வன்னியில் இந்த வருடத்திற்கான பாடசாலைத் தவணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாடசாலைகளில் தங்கியுள்ளனர். 200 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளன.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள பாடசாலைகளும் ஏனைய பாடசாலைகளிலேயே இயங்குகின்றன. அவற்றில் மக்களும் தங்கியுள்ளனர். அதனால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.