சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம், வவுனியா, உட்பட வடக்கிலுள்ள அதன் அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள இந்த அலுவலகங்களை எப்போது மூடுவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை எனவும், அரசாங்கத்தோடு கலந்துரையாடி எப்போது மூடுவது என முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார். ஆனால் மன்னாரிலுள்ள அலுவலகம் இம்மாத இறுதியில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
வடக்கிலுள்ள அலுவலகங்கள் மூடப்பட்டதும் கொழும்பிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வடக்கின் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.