இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.
கிளிநொச்சி வீழலாம். கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.
நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
இலங்கையில் போர்நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு யுத்தத்தை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.
saam
இதுதான் தமிழுக்கு அழகு. எனிதான் மகிந்தாவுக்கு விளைவு.
damilan
கிளி விழுந்ததால் புலியின் பலமும் புலி ஆதரவாளர்களின் வயிறும் காயும். இனி உங்களைப் போன்றவர்களை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு பணமும் பட்டும் தர ஆளில்லை. எதுகை மோனையாகப் பேசுவதால் தமிமீழம் கிடைக்கும் அதற்கு வாழ்த்துப் பாடி வாயார முடியாது. இது போன்ற ஒப்பாரி மட்டுமே வைக்க முடியும்.
Anonymous
அட புலி விழுந்ததால் வைரமுத்துவிற்கு கிலி பிடித்து வந்த கவிதையோ??
Logan
புலியைத் தழிழன் என்றோ தழிழனின் பாதுகாப்பென்றொ காட்ட புறப்புடும் போக்கத்த புலவரே! சில்லறை வாங்கினோமா சினிமாவுக்குக் பாட்டா? பொன்னாடை வாங்க புறநானூற்றுப் பேச்சா?
இதுகளோட நில்லுங்க! போய் குளியுங்க/ தாராளமா சாப்பிடுங்க யாரு வேண்டாம் என்றா?
எங்கள் கவிஞர்கள்! அவல வாழ்வை அனுபவித்துக்கொண்டு சமூகத்தின் யதார்க்தத்தைப் பார்க்கும் கண்ணிலும் எழுதும் விரலிலும் குருதி சொட்டச் சொட்ட விடியலுக்கு வெளிச்சமிடக் கவிதை பாடுபவர்கள். சோத்துக்குப் பாடும் நீங்களெல்லாம் இலங்கை தமிழருக்கு அரசியல் போதிக்கத் தகுந்த கவிஞர்களா?
யோசித்துப் பதில் கொல்லுங்க!
அலையோட அலையா ஏதோ கிலி புலி எதுகை மோனை அற்புதம்!
தமிழினத்துக்கு நட்பா விரோதமா என்ற பார்வை தமிழ் நாட்டு அரசியலிலை உள்ளையும் கிடையாது வெளியையும் கிடையாது.
இருந்தாலும் கடைசி பஸ் பாத்துக் கை காட்டுங் பத்திரம்!!!!!