வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து இன்று ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம் பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.