கிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக வன்னிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்ற அவர் வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்துப் படைப்பிரிவுகளினதும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது கிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு இராணுவத்தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.எதிர்கால இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது