மத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பான பிரதான சந்தேக நபரை வவுனியா இரட்டைபெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர், வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.
சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிகாரவின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய வங்கி குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது. மாவட்ட நீதிவான் சந்தேக நபரை, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.