வட மாகாண சபைக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இவ்வருட காலபோக நெற்செய்கை இரண்டு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களின் பின்னர் இந்தளவு அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் செ.பத்மநாதன் இத்தகலை தெரிவித்துள்ளார்.
இந்த நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறுவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும், கடந்த சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லையே விவசாயிகள் இன்னமும் முழுவதுமாக சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.