பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தலைமையிலான சிரேஷ்ட உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் மூன்று விமானப் படைத்தளங்களுக்கு விஜயம் செய் துள்ளனர். ஹிங்குரங்கொடை, சீனக்குடா மற்றும் கட்டுநாயக்க ஆகிய விமானப் படைத்தளங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதி காரிகள் படைவீரர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஹிங்குரங்கொடை விமானப்படைத் தளத்தை சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளரை தளத் தளபதி விங் கமாண்டர் டி. கே. வனிகசூரிய வரவேற்றுள்ளார். விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 விமானங்களை பயன்படுத்தும் விமானப் படைவீரர்கள் முன்னிலையில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் வன்னியை விடுவிக்கும் படை நடவடிக் கைகளுக்கு விமானப் படையினர் வழங் கிய உதவி, ஒத்துழைப்புகளுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சீனக் குடா விமானப் படைத் தளத்திற்கு விஜயம் செய்து பாதுகாப்புச் செயலாளரை சீனக்குடா விமானப்படைத் தளத்தின் தளபதி குறூப் கப்டன் விஜித குணரட்ன வரவேற்றுள்ளார். இதேவேளை கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் தளபதி எயார் கொமொடோர் சி. ஆர். குருசிங்க வரவேற்றுள்ளார். விமானப்படையினர் எம். ஐ. 27 ரக விமானங்களை பயன்படுத்தும் 10ம் இலக்க விமானப் படை வீரர்கள், கிபிர் விமானங்களை பயன்படுத்தும் 10வது இலக்க விமானப் படைவீரர்கள் மற்றும் எப் 7 விமானங்களை பயன்படுத்தும் 5ம் இலக்க விமானப்படை வீரர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னி படை நடவடிக்கைகள் வெற்றி பெற விமானப் படையினரின் மேற்படி பிரிவினர் முழுமையான ஒத்துழைப்புகளுக்கும் தனது பாராட்டுக்களை செய்துள்ளனர்.