யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சமாதானத்திற்கான விருது பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் பயிற்சிகளைப் பெற்றுத் திரும்பிய பின்னர் வன்னியில் அவர் கடமையாற்றினார். வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி பிலிப்பைனஸில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிற்கு பயணமாகின்றார். விருது பெற்று நாடு திரும்பியதும், எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கொழும்பு மண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வைத்து அவருக்கு பாராட்டு நிகழ்வு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.