இலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.
இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.
சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
நீதிமன்றத்தின் இவ்வுத்தரவைக் கண்டித்த பாரிஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Border) ‘இலங்கையில் ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் பெரும் கவலையளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையும் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசுரம் செய்யும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு.’ என அப்போது தெரிவித்து இருந்தது.
சண்டெ லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.
இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19 என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
Reporters Without Border அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.
சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றுப்புள்ளி வைக்கவும் கோரும் அடையாளப் போராட்டம் ஒன்றை செய்வதற்கு தேசம்நெற் முயற்சிக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
ashroffali
இலங்கையை அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல முற்படும் அதற்கான கனவுடன் காத்திருக்கும் சக்திகளின் சதிக்கு லசந்த விக்கிரமதுங்க பலியாகி விட்டார். அவருக்கு எமது அனுதாபங்கள். அரசாங்கத்தை விமார்சிப்பவார்களை கொன்றொழிப்பதன் மூலம் இம்சைக்குள்ளாக்குவதன் மூலம் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனையும் சக்திகள் மிக விரைவில் தோலுரிக்கப்படுவார்கள்.
damilan
இந்த காட்டு மிராண்டித் தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு மகிந்த அரசே பொறுப்பு.
nirmalan
அஸ்ரப் அலியின் ஜனாதிபதியின் ஊடக உளவு பிரிவின் கண்டனத்தை எப்படி பூசி மெழுகியுள்ளார் என்பதை கவனிக்கவும்.. அஸ்ரப் அலி அவர்களே லசந்த கொலை 3வது சக்தியை தோலுரிப்பது இருக்க, மகாராஜா நிறுவனத்தை தாக்கிய சக்தி எந்த தரப்பு. தங்களின் அரச தொலைக்காட்சி ரூபவாகினியில் புகுந்து தாக்கியவருக்கு என்னநடந்தது. குழந்தை குருமனுக்கும் தெரியும் இந்த கொலையை யார் செய்தது என்று. சிங்களப் பத்திரிகையாளருக்கே இந்தநிலை எனின் சாதாரண தமிழ் குடிமகனின் நிலையை சிந்தித்துப் பார்க்கவும். இது போன்று தான் சாதாரண அப்பாவி மக்களை குண்டுவீசி கொன்றுவிட்டு புலிகளின் பங்கரை அழித்ததாக அஸ்ரப் அலி தமிழில் எழுதிக்கொடுப்பதை அரச ஊடகங்கள் பிரசுரிக்குது.
nirmalan
தேசம் ஆசிரியருக்கு, அஸ்ரப் அலி போன்ற அரச ஊடக பிரிவின் பின்னூடங்களை அனுமதிப்பது ஊடக ஜனநாயகமாகாது. மாறாக அரசின் கருத்தை உண்மையான மாற்றுக்கருத்துக்குள் அரசின் கருத்தையும் திணிப்பதற்கு வடிகால் அமைத்துக்கொடுத்துள்ளீர்கள். தினகரன் பத்திரிகையின் ஒரு பகுதி தேசத்திலும் இணைக்கப்படுவதாகவே தோன்றுகிறது.
sanath
my deepest symathy for mr lasantha wikramatuna.you were very good journalist.
Sunthar
That is Sri Lanka. Nothing has changed.
Raman Kandasamy
No doubt this murder is the hand job of Mahinda & Co. Mahinda has proven beyond doubt that he is much worser than President Jeyawardene and Premadasa.
Mahinda and Co is a professional Mafiosi from Mahiyangana.
NADARAJAH SETHURUPAN
லசந்த தமிழ் சிங்களம் ஆங்கிலம் என்று எவரையும் பிரத்து பாக்காத ஒருவன்.
2005 காலபகுதி என்று நினைக்கிறேன்.
எனக்காக எனது பிரதிநிதியாக எனது கருத்தாக இலங்கையில் ஒரு தொலைக்காட்சியில் தொன்றி மங்கள சமரவீரவால் முன்வைக்கபட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு ஒண்றிற்கு பதில் கொடுத்தவன்.
மிகவும் அண்மையில் கதைத்திருந்தேன்.
லசந்தவுடன் இணைந்து பல நாடுகடுக்கும் சென்று செய்தி செரித்தவன் என்ற முறையில் பெருமை கொள்வதுடன் மரணச் செய்தியை நான் உறக்கத்தில் இருக்கும் போத ஒரு தமிழ் பத்திரிகையின் அசரியா; கொழும்பில் இரந்து தொலைபெசியில் சொல்லி கவலைபட்டார்.
மரண செய்தியுடன் வந்த லசந்தவன் நன்பனின் தொலைபேசியுடன் அந்த உறக்கம் கலைந்தது.
நாவலன்
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ குடும்பம் உரமூட்டி வளர்த்துவரும் பேரின வாதத்தினது ஆபத்தையும் பாசிசத்தின் கோரத்தையும் புரிந்து கொண்டவர்களில் லசந்தவும் ஒருவர். துப்பாக்கிகளுக்கு மத்தியில் பேனாவை உயர்த்திக்காட்டியவர். புலியழிப்பின் பேரால் சாகடிக்கப்பட்டுவிட்டார்.
அஞ்சலிகள்!
T Sothilingam
லசந்தவின் கொலையை கண்டிக்கிறேன் .
கடந்த காலங்களில் இப்டியான கொலைகளை கண்டித்தவர்களும் தமிழ் போராட்ட சூழலில் நடந்த தமிழ் பத்திரகையாளர்கள் கொலைகளை கண்டித்தவர்களும் -புலம் பெயர் ஜரோப்பிய சூழலில் வாழ்ந்து பத்திரிகைளின் சுதந்திர எழுத்தை அறிந்த பலரும் சுதந்திர எழுத்தை அங்கீகரிக்க மறுப்பதை ஜரோப்பிய சூழலில் அதானிக்கிறோம்.
புலிகள் இலங்கை அரசு பத்திரிகையாளர்கள் மீது கொண்டுள்ள அதே மாதிரியான கொலை மிரட்டல் பாணிகளை மாற்றுக்கருத்தாளர்களும் ஜரோப்பாவில் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கிறோம்.
muthu
nirmalan //தேசம் ஆசிரியருக்கு அஸ்ரப் அலி போன்ற அரச ஊடக பிரிவின் பின்னூடங்களை அனுமதிப்பது ஊடக ஜனநாயகமாகாது.//
ஒருவர் ஒரு அமைப்பினர் கருத்து எழுதினால் அந்த கருத்துடன் உடன்பாடு இல்லை எனில் அக்கருத்தைமறுத்து உமது கரத்தை எழுதுவது தான் ஊடக ஜனநாயகம் – அரச சார்பாக ஒருவர் கருத்து எழுத உரிமையுண்டு அதை மறுத்து புலிகள் கருத்து எழுதவும் தேசத்தில் சுதந்திரமுண்டு இதைவிடுத்து தேசத்திற்கு புத்திமதி சொல்ல வேண்டாம் அஸ்ரப் அலியை எழுதவிடவேண்டாம் என. இது தான் புலித்தனம் புலிகளின் ஜனநாயகம் என வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று மற்றவர்களின் கருத்தை எழுத விடவேண்டாம் என்று கேட்கும் புலிகளின் ஆதரவாளர் நாளை புலிகள் பற்றி தேசம் எழுதக் கூடாது என்றும் கூறலாம். இப்படியான வாதங்களை பல பாசிசவாதிகள் வரலாற்றில் செய்து தோல்வி கண்டுள்ளனர்.
palli
அரசும் புலிதான் என்பதை இந்த கொலை நிருபிக்கிறது. புலியும் ஆரம்பத்தில் பேனாவைதான் (சுந்தரம்) முறித்தது. ஆகவே அரசு தன்னை இனம் காட்டியுள்ளது. என்ன கொடுமையெனில் இறப்பில்கூட சில அறிவு ஜீவன்ங்கள் அரசை பாதுகாக்க குத்துகரனம் அடித்து மல்லாக்க விழுவது
கவலயாக உள்ளது .பல்லியும் தேசம் சார்பக இந்த படுகொலைக்கு தமது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
பல்லி.
sundayleader tamil
BBC report of the killing censored
சண்டே லீடர் லசந்தவின் கொலையை அரசாங்கமே செய்தது என்பதை ஒப்புக்கொண்டு தணிக்கை- வெள்ளிக்கிழமை- 9 சனவரி 2009 சிந்துகந்தசாமி
BBC reports on the killing of Sunday Leader editor were censored by the government of Sri Lanka.Sections of a statement given by the Media minister Anura Priyadharshana Yapa were among the sections blanked out by the government censorship.
The BBC Sandeshaya and BBC Thamilosai reports that included comments from colleagues of the slain editor and the politicians of the government and the opposition were blanked out by the Sri Lanka Broadcasting Corporation (SLBC).newspaper editors among the victims
In the censored segment of the programme there were quotes from international organisations and the leader of the opposition blaming the government for not being able to prevent attacks on media.
The interviews depicting the feelings of fellow newspaper editors were also blanked out Irida Divaina editor Gamini Sumanasekera Ravaya editor K. W. Janaranjana Lanka editor Chandana Sirmalwatte and the Chairman of Sri Lanka Working Journalists Association Sanath Balasuriya were among the victims of government censorship of the BBC.There is no declared censorship imposed in Sri Lanka for local or foreign media.No official censorship
The BBC had received many telephone inquiries from listeners who were intrigued why the government needed to censor the reports of Lasantha Wickramatunga assassination.Government denied any involvement in the killing.The BBC reports on the attack on the MTV/Sirasa station were also taken off air by the authrities in Sri Lanka.
Since November 27th where the SLBC blanked out reports on the annual speech by Tamil Tiger leader Velupillai Prabhakaran the government has blanked out certain reports by the BBC Sinhala and Tamil output amidst protests by media watchdogs.The BBC first entered a rebroadcasting agreement with the SLBC in the late nineties.
BBC
வியாழக்கிழமை நமது நிகழ்சியில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான சில செய்திகள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் பண்பலை ஒலிபரப்பில் தணிக்கை செய்யப்பட்டது என்பதை நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ashroffali
//மகாராஜா நிறுவனத்தை தாக்கிய சக்தி எந்த தரப்பு.// http://thesamnet.co.uk/?p=6228
தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது- category: அருட்சல்வன் வி, செய்திகள்
எம்.டி.வி தொலைக்காட்சி நிலையத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை மகரகம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ‘ரஞ்சித் குணசேகர’ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கோட்டே நகரசபையின் ஐ.தே.க. உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அறிய வருகிறது .கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் ‘டிபென்டர்’ வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர் நிர்மலன் அவர்களே
அரசாங்கம் மீது யாருக்கும் அதிருப்தி இருக்கலாம். அதற்காக அரசாங்கம் செய்யாத விடயங்களுக்கெல்லாம் அநியாயமாக அரசாங்கத்தின் மீது பழி சுமத்தக் கூடாது என்பதைத் தான் நான் வலியுறுத்தி வருகின்றேன். மற்றபடி பல்லி கூறுவது போன்று ஒரு மனிதனின் மரணத்திலும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அளவுக்கு நான் ஒன்றும் ஈனப்பிறவியல்ல. எனக்குள்ளும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கின்றது. மனதில் ஈரமும் இருக்கவே செய்கின்றது.
இன்று ஒரு மனிதனின் மரணத்திற்காக நான் மனசாட்சியும் மனித நேயமும் இன்றி சந்தோசப்பட்டால் நாளை என் மரணத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் அது குறித்து சந்தோசப்படுதவற்கான சூழ்நிலையை எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தி விடுவான் என்பதில் என்றும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஒரு மனிதனின் துன்பத்தில் சந்தோசம் காண்பவன் மனிதனே அல்லவென்பது தான் நான் கடைப்பிடிக்கும் சித்தாந்தமாகும். ஆனாலும் அநியாயமாக பொல்லாப் பழி சுமத்துவதை பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும் அளவுக்கு நான் பயந்தாங்கொள்ளியுமல்ல. அதனால் தான் உங்கள் கருத்துக்களில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுகின்றேன். மற்றபடி நிர்மலன்…..முகம் தெரியாதவர்களாக இருந்தாலும் என் கருத்துக்களை ஆதரிப்பவர்களை நான் எந்தளவுக்கு மதிக்கின்றேனோ அந்தளவுக்கு என் கருத்துக்களை எதிர்ப்பவர்களையும் மதிக்கின்றேன்.இக்கருத்தாடல்கள் எல்லாம் எமக்கிடையிலான ஆரோக்கியமான கருத்துப் பாரிமாறல்களே தவிர தனிப்பட்ட பகைமையை வளர்த்துக் கொள்வதற்கான விடயங்களல்ல நண்பரே சின்னச்சின்ன விடயங்களுக்காகவெல்லாம் நாம் பகைமையை வளர்த்துக் கொள்வதாயின் நமக்கும் விலங்குகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. பகுத்தறிவென்பது நமக்கு வழங்கப்பட்டிருப்பதே அதற்காகத்தான். எனவே என் கருத்தில் என்றைக்காவது பிழைகள் இருக்குமாயின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வேன். எனது கருத்துக்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பாதித்திருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்வேன். மற்றபடி நமக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. செயற்பாடுகள்தான் யாரையும் பாதிக்காதனவாக யாருடைய சுதந்திரத்துக்கும் இடையூறு விளைவிக்காதனவாக இருக்க வேண்டும்.
சக்தி ஊடக வலைப்பின்னல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அரசாங்கமே மேற்கொண்டதாகவே அனைவரும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் இருந்து டிபெண்டர் வாகனத்தில் ஆயுதங்களை ஏற்றியதைக் கண்ட பொதுமக்கள் வழங்கிய தகவல்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியது. இப்போது உங்கள் கருத்துக்களையும் கண்டனங்களையும் வாபஸ்பெற நீங்கள் தயாரா நண்பரே?
அதே போன்றுதான் திரு லசந்த விக்கிரமதுங்க படுகொலைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அந்த உண்மைகளும் மிக விரைவில் வெளிவரும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.இலங்கையில் இருக்கும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் சபல புத்தி காரணமாக பெரும்பாலான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.அதையெல்லாம் புறமொதுக்கிவிட்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது தவறுதானே நண்பரே….அதைத் தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன்.மற்றபடி உங்கள் மீதோ அரசாங்கத்துக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் மீதோ எனக்குள் எதுவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை நண்பரே….
rathy
முந்தி எல்லாம் புலிகள் மீது தான் பலியை போடுவார்கள் இப்ப எதிர் கட்சியா?
chandran.raja
இது முதல் தடவையில்லையே! இப்படி எத்தனையோ கொலை-கொலைகள்.
குறிப்பிட்ட காய்யை விழுத்துவதற்கு இன்னொரு காய்யைப் பாவிக்கிற “பிலியாட்” விளையாட்டுப்போல ஒருதலையைப் போட்டுவிட்டால் அது யார்தலையில் விழும் என்பதை அறிந்த விற்பனர்கள் நம்இனத்திலையும் இருக்கிறார்கள். அதற்கு உரிமைகோருகிற அரசியல் நேர்மையும் இல்லாதவர்கள்.
மற்றைய பலகொலைகளைப் போலவே இதுவும் வெளிவராமல் போகலாம். தற்போது உள்ள நிலைமைகளில் நாம் ஒருமுடிவுக்கு வரலாம். விடுதலையென்ற பெயரில் இயங்கும் ஆயுதக்குழுக்களுக்கும் இப்படியான குழுக்களை ஆதரிப்பவர்களுக்கும் லசங்கா விக்கிரமாகுவின் கொலையை கண்டிப்பதற்கு உரிமையில்லை.
அருட்செல்வன்
நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சூழல் தோன்றியிருப்பதையே ஊடகவியலாளர்களும் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் பட்டப்பகல் படுகொலை எடுத்துக் காட்டுகிறது என புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமத்துங்க கொல்லப்பட்டமை தொடர்பாக அக் கட்சி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாவது; விமர்சனம் செய்யக்கூடிய துணிவான ஊடகவியலாளர்களையும் மாற்றுக் கருத்துடைய அரசியலாளர்களையும் சட்டத்திற்கு அப்பால் இனம் காட்டாத ஆயுததாரிகள் மூலம் ஒழித்துக்கட்டும் போக்கு மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதா என்ற அச்சம் தரும் கேள்வியே லசந்தவின் படுகொலை மூலம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப் படுகொலை விடயத்தில் அரசாங்கம் உரிய அக்கறையுடன் நடந்து கொள்ளுமா என்ற சந்தேகத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் அண்மைக் காலம் வரையான ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கும் ஊடகங்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசாங்கம் உரிய விசாரணைகளையோ நடவடிக்கைகளையோ எடுத்ததில்லை.
லசந்த விக்கிரமதுங்கவை ஆசிரியராகக் கொண்ட சண்டே லீடர் ஆங்கில வார இதழ் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் மறைவில் உள்ள தகவல்களையும் வெளியிட்டு வந்துள்ளது.அதேவேளை லசந்த பல்வேறு விடயங்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வந்துள்ளார். அவற்றையெல்லாம் எவாராயினும் ஏற்கவும் நிராகரிக்கவும் முடியும். அக் கருத்துக்களும் விமர்சனங்களும் தவறானவையாகவும் கூட இருக்க முடியும். ஆனால் ஒரு ஊடகவியலாளருக்கு பத்திரிகை ஆசிரியருக்கு உள்ள அடிப்படை உரிமையைத் துப்பாக்கி ரவைகள் மூலம் மறுத்துவிட முடியாது.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். அதே பாதையில் இப்போது சிங்கள ஊடகவியலாளரும் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்தவின் பேச்சும் எழுத்தும் துப்பாக்கி ரவைகள் மூலம் முடிவு கட்டப்பட்டிருக்கிறது.
இச் செயல் வன்மையான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உரியதாகும். யுத்த வெற்றியின் மறைவில் இது போன்ற திட்டமிட்ட படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறப் போகின்றதா என்ற கேள்வியே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதே சமயம், எம்.ரி.வி. தாக்குதல் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், எம்.ரி.வி. ஊடக வலையமைப்பின் மீது இனம் காட்டாத ஆயுததாரிகள் நடு இரவில் நடத்திய மோசமான தாக்குதல்களும் தீவைப்பும் ஊடக சுதந்திரத்தின் மீதான படுகொலை முயற்சியாகும். தமக்கு விரும்பாத கருத்துகளையும் காட்சிகளையும் சகிக்க முடியாத சக்திகளே மேற்படி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியுள்ளன. பாசிசத்தன்மை வாய்ந்த மேற்படி தாக்குல்களை எமது புதிய ஜனநாயகக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என நம்ப இடமில்லை. மக்களும் ஜனநாயக சக்திகளும் தான் உரிய பதில் கூற வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகிறது. இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்தபோது ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தருவதாகவே கூறியிருந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டு ஆட்சியில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வடக்கிலிருந்து தெற்குவரை நாட்டின் சகல பாகங்களிலும் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் ஆளாக்கப்பட்டே வந்துள்ளனர். தமிழ், சிங்கள ஆங்கில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இனம் தெரியாத இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களில் வரும் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு கொலைகளும் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மற்றொரு புறத்தில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக ஊடகவியலாளர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய நிகழ்வுப் போக்கின் தொடர்ச்சியாகவே கடந்த செவ்வாய் இரவில் எம்.ரி.வி. ஊடக வலையமைப்பு தாக்கி எரியூட்டப்பட்டிருக்கின்றது. இச் சம்பவத்தின் சூத்திரதாரிகளையும் சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுததாரிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்பதில் அர்த்தம் இல்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும்
.
ஏனெனில் இதுவரையான ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும் உரிய நடவடிக்கைகளோ சட்டத்தின் மூலமான தண்டனைகளோ கிடைக்கவில்லை. அதற்குரிய எவ்வித முயற்சிகளும் அரசாங்கத்தினால் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. இந் நிலையில் முன்பு இடம்பெற்று வந்த இழுத்தடிப்பும் மறைப்பும் போன்றே அண்மைய தாக்குதல் பற்றியும் இடம் பெறும் என்றே எதிர்பார்க்க முடியும். இதற்கு மக்களும் ஜனநாயக சக்திகளும்தான் ஒன்று பட்ட உறுதியான எதிர்ப்பு நடவடிக்கை மூலம் பதிலளிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும
T Sothilingam
Dear friends, Please read this article.
“Conquering Kilinochchi”: Military delusions that ruin Sri Lanka – By Vasantha Raja Posted by Administrator (admin) on Jan 10 2009 at 12:33 PM
Editor’s Essays + Responses >> Vasantha Raja – 10 Jan 2009 [Updated version]
The assassination of Lasantha Wickramatunga, the editor of ‘Sunday Leader’ – undoubtedly the most effective critic of the Rajapaksa administration – marked the climax of hunting down several political journalists during the past few years. Just three days back gunmen with grenades attacked the biggest private TV station in the country, and the event is widely seen as part of the present administration’s effort to suppress dissent.
Killings of influential ‘anti-war’ journalists, however, may also be linked to right-wing nationalist formations among extremist Sinhala-Buddhist circles too – no doubt, with military, political and underworld links. Amidst rising military euphoria, continuation of attacks on media critical of the war is likely to come from such secret organisations rather than individual politicians, I think.
However, the government’s intensifying efforts to bridle free media must not be underestimated on that account at all. But, the question is this: why would an immensely popular government amongst the Sinhalese majority ruthlessly stifle the media? Does the government want to hide something? Is the military picture in the north and the state of the economy not as rosy as what the government wants us to believe?
In fact, a sober appraisal of the military and the economic situation in the country does raise some questions. Let me explain:
Clearly, the overwhelming majority of Sri Lanka ‘s army is now stretched to its limits in Tamil areas. SL Army consists of 13 Divisions; out of which 12 divisions are now occupying North & East under 3 Operational Commands in Jaffna peninsula, Vanni districts and the East. Only one division left in Colombo [Panagoda] to protect the entire south, including Colombo .
Thus, over 100,000 soldiers are occupying Tamil areas – primarily as garrisons concentrated mainly in tiny towns surrounded by the jungle. They are virtually all ethnically Sinhalese soldiers stuck in the midst of a hostile population that perceive the troops as aliens and enemies.
In contrast, Vanni jungles – from where Tigers would operate guerrilla attacks – stretch from the east coast to the west coast of the island’s north covering vast regions like a buffer zone separating the Jaffna peninsula from the south. Obviously, the jungles are inaccessible to conventional forces in the normal way.
Tigers know the thick forests of Vanni like the back of their hands, whereas the Sinhala soldiers are only limited to the few available roads, like the A9, and the towns. Thus, the logistics and supply routes become crucial. The military has to provide regular supplies from the south to maintain the garrisons; and the supply routes will constantly be under the threat of guerrilla attacks.
Quite apart from the supply routes’ vulnerability, this is going to be a hugely expensive task. Under the present economic circumstances, this could amount to a virtual nightmare, to say the least.
Vanni region is ideal for guerrilla forces, but not so for conventional forces. The might of Sri Lanka ‘s army and the air-force will have to be limited to the towns. Tigers know this.
Tigers and the civilians left the Tiger capital – razed to the ground by aerial bombing – before the end of December. That was the sign that they had on the whole resumed a guerrilla mode of existence, leaving the army to stretch themselves to the maximum.
If this ends up as a long-term military occupation surrounded by a sophisticated guerrilla force nurtured by the Tamil community, the implications would be ominous.
Although Tigers’ similar tactical transformations have happened before, this time round there are two new significant factors: Firstly, this is the first time Sri Lanka’s army is almost entirely mobilized to occupy the entire north & east. Secondly, Sri Lanka’s economic circumstances have never been so dangerously vulnerable.
In particular, one must not underestimate the fact that this is happening at a time when the deepening global recession and the impact of the credit crunch are about to hit Sri Lanka ‘s economy really hard. Social unrest in the south seems unavoidable. If the Sinhala majority’s high hopes to see LTTE’s demise soon end up in disillusionment, the consequences could be terrible. The government must be fully conscious of this eventuality and it knows the presently rising support could quickly turn into anger. Clearly, the government wants a media that somehow help keep the delusion intact – particularly at a time when the SL Army is bogged down in the Tamil-dominated war zone.
In my view, southern political establishment will be doomed, unless they come up with a political solution that is unambiguously appealing to the Tamils, and negotiate that with the LTTE. However, judging from what is happening now – such as banning the LTTE, media attacks and fast rising supremacism among the Sinhalese etc. – a convincingly attractive political package for Tamils’ consumption is unlikely, to say the least. Gullible journalists who swallowed the military interpretation of the war have now convinced the Sinhala people of their leaders’ ability to impose their own ‘solution’ on the Tamils.
Amazingly, most local and foreign journalists saw the capture of kilinochchi as a major defeat for the Tigers; the truth is it is only a symbolic defeat, and certainly of immense propaganda value to the government. The real significance of the kilinochchi battle is that it has convinced the Tigers it’s time to forget the mini-state and resume guerrilla war.
Realistically, guerrilla warfare is more effective and useful for them than the conventional form. It was probably Tigers’ separatist ideology that pushed them to have their mini-state. But, defending it militarily against the SL forces is not a viable proposition at all – even if it has clearly demonstrated the LTTE’s organizational skills and the commitment. Financially, it has been a huge burden on the LTTE and the Tamil people. In terms of human lives and peoples’ misery it has been a disaster.
Ironically, the Rajapaksa regime has unwittingly taught a valuable lesson to the Tigers: that the Colombo administration will not leave any town within Tamil regions for the Tigers to build mini-states. But, in doing so the government has forced the LTTE to resort to guerrilla warfare. Consequently, Sri Lankan government will now have a far more dangerous situation in its hands than ever before.
Tigers’ statelet was useful for the LTTE to show the world that they can run a state smoothly as responsible statesmen. But what has the global leaders done to promote their case? Bitter experiences so far have proved that the energy spent on maintaining a mini-state is a waste of time, money and lives. What is needed is to intervene politically – backed by a guerrilla army of course – to unite the people under a common banner and foster links with the southern mass movement.
Paradoxically, the Rajapaksa brothers’ ruthless war has forced the Tigers to see the truth, and I think, before long the SL government will realise that it has committed a big blunder by ‘educating’ the Tigers and pitching its “entire” army in the midst of a massive jungle, a refined guerrilla force and a hostile population.
If the LTTE succeeds in developing a political strategy to unite the Tamils under a united front and approach the southern mass movement in a productive way, the situation can change in totally unexpected ways. The Sinhala mass movement also should realize that an alliance with the Tamil side would be crucial for their own emancipation in the oncoming economic demise of the island. In other words, Sinhala and Tamil liberation are inseparably linked, and they merely reflect two sides of the same coin.
accu
இன்று எத்தனையோ கொலைகள் எமது நாட்டில் நடந்தேறிவிட்டது. இவற்றில் பல இன்னும் யார் பொறுப்பு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியபடியே எமது மனங்களில் இருந்து மறைந்து கொண்டு போகிறது. ரஜனி திரணகம, ராஜீவ் காந்தி,கதிர்காமர் இவர்களின் கொலைகளுக்கும் புலிகளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று வக்காலத்து வாங்க மாற்றுக்கருத்துதோழர் போல் பலர் உள்ளனர். கிட்டுவின் கால் போன போது அருணா என்ற அரக்கன் கந்தன் கருணை படுகொலையை செய்த போது ஈ பீ ஆர் எல் எப் தான் கிட்டுவின் கால் போனதற்க்கு காரணமென்று அதனால் தான் அருணா கோபத்தில் அந்தக் கொடூரத்தை செய்தான் என்று நியாயம் சொன்னவர்கள் அதே வாயால் மாத்தையாவை புலிகள் கொன்றபோது கிட்டுவின் கால் போனதற்க்கு மாத்தையாதான் காரணம் என்று சொன்ன கொடுமையையும் பார்த்தேன். இப்படி தமக்கென்று சொந்த அறிவு இல்லாமல் எதையுமே ஆராய்ந்து பாராமல் எல்லாத்துக்கும் ஆமாம் போட்டதால்தான் இவ்வளவு அழிவும் ஏற்ப்பட்டது. எமது நாட்டில் விடுதலை என்ற பெயரில் தொடங்கி இன்று பாதை மாறி எங்கோ அழிவின் உச்சத்துக்கு என் மக்களை அழைத்து வந்துவிட்டவர்கள் முற்றாக அழிந்த பின்னர்தான் இது போன்ற கொலைகளும் இல்லாமல் போகும்.
ashroffali
//எமது நாட்டில் விடுதலை என்ற பெயரில் தொடங்கி இன்று பாதை மாறி எங்கோ அழிவின் உச்சத்துக்கு என் மக்களை அழைத்து வந்துவிட்டவர்கள் முற்றாக அழிந்த பின்னர்தான் இது போன்ற கொலைகளும் இல்லாமல் போகும்//
சரியாகச்சொன்னீர்கள் அக்கு. பாராட்டுக்கள்.