சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பூதவுடல் இன்று மாலை பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று பகல் 1 மணிக்கு நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் உள்ள தேவாலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது பூதவுடலை திம்பிரிகஸ்யாய சந்தியில் வைத்து ஊடகவியலாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையேற்றனர். திம்பிரிகஸ்யாய சந்தியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது அரசியல் வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், கலைஞர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்
இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக சில அரசியல் கட்சிகளினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பலர் உரையாற்றினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இவரின் படுகொலையுடன் தொடர்பானவர்கள் இனங்கானப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.