நாளை சனிக்கிழமை 27ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் என்பதால் வடக்கில் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. குறிப்பாக கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் படையினராலும், புலனாய்வுப் பிரவினராலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தினத்தில் பொதுமக்கள் ஏதாவது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனரா எனவும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 21 ஆம் திகதி கார்த்திகை விளக்கீடு தினத்தன்று வீடுகளின் முன்பாக விளக்கேற்றிய பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை சில இடங்களில் படையினர் மிரட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கார்த்திகை விளக்கீடு குறித்து பொதுமக்கள் படையினருக்கு விளக்கியதும் பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.
இதேவேளை, குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகை அலுவலங்கங்களுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் புலிகளின் மாவீரர் நாள் தொடர்பாக செய்திகள வெளிடக்கூடாது என மிரட்டல் விடுக்கும் கடிதங்களை கொடுத்து விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும், அந்நிலையை குழப்ப முயற்சிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு குழப்ப முயற்சித்தால் பத்திரிகை அலுவலகம் கொழுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
palli
இது பல்லியின் கற்பனை:
நிஜமானால் எப்படி இருக்கும்??
தமிழ் தேசியத்தின் தலமை தான் தான் என 25 ஆண்டுகள் சூழ் உரைத்த தேசிய தலைவனனுக்கு பல ஆண்டு காலம் மண்ணில் சீரும் சிறப்புமாக அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தோம்; ஆனால் இந்த வருடம் அப்படி செய்ய முடியாது, அதனால் இந்த வருடம் அவரது பிறந்த நாளை விண்ணில் கொண்டாட அவரது தளபதிகள் மற்றும் தேசியத்தின் ஆலோசகரும் முடிவு செய்து இருப்பதால்; அவரது பிறந்த தின விழா விண்ணில் மிக விமர்சையாக கொண்டாட படுகிறது;
நிகழ்ச்சி நிரல்;;
நிகழ்ச்சி ஆலோசனை;; பாலா
வெளிபுற பாதுகாப்பு; மாத்தையா
கடலோர கவனிப்பு; சூசை
தலைவரின் பாதுகாப்பு; கிட்டு
அரங்க வடிவமைப்பு; நடேசர்
வருவோரை கவனிக்க; பால் ராஜ்
உள்புற பாதுகாப்பு; பொட்டர்
விருந்தை கவனிக்க; திலீபன்
உடைஅலங்காரம்; பாலகுமார்
வரவேற்புரை; தமிழ்செல்வன்
சிறப்பு விருந்தினர்; ராஜீவ் காந்தி
சிறப்பு வருகை;சுந்தரம்
சிறப்பு பேச்சு; அமிர்தலிங்கம்
;சிவ சிதம்பரம்
;லோகேஸ்வரன்
இப்போது இரத்த இடைவேளை;;;;;;
தொடர்கிறது விழா,,
தோழமை உரை; சிறி சபாரத்தினம்
; பத்மநாபா
ஒபறாய் தேவன்
எதிர் பாராத வருகை, உமாமகேஸ்வரன்
கவர்ச்சி பேச்சு, வாசுதேவா
தொடரும் (கலை) கொலை நிகழ்ச்சிகள்
இறுதியாய்,,,,
நன்றி (கொலை) உரை, புலி தேவன்
எம் தலவன் விழாவுக்கு வருகதந்த அனைத்து தலமைகளுக்கும் நன்றி, இப்போது இரவு 12 மணி ஆக போகிறது :இன்னும் சில நிமிடங்களில் எம் தலைவனுக்காய் உயிர் பலி கொடுத்த எம் தியாக செம்மல்களுக்கான மாவீரர் தினம் கொண்டாட (ஆரம்பிக்க) இருப்பதால் தலைவரின் பிறந்ததின விழாவை இத்துடன் முடிவு கொள்கிறோம்; நன்றி தமிழர் தாகம் தலைவன் வாழ்வே,
சாந்தன்
இந்த ஏற்பாடுகளின் மூலம் ஸ்ரீலங்கா ரானுவமும் அதற்கு முண்டுகொடுக்கும் அல்லது முண்டு பெற்றுக்கொள்பவர்ளும் உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள் போலுள்ளது.
இதனை விவாதிப்பதை விட்டு பல்லி கற்பனையில் கதை எழுதி தானே தனக்கு சின்னத்தனமாக சினிமாப்பாணியில் மகிழ்ச்சியூட்டிக் கொள்கிறார.
பல்லியிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்தால் அவர் மீண்டும் மீண்டும் பழைய கழக பிரச்சாரப்பிரிவு விளையாட்டை ஆட அரம்பித்து விடுகிறார். எல்லாம் பழக்கதோசம் !
மாயா
//இந்த ஏற்பாடுகளின் மூலம் ஸ்ரீலங்கா ரானுவமும் அதற்கு முண்டுகொடுக்கும் அல்லது முண்டு பெற்றுக்கொள்பவர்ளும் உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள் போலுள்ளது.//
உங்களைப் பற்றி ; நீங்களே விமர்சிக்கிறீங்கள் போல. ( முக்கியமான புலிகள் அரசோடுதானே?)
எல்லா தமிழ் கட்சிகளும் மகிந்ததாவோடு சேர்ந்து வேலை செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறாங்கள். ஒருத்தர் இரண்டு பேர் வெளியில வந்து பேட்டி கொடுத்திருக்கிறாங்க. தமிழருக்கு ஒண்டுமில்லயென்று…… இது ஆத்தா கொடுமை. பெரும்பான்மை மகிந்ததான் மன்னர் பெருந்தகை என்டினமாம். அதுதான் இந்த மெளனம். இதுகளையும் குழுப்பினால் இனி ஒண்டுமில்லாமல்தான் வரும். கடந்த காலங்களில் கிடைத்ததை எடுத்திருந்தாலே > இன்றைக்கு விரும்பியதை எடுத்தும் இருக்கலாம். சில நேரம் கேட்காமலும் கிடைத்திருக்கும்?
வண்ணன்
Speech from Vanni
-http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded
palli
//பல்லியிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்தால் அவர் மீண்டும் மீண்டும் பழைய கழக பிரச்சாரப்பிரிவு விளையாட்டை ஆட அரம்பித்து விடுகிறார். எல்லாம் பழக்கதோசம் !// ஆக பல்லியிடம் ஆக்க பூர்வ தகவல் இருக்கு என்பது உங்கள் கருத்து, ஆனால் கழகம் பற்றி பேசுவதால் உங்களுக்கு கடுப்பு, சாந்தன் ஆரம்பம்தான் கழகம் போக போக பாருங்கோவன் உங்க தலமையும் நாறும்,
//இதனை விவாதிப்பதை விட்டு பல்லி கற்பனையில் கதை எழுதி தானே தனக்கு சின்னத்தனமாக சினிமாப்பாணியில் மகிழ்ச்சியூட்டிக் கொள்கிறார. ..::// உங்க மீது உங்க எச்சில் விழும்போது என்னை நானே மகிழ்விப்பதில் தப்பு என்ன? சாந்தன் உன்மையில் நான் மாவிரரை மதிப்பவன் அதில், ஆனால் புலி மட்டுமே மாவீரர் அல்ல, விடுதலைக்காக புறப்பட்டு இறந்த அனைவரும் மாவீரர்தான்; உன்மையில் நான்
மாவீரர் தினத்துக்கு ஒரு கவிதைதான் எழுதுவதாய் இருந்தேன்; ஆனால் நான் வாழும் நாட்டில் தலமைக்கு 26.11.2010 வெட்டினாங்க
பாருங்க ஒரு கேக்; அதோடு மனம் விட்டதால் இந்த கற்ப்பனை; சாந்தன் எந்த அமைப்பும் அல்லாத ஒரு தமிழனாய் வாருங்க உங்களுடன் வாதம் செய்ய பல்லி காத்திருக்கிறேன்; நட்புடன் பல்லி;
BC
கற்பனையில் கதை எழுதி புலி ஆதரவாளர்களை சின்னத்தனமாக சினிமாப்பாணியில் மகிழ்ச்சியூட்டிவர்கள் (குசிபடுத்தியவர்கள்) புலி எழுத்தாளர்கள். பல்லி அல்ல.
சாந்தன்
//…..சாந்தன் எந்த அமைப்பும் அல்லாத ஒரு தமிழனாய் வாருங்க உங்களுடன் வாதம் செய்ய பல்லி காத்திருக்கிறேன்; நட்புடன் பல்லி;….//
நான் ஏன் எந்த அமைப்பும் இல்லாமல் வரவேண்டும்? எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதனை செயல்ப்படுத்துவோரிடம் எனது ஆதரவைத் தெரிவிப்பேன், அவர்களுக்குத் துணையாக இருப்பேன். அதற்கான உரிமை எனக்குண்டு. இந்த கொள்கைகளை முன்னெடுக்கும் அமைப்புகளை விமர்சிப்போரிடம் உங்களின் மாற்றுக்கொள்கைகள்/திட்டங்கள் எங்கே காட்டுங்கள் எனக்கேட்பதற்கும் எனக்கு உரிமை உண்டு.
உலகமேலாம் எமது இனம், சகோதரம் எனக்கதை விட்டவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றனர் என அறியவில்லைப் போலும். வாயைத்திறக்கவே அஞ்சிக் கொண்டிருக்கின்ரனர்.
எனது கொள்கைகளை முன்னெடுக்க உதவும் அமைப்பு அல்லது மக்கள் கூட்டம் போன்றவற்றின் அடையாளங்களை களைந்தால் தான் என்னுடன் கருத்தாடுவேன் என்றால் அதற்குப் பெயர் கருத்தாடல் இல்லை. எந்த அடையாளமும் இல்லாதவருடன் கருத்தாட அறிவு தேவையில்லை. எதைச் சொன்னாலும் சரிவரும்.
சரி எந்த அமைப்பும் இல்லாமல் கருத்தாடக்கேட்கும் நீங்கள் ஏன் “தமிழனாய்” மட்டும் வரச்சொல்கிறீர்கள்? அதென்ன “வசதியான” அடையாளமோ?
thurai
//எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதனை செயல்ப்படுத்துவோரிடம் எனது ஆதரவைத் தெரிவிப்பேன், அவர்களுக்குத் துணையாக இருப்பேன். அதற்கான உரிமை எனக்குண்டு. இந்த கொள்கைகளை முன்னெடுக்கும் அமைப்புகளை விமர்சிப்போரிடம் உங்களின் மாற்றுக்கொள்கைகள்/திட்டங்கள் எங்கே காட்டுங்கள் எனக்கேட்பதற்கும் எனக்கு உரிமை உண்டு.//சாந்தன்
போராட்டத்தின் ஆரம்பகாலத்தில், தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு, தமிழ்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி அவசியமென்றும், ஆயுதபோராடம் தொடங்கு முன் மக்கள் சமூக பொருளாதர விடுதலையை கையிலெடுத்த பின்னரே ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பது சரியான வழியென்றும் கருதப்பட்டது.
யாழ் சந்தையில் ஒரு இராணுவத்தை சுட்டுபோட்டு ஓடித்தப்பினால் அங்கு நிற்கும் மக்களிற்கு என்ன நடக்குமென்று அறியாதவர்களினால் வளர்க்கப்பட்டத்துதான் ஈழத்தமிழரின் ஒருதலைவர், ஒரு இயக்கம், முப்படைகள். அன்று கைவிரல்விட்டு எண்னும் தமிழர்களைப் பலிகொடுத்து வளர்ந்து, எண்ணிலடங்கா தமிழரை பலிகொடுத்தவர்கள் யார்?
மாற்றுக் கருத்துக்காரர் அன்று சொன்னது சரியா? அல்லது புலிகள்செய்தது சரியா? எந்த மாற்றுக் கருத்தாளரை சாந்தன் இங்கு தேடுகின்றார்? அவரின் கொள்கைகளை உருத்திரக்குமாரனிற்கும், பாதிரியார் இம்மானுவேலிற்கும் முதலில் தெரிவிக்கவும். இவர்கள் மிகுதியாகவுள்ள புலிகளா அல்லது 2ம் 3ம் கே.பி. களா என அறியவும்.– துரை
palli
//நான் ஏன் எந்த அமைப்பும் இல்லாமல் வரவேண்டும்? // உங்களோடு பல்லி மனம் விட்டு பேச;
//எனக்கென்று ஒரு கொள்கை உண்டு,!!// என்ன அது;?
//அதனை செயல்ப்படுத்துவோரிடம் எனது ஆதரவைத் தெரிவிப்பேன், // எவர் அவர்:
//அவர்களுக்குத் துணையாக இருப்பேன்.// புலிக்குதானே;
//அதற்கான உரிமை எனக்குண்டு.//நான் கூடாது என சொன்னேனா?
//இந்த கொள்கைகளை முன்னெடுக்கும் அமைப்புகளை விமர்சிப்போரிடம் உங்களின் மாற்றுக்கொள்கைகள்/திட்டங்கள் எங்கே காட்டுங்கள் எனக்கேட்பதற்கும் எனக்கு உரிமை உண்டு.//
இதுகான பதிலே முள்ளி வாய்க்கால் அல்லது தேசியத்தை தொலைத்து விட்டுஅதன் தலமையை தேடுவது,
//உலகமேலாம் எமது இனம், சகோதரம் எனக்கதை விட்டவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றனர் என அறியவில்லைப் போலும்.//
உன்மைதான் ஆனால் அதைதானே25 ஆண்டுகளுக்கு பின்பு உங்க நிலை; ஆக குமரியை விட கிழவியே திருமணத்துக்கு உகந்தவர் என்பதாகவே உங்கள் கருத்து உள்ளது,
//வாயைத்திறக்கவே அஞ்சிக் கொண்டிருக்கின்ரனர்.// இது உங்கள் கற்பனை, அப்படியானால் எப்படி பல்லி உருவாச்சு??
//எனது கொள்கைகளை முன்னெடுக்க உதவும் அமைப்பு அல்லது மக்கள் கூட்டம் போன்றவற்றின் அடையாளங்களை களைந்தால் தான் என்னுடன் கருத்தாடுவேன் என்றால் அதற்குப் பெயர் கருத்தாடல் இல்லை. // தளபதி போல் எனக்கும் மறதி கூட, ஆகவே பல்லி எங்கே அப்படி சொன்னேன்?
//எந்த அடையாளமும் இல்லாதவருடன் கருத்தாட அறிவு தேவையில்லை. எதைச் சொன்னாலும் சரிவரும்.:.//
இது பல்லிக்கே சரிவரும் சாந்தனுக்கல்ல;
//சரி எந்த அமைப்பும் இல்லாமல் கருத்தாடக்கேட்கும் நீங்கள் ஏன் “தமிழனாய்” மட்டும் வரச்சொல்கிறீர்கள்? அதென்ன “வசதியான” அடையாளமோ//
இல்லை மனிதனாக வாருங்கள் என அழைக்க நினைத்தேன்; ஆனால் அது உங்களால் முடியாத காரியம் என்பதை அறிந்ததால் தமிழனாக ஆவது வாருங்கள் என அழைத்தேன்;
சாந்தன்
//நான் ஏன் எந்த அமைப்பும் இல்லாமல் வரவேண்டும்? // உங்களோடு பல்லி மனம் விட்டு பேச;//
அப்போ இவ்வளவுகாலமும் என்னத்தை விட்டு பேசுகிறீர்கள்?
//எனக்கென்று ஒரு கொள்கை உண்டு,!!// என்ன அது;?// தமிழீழம்
//அதனை செயல்ப்படுத்துவோரிடம் எனது ஆதரவைத் தெரிவிப்பேன், // எவர் அவர்:/// போராடுபவர்கள்.
//அவர்களுக்குத் துணையாக இருப்பேன்.// புலிக்குதானே;// மேலுள்ள பதில்லைப்படிக்கவும்.
//அதற்கான உரிமை எனக்குண்டு.//நான் கூடாது என சொன்னேனா?// அப்போ ஏன் நான் எப்படிவரவேண்டும் என வரையறை விதித்தீர்கள்.
//இந்த கொள்கைகளை முன்னெடுக்கும் அமைப்புகளை விமர்சிப்போரிடம் உங்களின் மாற்றுக்கொள்கைகள்/திட்டங்கள் எங்கே காட்டுங்கள் எனக்கேட்பதற்கும் எனக்கு உரிமை உண்டு.// இதுகான பதிலே முள்ளி வாய்க்கால் அல்லது தேசியத்தை தொலைத்து விட்டுஅதன் தலமையை தேடுவது,/// மாற்றுக்கருத்து என்ன எனக்கேட்டால் இன்னும் காணம்.
palli
:://மாற்றுக்கருத்து என்ன எனக்கேட்டால் இன்னும் காணம்.// அன்று புலி தவறு என சொன்னார்கள்; இன்று தலவர் வரமாட்டார் என சொல்லுகிறார்கள், இரண்டுமே ஆக்கபூர்வமானவைதான்; ஆனால் நீங்களோ இல்லாததலைவனுக்கு இனுப்பு கேக் வெட்டி மகிழ்கிறீர்கள்,
//அப்போ ஏன் நான் எப்படிவரவேண்டும் என வரையறை விதித்தீர்கள்.//
அதுக்கான உரிமை பல்லிக்கு இருப்பதால்; அதுக்கான உரிமை பல்லிக்கு இல்லை என்பதை சொல்லும் உரிமைகூட உங்களுக்கு உண்டு அதுக்கு பதில் சொல்லவும் எனக்கு உரிமை;;;;;;
//மேலுள்ள பதில்லைப்படிக்கவும்./// மேலே எனில் யார் எழுதியதை?, நீங்கள் எழுதியதையா? அல்லதுபல்லி எழுதியதையா??
::// போராடுபவர்கள்.// இதுவல்லவா போராட்டம்; கரகம் கூட ஆடமுடியாத நிலைக்கு வந்த பின்னும் போராட்டம் என சொல்லுவது வேடிக்கைதான்; அதுசரி ஆயுத போராட்டமா ,அல்லது அகிம்சை போராட்டமா??
//தமிழீழம்// இப்படி மொட்டையாய் சொன்னால் எப்படி; நாடு கடந்த தமிழீழமா?? அல்லது நாடு கடத்தபட்ட ரமிலீலமா??
:://அப்போ இவ்வளவுகாலமும் என்னத்தை விட்டு பேசுகிறீர்கள்?// சிலர் உங்களுக்கு(புலிக்கு) பதில் சொல்லியதால் உயிரைகூட விட்டிருக்கிறார்கள் என்பதை சாந்தன் புரிய முயற்சிக்கவும்;
மாயா
வன்னியை சிறீலங்கா இராணுவம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் எப்படிக் கைப்பற்றியது. மன்னார் முள்ளிக்குளம் / சிலாவத்துறையில் இடம் பெற்ற கண்காட்சி இது. ( 2010 நம்பர் 21 முதல் 30 வரை) வீடீயொ இணைப்பு:
-http://video.lankadeepa.lk/videos/514/diyakava-yuda-abyasaya
santhanam
மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைகள் மாற்றுக் கருத்துக்களுக்கு கொடுக்கும் மரியாதை பலருக்கும் தெரிந்திருக்கும் சீதனம் வாங்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால். சமுக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்த ஒருவனின் முயற்சியைப் பாராட்டாமல். உவருக்கு ஏதும் குறையிருக்குது போல என்று வக்கிரப்படுத்தும் பாரம்பரியம் எங்களுடையது
மாற்றுக்கருத்துக்கு மண்டையில் போடுவது தான் தீர்ப்பாக இருந்தது இந்தப் பாரம்பரியம் புலன் பெயர்ந்த நாடுகளுக்கும் பரவி சபாலிங்கம் கொலையில் முடிந்தது
ஊருக்கு வா கவனிக்கிறம் என்று பணிவன்புடன் வேண்டுகிற கூட்டம் இங்கே மலிவானது இப்போது வெளியில வா என்றவர்களின் தலைக்கறுப்பை வெளியில் காண ஊருக்கு வந்தால் கவனிப்பதற்கும் ஊரிலும் யாரும் இல்லாமல் போய் விட்டார்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வது என்பது சிந்தனையில் இருப்பதேயில்லை.மாற்று அமைப்புக்களை தடை செய்வதன்மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுயன்றார் ஆனால் நீண்டகாலத்தில் மிக மோசமான எதிர்மறை விளைவுகளையே தோற்றுவித்தது புலிகள் தமது நட்புசக்திகளை அணிதிரட்டி எதிரியை தனிமைபடுத்துவது என்பதற்கு பதிலாக தன்னை தனிமைபடுத்தி. தனது எதிரிகளை பெருக்கி அவர்களை அணிதிரட்டும் பணியையும் புலிகளே செய்து முடித்து கொடுத்தார்கள் விடுதலைப் போரட்டத்தை உளமாற நேசித்த பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கும் தயாராக இருந்த பல அமைப்புக்கள் இந்திய சிறிலங்கா அரசையும் நோக்கி தமது உயிர்பாதுகாப்பிற்காகவே நகரும்படி நிர்பந்திக்கபட்டார்கள் இது யார் தவறு??