கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களுள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 332 பேர் இன்று (02) அதிகாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அதேபோல் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 41 இலங்கை மாணவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வணிகக் கப்பலில் பணிப்புரிவதற்காக 13 வெளிநாட்டு மாலுமிகளும் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் கட்டாரில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.