தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என கூட்டுறவு வர்த்தக பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன் கருதி இணக்க அரசியலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என அவர் கூறினார். மட்டக்களப்பு குருமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் அண்மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த சில தினங்களாக வடபகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண வழங்கல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்றவற்றில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் அகியோருடன் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.