இனியபாரதிக்கு பத்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

Iniyaparathy_TMVPமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளில் இணைந்தவருமான, தற்போது அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக பணியாற்றும் இனியபாரதி என்ற கந்தசாமி நிசாந்தனுக்கு கல்முனை மேல் நீதிமன்றினால் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்பபை வழங்கினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தனை இனியபாரதி 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும், இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இனியபாரதி இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. பத்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அத்துடன், 25 000 ரூபா அபாராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். குறிப்பட்ட பத்து வருடகாலத்தில் எதிரி ஏதாவது குற்றச்செயலில் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையுடன் இதனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரியின் பொதுச் சேவை மற்றும், எதிர்காலத்தில் அவர் மேற்கொள்விருக்கும் சேவைகள் என்பனவற்றைக் கொண்டு இத்தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இதை செய்தியாக போட்டிருக்க கூடாது; உன்மையில் வானிலை அறிக்கையாய் சொல்லியிருக்க வேண்டும்;
    மழை வரும் அல்லது வராது என்பதுபோல் மக்களை கலக்கிய புயல் சிறிது காலம் சிறையில் மையம் கொண்டிருப்பதால் மக்கள் பயமின்றி நடமாடலாம் என்பதே சரியாக இருக்கும், அதை விட்டு இவருக்கு எல்லாம் ஒரு செய்தியா??

    Reply
  • மாயா
    மாயா

    ஒத்தி வைத்த சிறைத் தண்டனை என்பது வெளியில் இருக்கலாம் என்பது பல்லி. இவர் சிறையில் அடைக்கப்படவில்லை என நினைக்கிறேன். புலிகளுக்கு எதிராக போராடி வெற்றி கொண்ட சரத் சிறையில் > நம் புலிகள் வெளியில். இவர்கள் எப்படியெல்லாம் புலிகளை காட்டிக் கொடுத்திருப்பார்கள். இப்ப மாவீரர் கொண்டாடுறவங்களையும் > விரைவில் அரசோடு பார்க்கலாம்.

    இப்பிடியும் நடக்குதுதானே:
    நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய பிரதநிதி ஒருவர் இலங்கை சென்று உள்ளார் பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய முக்கிய பிரதநிதியாக செயற்பட்டு வரும் வேலுமயிலும் மனேகரன் இலங்கைக்கு சென்று உள்ளார் என தெரியவருகிறது. இவரின் விஜயம் தொடர்பாக நாடுகடந்த அரசின் வெளியுறவுதுறை அமைச்சர் தயாபரனிடம் கேட்ட பொழுது இவரின் விஜயம் பற்றி தனக்கு தெரியாது எனவும் நாடுகடந்த அரசின் பிரதநிதியாக செய்யபட்டு கொண்டு விஜயம் செய்வதை தாம் கண்டிப்பதாகவும் ஆனால் தனிபட்ட விஜயம் என்கின்ற போது தாம் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். இவருக்கான பயண ஒழுங்களை இலங்கை அரசு ஒழுங்களை செய்து உள்ளாதாகவும் தெரிவிக்கபடுகிறது. அரசினால் ஒழுங்கு செய்யபட்டிருக்கும் உல்லாச விடுதியில் தங்கி உள்ளாதாகவும் தெரியவருகிறது. இதேவேளை நாடுகடந்த அரசின் பிரதநிதிகளை இலங்கை கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதும் குறிப்பிடதக்கது.

    Reply
  • ashroffali
    ashroffali

    மாயா.. நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பற்றிய உங்கள் கருத்துக்கு இன்னுமோர் தகவல்.

    குறித்த வேலும் மயிலும் மனோகரன் நீண்ட காலமாக பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புகளை இரகசியமாகப் பேணி வந்தவர். கடந்த காலங்களில் அவரின் பல செயற்பாடுகளுக்கு அரசாங்சம் மூலம் இரகசிய நிதியுதவியும் வழங்கப்பட்டது. இவர்கள் இருபக்கத்துக்கும் நல்ல பிள்ளைகளாக காட்டிக் கொள்பவர்கள். ஆனால் அவர்கள் தான் நல்ல பிள்ளைகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள்.

    Reply