ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக் காலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்ற நிலையில் கொழும்பில் இந்நிகழ்வையொட்டிய வைபவங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு கொள்கின்றனர். மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்
இன்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கின்றார். இப்பதவியேற்பு வைபவத்தையொட்டி காலிமுகத்திடலில் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வுகளுக்காக கொழும்பு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை கொழும்பு கோட்டை, காலிமுகத்திடல் ஆகியவற்றிற்கான பாதைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த இரண்டாவது பதவியேற்பு வைபவம் பெருந்தொகை அரச நிதியை செலவு செய்து நடத்தப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி விமர்சித்துள்ளது.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் அவர் ஆற்றுகின்ற உரை நாளை சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு யாழ்.குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.
DEMOCRACY
இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மகிந்த அவர்கள்,பல ஆண்டுகாலமாக நல்லாட்சி நடத்த வாழ்த்துவோமாக?!.
இலங்கையில் முஸ்லீம்கள் “தமிழர் அல்லாதவர்களாக” மாற்றப்பட்டதற்கும்,இந்திய தமிழ்நாட்டில் பிராமணர்கள் “தமிழர் அல்லாதவர்களாக” விலக்கப்பட்டத்தற்கும்,”வெள்ளால(முதலியார்)கலச்சாரமே காரணம்”!.
ஆப்கானிஸ்தானில் குடி கொண்டிருக்கும் ரஷிய – ஜெர்மானிய கலாச்சாரங்கள் இதை தங்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றன!.
Relations between the Indian National Congress and the INDIAN MILITARY CASTES began to deteriorate when the moderate Brahmin leadership of the Madras Presidency Congress preferred not to oppose the harsh measures of the British against the INDIAN military castes.
The legacy of these strategies in the north and south of the subcontinent, embodied in the structure of the modern Indian army, is central to the emergence of modern Indian militarism. The gains of this demartialization were consolidated by favouring and encouraging non-military castes in Indian society.The more important of these were the Vellalas, Nadars and Adi Dravidas. The culture and values of the “peace loving” (Madras census, 1871) Vellalas who had “no other calling than the cultivation of the soil” eminently suited the aims of demartialization and suppression of the traditional military castes. In this the British were following local precedents which had been based on the principle that the best way to ensure control and security was to “have none there but cultivators”. Thus, under active British patronage the Vellala caste established its dominance, and its culture became representative and hegemonic in Indian society.The Nadars and Adi Dravidas were considered amenable to conversion. A large section of them had become Anglicans. The recruitment base of the Indian army in the Madras Presidency was constituted strongly in favour of these groups. The Dravidian ideology emerged as the cultural and academic basis for their pro-British politics, led by the newly arisen Vellala elite.The nascent Dravidian movement was clearly underpinned by the concerns of British administrators and Anglican missionaries (22) in consolidating the social, economic and religious gains of demartialization. This is why the early Dravidian school of Tamil studies and historiography had a strong political compulsion to reject, ignore or play down the dominant role of the traditional military castes in Tamil history and culture, and to assert that Tamil civilization was Vellala civilization. (Maraimalai Atikal, was the chief proponent of this view.).Thus in the early decades of the twentieth century we find two contending narratives (23) of Tamil national identity – the ideology and caste culture of the anti-British and “turbulent” military castes and the ideology and caste culture of the pro-British and “peace loving” Vellala elite – claiming authentic readings of the Tamilian past and present. The one claiming that the “pure Tamils” were Vellalas.
இந்த “வெள்ளால கலாச்சாரத்திற்கு” ஆதரவாக இருந்த மேற்குலகம் தற்போது தலைக்கீழாக மாறியுள்ளது. தற்போது இந்த “வெள்ளால கலாச்சாரம்” இலங்கை ஆளும் வர்கத்தையும், சீன ஆளும் வர்கத்தையும் பிடித்து தொங்க முயற்சி செய்வது சரியாக வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!. இந்த கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டு நிலைமையின் “சீரியஸை” புரிந்துக் கொண்டு ஒரு சரியான, நிலையான அரசியலை முன்வைப்பதே சாலச் சிறந்தது.
அஜீவன்
இதயம் கனிந்த வாழ்த்துகள். இனியாவது அனைத்து மக்களும் மகிழும் மாற்றத்தை அதிபர் கொண்டு வர வேண்டும். அதுவே ஒற்றை ஆட்சிக்குள் வாழும் மக்களுக்கு நம்பிக்கையை தரும். இலங்கை எமது நாடு எனும் உணர்வைத் தரும்.
Ajith
இலங்கையின் இறையாண்மையை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தாரை வார்த்து கொடுத்து, ஜனநாயக விழுமியங்களை எல்லாம் தூக்கிஎறிந்து லடச்சகனக்கான மக்களை படுகொலை செய்து நாட்டையே சுடு காடாக்கி லஞ்சம் ஊழல கொலை கொள்ளை கடத்தல் மன்னனாக இராணுவ ரீதியான ஒரு சர்வாதிகார முடியாட்சி ஒன்றை நிறுவி பெருமை தேடித்தந்த இடி அமின் வழிவந்த கொடிய மன்னனே உம்மை மக்கள் தூக்கி எறியும் காலம் மலர்ந்தே தீரும்.
நந்தா
முதலி என்றால் “பல்லவ” என்பதே அர்த்தம். இதில் சூத்திரர்களான வெள்ளாளர்கள் எப்படி கூத்தடிக்க முடியும்?
தமிழர்களுக்கு தங்களின் வரலாறு தெரியாமல் ?
பார்க்கப் போனால் “கைகோளர்” என்பவர்களே பல்லவர் பரம்பரை என்பதற்கு இடமுண்டு!
பிள்ளை என்பதே வெள்ளாளர்களின் சாதிப் பெயர்.
DEMOCRACY
நந்தா!, தவறான திசையில் சிந்திக்கிறீர்கள். இங்கு எந்த ஜாதியையும் குற்றம் சொல்லவில்லை. எல்லா ஜாதிகளை சேர்ந்த “ஏரியா பொருப்பாளர்களுக்கும்” மன்னர்களால் “முதலி பட்டம்” வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய தகுதி “விசுவாவசம்” என்பது. வெள்ளாளர்கள் வேளாண்மை செய்தவர்கள் மட்டும் இல்லை. கணக்குப்பிள்ளை, அமைச்சர்களும், கோயில் நிர்வாகிகளும் அடங்குவர். இங்கு நம்முடைய பொருள், “வெள்ளாள கலாச்சாரம்” என்பதாகும்!. அதில் நீங்களும், நானும் கூட அடங்குகிறோம்!. அது பணிந்து போதல் விவேகம் என்கிறது, அதிகார வர்கங்களுக்கு காவடி தூக்குதல் பிழைக்கிற வழி என்கிறது!. தனிப்பட்ட ரீதியில் இவைகள் சரியாக இருக்கலாம், இந்த கலாச்சாரம் இட்டுச்சென்ற பாதை அதீத “வித்தியாசமான முட்டாள்தனத்தை” தந்திருக்கிறது ஏன் என்பதே கேள்வி?. இதை நம்பியே பிழைக்கும் வழி தேடி ஜால்ரா போட்டோம்?. உலகில் மற்ற மக்கள் கூட்டம்போல், “நார்மலான பிரத்தியேக வழியை” ஏன் முன் வைக்க முடியவில்லை?. அல்லது “அதீத வித்தியாசமான அழிவுகளிலிருந்து” பாதுகாக்க முடியவில்லை?….
மாயா
தினமும் தற்கொலை – கொலை என இருந்த நாட்டில் இப்போது வேறு பிரச்சனைகள் தெரிகின்றன. போர் காலத்தில் ஓடுவதையும் ; ஒழிவதையும் தவிர சிந்திக்க நேரமே மக்களுக்கு இருக்கவில்லை. இப்போது கடந்த 30 வருட கால பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிகின்றன.
இவைகளை உடனடியாக வெல்வது இலகுவல்ல. இருந்தாலும் ஓரளவாவது நிம்மதியாக வாழ பிரபாகரன் என்ற மாமனிதன் வழி செய்தான். அதாவது மகிந்த என்ற மனிதனை அரியணை ஏற்றினான். இரண்டாவது பிரபாகரன் என சிங்கள மக்கள் மகிந்தவை சொன்னாலும் ; பங்கருக்குள் பதுங்காமல் பகிரங்கமாக திரிவதை வரவேற்கிறேன். அதே போல மக்களை தினசரி கொல்ல சிந்திக்காது ; சிதைந்து போயுள்ள தேசத்தின் சின்னா பின்னங்களை சீர் செய்யும் மகிந்தவை பாராட்டுகிறேன். பழுது பட்டுப் போயுள்ள அனைத்து மக்களது இதயங்களையும் சரி செய்து இணைய வைக்க இப்போது கிடைத்த காலத்தை பயன்படுத்த வாழ்த்துகிறேன்.
மகிந்தவின் பதவியேற்பு வைபவம்:
-http://www.youtube.com/watch?v=slimGwN5UwI&feature=player_embedded
Tharany.s
இதயம் கனிந்த வாழ்த்துகள்
நந்தா
வெள்ளையர்கள் “முதலி(யார்)” என்பவர்கள் யாரென்பதைக் கண்டறிந்து அந்தப் பெயர்களை தங்கள் விசுவாசிகளுக்கு பட்டங்களாக வழங்கியுள்ளனர்.
தமிழர்கள் பல்லவர்களை மூவேந்தர் பட்டியலில் சேர்க்காத மர்மமும் அதுதானோ?
DEMOCRACY
Many sources describe Bodhidharma, the founder of Chan Buddhism which later became known as Zen school of Buddhism in Japan, as a prince of the Pallava dynasty, a contemporary of Skandavarman IV and Nandivarman I, and the son of Simhavarman II, though this is debatable.
Etymology:The word Pallava means branch in Sanskrit, in contrast with Chola meaning new country, Pandiya meaning old country and Chera meaning hill country in Sangam Tamil lexicon. The Pallavas are considered to be later offshoot of Cholas, who made Kanchipuram their capital and ruled Northern Tamil Nadu and southern Andhra Pradesh (till Northern Circars). They have also conquered Southern Karnataka. Anabhayan, in which Sekkizhar who was a minister of him, was also ruled from Kancheepuram.
DEMOCRACY
…நந்தா, குறிப்பிட்ட ஜாதி பெருமையை பேசுவதால் மீண்டும் தவறான வழியிலேயே சிந்திக்கிறோம்!. பிராமண், சூத்திர? பெண்களிடையே பாலியியல் வன்முறையை தூண்டுவதலாலேயே திராவிட இயக்க இளைஞர்களிடையே உணர்ச்சியைத் தூண்டி, சில “பாலியியல் பேச்சாளர்கள்” வளர்ந்தனர். மகிந்த ராஜபக்ஷே இலங்கைத் தமிழர்களின் அரசியலை (தவறான?)தோற்கடித்து வெற்றி பெற்றிருப்பதாக சொல்லுகிறார்கள். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், தமிழநாட்டு தமிழர்களும் வெவ்வேறு தளங்களில் வாழ்கிறார்கள் இவர்களிடையே தொப்புள் கொடி உறவை ஏற்படுத்துவது முட்டாள்தனம், இன்னொரு அடிபுடிக்கே வழிவகுக்கும். இதை விடுத்து, இலங்கையில் யதார்த்தமான, சிங்கள அரசை அனுசரித்து வாழ முடிவு செய்திருக்கும் “நெர்டோ” ஆதரவாளர்கள் போல், வருங்கால “அரசியலை” யாரும் முன்வைப்பார்களா?. “போதிதர்மா” பெருமை பேசுவது தற்போது அறிவீனம். ஆப்கானிஸ்தானில் நிலைக் கொண்டிருக்கும் சக்திகள் நிச்சயமாக, மகிந்த ராஜபக்ஷே இலங்கையில் கண்ட வெற்றிகளை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவதை விரும்புகின்றன. அதனால்தான் தொடரும் இலங்கை இராணுவ முஸ்தீபுகள். இதற்கிடையிலான சூமூக உறவை நாம் தேட வேண்டும், ஆனால் தமிழர்களின் அழிவுகளினால் பொருளாதார இலாபம் அடைந்த “வெள்ளால கலாச்சாரம்” இந்த உறவுக்கு வழி வகுக்குமா, அல்லது மீண்டும் அழிவுகள் மூலம் இலாபம் சம்பாதிக்குமா?!.
நந்தா
பதியப்பட்டுள்ள வரலாற்றில் பல்லவர்களின் ஆட்சிக்குப் பின்னரே “சோழர்களின்” கதைகள் வருகின்றன. அப்படியிருக்க பல்லவர்களின் மூதாதையர்கள் சோழர்களாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
சாதி பற்றிய பிரச்சனைகளில் சரித்திரத்தை குழி தோண்டி புதைப்பது நல்லதல்ல!
பல்லவர் காலத்து கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவையே அதிகமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவோ என்னவோ பல்லவர்களின் அரசியல் பரம்பரைகளை “தமிழ்” என்ற வட்டத்துள் சேர்க்காது விட்டுள்ளனர்.
DEMOCRACY
நந்தா, முற்கால சோழர்கள்(300 கிமு – 848 கிபி), இடைக்கால சோழர்கள்(848கிபி -1070 கிபி), பிற்கால சோழர்கள்(1070 கிபி-1300கிபி), இருந்ததாக வரலாறு. பல்லவர்கள் காலம் கிபி 500 களில் துவங்குகிறது. இடைகால சோழர்கள் காலத்திலேயே தமிழும், சமஸ்கிருதமும் கலந்தே முக்கிய பங்காற்றின. முற்கால சோழர்கள் காலத்திலேயே சமஸ்கிருதம் இல்லை. மேலும் சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் திருமண உறவு இருந்துள்ளது, பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று நாவல்களில் பார்த்தால் தெரியும். /Cholas also are mentioned in the Pillars of Ashoka (inscribed 273 – 232 BCE) inscriptions, where they are mentioned among the kingdoms, which, though not subject to Ashoka, were on friendly terms with him./–
10 ஆம் நூற்றாண்டிலேயே தற்போது சைவம், தேவாரம், நாயன்மார்கள் என்ற பக்தி இயக்கம் மூலமாக “தூய தமிழ்? சைவர்கள்” சமஸ்கிருதத்தை எதிர்த்தார்கள். இது நாலாம் நூற்றாண்டிலேயே ஆதிசங்கரர்(800 கிபி) காலத்திலேயே புத்தமதத்தை சமரசம் செய்து துவங்கிவிட்டாலும், சாதாரணமக்கள் புரிந்துகொள்ள “கண்ணுக்கு தெரியும் பொருள் மீது” பக்தி (கண்டபிளேஷ்ன்)என்று இலகுவாக்கினார்கள்!. அதனால்தான் விஞ்ஞான பூர்வமாக மட்டுமே எதையும் புரிந்துக்கொள்ளும் “மேற்குலகத்தின் புரிதல்” இதிலிருந்தே துவங்குகிறது!.
DEMOCRACY
மேற்குலகின் “ஆசியாவைப்பற்றியான” புரிந்துணர்வு,ஜப்பான் ஊடாக போதிதர்மாவின் “சென் புத்தமதம்” மூலமாக “Paul Carus, Ph.D. (1890)” என்ற ஜெர்மானியரால் ஏற்ப்படுகிறது!.இக்காலத்திலேயே(1875)சென்னை அடையாற்றில் இந்துமதத்தை புரிந்துக் கொள்ள தியோசபிகல் சொசைட்டி துவங்கப்படுகிறது.பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக,சுவாமி விவேகானந்தரின் உரை 1893 ல் சிகாகோவில் நடைபெருகிறது.இரண்டாம் குலோத்துங்கன்,கர்நாடக சாலுக்கிய வம்சத்திற்கும் ராஜராஜனின் பேரனுக்கும் பிறந்த முதலம் குலோத்துங்கனின் மகன்(1145 கிபி).அப்போது புத்த,ஜைண மதம் காரணமாக பாலி,பிராகிருத மொழிகள் ஆதிக்கம் செலுத்தின.புத்தர் வாழ்ந்த பகுதி மொழி பாலி மொழி,அதனால் அவர் சமஸ்கிருத மொழியில் இருந்த இந்துமத சடங்குகளை எதிர்த்தார்.அதேபோல்தான் பக்தி இயக்கத்தினரும்,சதாரணமக்கள் புரிந்துக் கொள்ள,இந்துமதம் வளர தமிழை பயன்படுத்தினர்.இதேபோல்தான் இந்தி,உருது மொழிகளில் கபீரின்(1460 கிபி)போதனைகள்,குருநானக்கின் சீக்கிய போதனைகள்.
பக்தி இயக்கத்தின் விஞ்ஞான பூர்வமான? விளக்கங்களே மேற்குலகம் இந்து – புத்த மதங்களை புரிந்துக் கொள்ள உதவியது.
ஆனால் தூய தமிழ்? சைவ கலாச்சாரம் வளர்ந்தது,இரண்டாம் குலோத்துங்கன்(அனபாயன்)காலத்தில் இந்துக்கோயில்கள் அதனுடைய நிலம் வெள்ளாலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது,பொருளாதாரத்தை கைப்பற்றிய அவர்கள்,சமஸ்கிருத – பிராமண மதத்தை கைப்பற்ற முடியவில்லை,பக்தி இயக்கத்தின் தமிழ் இலகுதன்மை இவர்களுக்கு வாய்ப்பாகபோய்,சிதம்பரம் கோயிலில் தகராறாக முடிந்தது(பார்க்க கமலஹாசனின் தசாவதாரம் படம்).…நான் இதுவரை இணையங்களில் எழுதியவைகளை தொகுத்து,சில பகுதிகளைச் சேர்த்து,நூலாக சென்னையில் வெளியிட உள்ளேன்.தொடர்புகளுக்கு – neuwied@rediffmail.com
நந்தா
அசோகனின் கல்வெட்டுக்களில் சோழர்கள், பாண்டியர்கள், கேரளத்தவர்கள்,சற்புத்திரர்கள் தாமிர பரணி என்பன பற்றிக் குறிப்பிடப்பட்ட பொழுதும் தமிழர் வரலாறில் எந்தக் கல்வெட்டும் காணப்படவில்லை.
ஆயினும் இலங்கயில் ஐந்தாம்நூற்றாண்டில் எழுதப்பட்ட “மகா வம்சம்” எலார என்ற சோழ மன்னன் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆயினும் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் இந்த சோழர் பற்றி தகவல்களைக் காணவில்லை.
பல்லவர்களின் வரலாறுகள் முழுமையாக ஆராயப்படவில்லை என்றே கருதுகிறேன். அசோகன் காலத்துப் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும், கிரந்த பாஷையிலும் பல்லவர்கள் கல்வெட்டுக்களை விட்டுச் சென்றதன் காரணங்கள் என்ன?
palli
இந்த இரண்டாவது பதவி காலத்திலாவது இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் உருவாகாமல் செய்து மூவின மக்களும் ஒற்றுமையுடனும் சமனான பொருளாதாரம் கல்வி தொழில் என பலத்திலும் பாகுபாடின்றி வாழ உங்கள் அதிர்ஸ்ட பரிசான 18வது திருத்த சட்ட அமூலை பயன்படுத்தி
இலங்கை செழிப்புடன் வாழ வழி செய்ய முயலவேண்டும் என உங்கள் குலதெய்வங்களான இந்தியா, சீன பாகிஸ்தானை வேண்டி வாழ்த்துகிறேன்;
குடிமகன் பல்லி;
ashroffali
பல்லி.. 18ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் மார்ச் தொடக்கம் ஜுன் வரையான காலப் பகுதிக்குள் நிச்சயமாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்டும். ஆனால் அது நாங்கள் எதிர்பார்ப்பதாக இருக்காது.
அதாவது மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கும். மாகாண சபை அமைச்சுகள் ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது அதே விடயம் சம்பந்தமான மத்திய அரசின் அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின்றி அதனை நடைமுறைப்படுத்த முடியாது போகும். தவிரவும் எந்த நேரத்திலும் மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பாலும் இன்னும் ஒரு வருடம் மட்டில் கழிந்து தான் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். இம்முறை வடமாகாண சபைத் தேர்தலின் போது குறைந்தது மூன்று சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் தற்போதைக்கு நடந்து முடிந்துள்ளது. அமைச்சரவையிலும் ஒருவர் இடம்பெறுவார்.
அத்துடன் மத்திய அரசின் சிங்களக் குடியேற்றத்தை தீவிரப்படுத்தும் முயற்சிகளுக்கு மாகாண சபைகள் துணை போக நிர்ப்பந்திக்கப்படும்.
இதற்கு மேலும் இன்னும் பல திட்டங்களும் தீட்ட்பபட்டுள்ளன. படிப்படியாக அவற்றை பின்னூட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவேன்.
சாந்தன்
//….பல்லி.. 18ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் மார்ச் தொடக்கம் ஜுன் வரையான காலப் பகுதிக்குள் நிச்சயமாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்டும். ஆனால் அது நாங்கள் எதிர்பார்ப்பதாக இருக்காது…..//
இதில் என்ன புதினம் இருக்கிறது. வழமையாக நடப்பது தானே? அதிகாரத்தைக் கொடுப்பது போல் சட்டம் எழுதுவது பின்னர் குறுக்கு வழியால் எடுப்பது. ஒன்றும் புதிதல்ல அஷ்ரஃப் அலி. நீங்கள் தான் ஏதோ மஹிந்தா நல்லவர். ஆனால் அவரைச் சுற்ரி இருக்கும் கூட்டம் தான் மோசமானவர்கள். அதுவும் போர் முடிந்தவுடன் இருப்பவர்கள் என வசதியாக உங்களைத் தவிர்த்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். போய் ரோட்டில் நிற்கும் தமிழனிடம் கேளுங்கள் சொல்வார்கள் சிங்கள அரசுகள் எப்படிப்பட்டவை என!
உ+ம்: சிங்களம் ஆட்சி மொழி ஆனால் தம்ழுக்கு போதிய அதிகாரம்
தம்ழுக்கு முழு அதிகாரம் ஆனால் நடைமுறைப்படுத்த தமிழ் ரைப்ரைட்டர்கள் இல்லை
பெளத்தம் அரச மொழி ஆனால் மற்றவர்களும் மதசுதந்திரம் உண்டு!
இப்படிப்பல உதாரணங்கள் சொல்லிகொண்டே போகலாம். முதல் வரியில் கொடுத்து அடுத்த சொல்லில் எடுப்பது!