தோம். முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடத்தக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது எதிர்கால தேர்தல்களில் நிரூபிக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • asraf casim
    asraf casim

    yes we accept there are 27% in the cabinet did nothing for nation,chairman of muslim congres demanded only for powerfull ministerial post which can give him profit, he never thought about muslim nation,policy less man,

    Reply
  • Eravuran
    Eravuran

    //ஆயுதப்போராட்டத்துக்குள் தள்ளி விடாது முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாத்தது மு.கா தான் – ரவூப் ஹக்கீம்//

    அதன் மூலம் முஸ்லிம் இளைஞர்களை நீங்கள் பாதுகாக்கவில்லை.மாறாக தாங்கள் செய்த செய்து கொண்டிருக்கின்ற செய்யப் போகின்ற போக்கிரித் தனங்களுக்கும் திருகுதாளங்களுக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உங்களைத் தண்டித்து விடக் கூடாது என்பதற்காக உங்களுக்கே நீங்கள் பாதுகாப்பு முன் ஏற்பாடு செய்து கொண்டீர்கள். இல்லாவிட்டால் உங்களில் எத்தனையோ பேர்களது தலை எப்போதோ உருண்டிருக்கும்.

    அது சரி தலைவர் நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்கள். ஆனால் உங்கள் தவிசாளர் முன்னாள் ஈரோஸ் வேங்கை பஸீர் “மு.கா ஆயுதப் போராட்டத்தை தடுக்கவில்லை ஆனால் ஒத்திப்போட்டிருக்கின்றது” என அடிமட்டத் தொண்டர்களிடம் வீர வசனம் பேசுகின்றார். என்ன நடக்குது உங்க கட்சிக்குள்ள? காட்சிக்கு ஏற்றாற்போல் கதை வசனங்களை மாற்றிக் கொள்ளலாம் என ஏதும் புதிய சரத்து ஒன்றை உங்கள் யாப்பில் சேர்த்து விட்டீர்களா? பாவம் மக்கள்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    ” தாங்கள் செய்த செய்து கொண்டிருக்கின்ற செய்யப் போகின்ற போக்கிரித் தனங்களுக்கும் திருகுதாளங்களுக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உங்களைத் தண்டித்து விடக் கூடாது என்பதற்காக உங்களுக்கே நீங்கள் பாதுகாப்பு முன் ஏற்பாடு செய்து கொண்டீர்கள்.”-நுசயஎரசயn
    மிக யதார்த்தமான கருத்து. முன்னுதாரணங்கள் பலவுண்டு ஈழத்தமிழர் அரசியலில்.

    Reply
  • MANITHAN
    MANITHAN

    அதன் மூலம் எந்த ஆபத்திலிருந்து முஸ்லிம் இளைஞர்களை மு.கா பாதுகாத்தது? அதன் மூலம் என்ன நன்மையை முஸ்லிம் சமூகத்துக்கு மு.கா பெற்றுக் கொடுத்தது என்பதை தயவு செய்து ரவூப் ஹக்கீமிடம் வினவி வாசகர்களுக்கு தெரியப்படுத்துமாறு தேசத்திடம் தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன். நன்றி

    Reply