யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Douglas_Devananda”யாழ் பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக் கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும். அவர்கள் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும்.”

Senate_Members_Meet_DD_29Oct10டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் (ஒக்ரோபர் 29, 2010 இல் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடிய போது தெரிவிக்கப்பட்ட கருத்து.)

யாழ் பல்கலைக்கழகம் அதன் கல்வியியல் தரத்திலும் நிர்வாகத்திலும் மிகக் கீழ்நிலையை அடைந்துள்ளது மட்டுமல்ல ஒரு கல்விக் கட்டமைப்புக்கு இருக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளையே இழுந்துள்ளமை முன்னைய கட்டுரைகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தாக்கத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களே பிரதிபலித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் உபவேந்தர்களாக பொறுப்பேற்றவர்கள் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்படாமை பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களும் அதற்கான பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றுவதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை தெரிவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு எட்டியுள்ளது. நவம்பர் 09 2010ல் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுநாள். அடுத்த பல்கலைக்கழகக் கவுன்சில் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் – வேட்பாளர்களைத் தெரிவதற்கான தேர்தல் நாள் குறிக்கப்படும். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.

உபவேந்தரிடம் யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்பார்பு:

யாழ் பல்கலைக்கழகம் தனது உபவேந்தருக்கான விண்ணப்பத்தை கோரும் அறிவிப்பில் உபவேந்தராக வருபவரிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை தெளிவாகவே வரையறுத்து உள்ளது. ”யாழ் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது. -The vision of the University of Jaffna is to be a leading centre of excellence in teaching, learning, research and scholarship. அதனுடைய முதற்கடமை தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும். – Its priorities are serving the country to improve the quality of Higher Education and promote research relevant for the development of the country in general and the Northern Region in particular.”என யாழ் பல்கலைக்கழகத்தின் பார்வையும் இலக்கும் தெளிவாகவே வரையறுக்கப்பட்டு உள்ளது.

”பல்கலைக்கழகத்தினுடைய முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சீரான நிர்வாகம் என்பவை உபவேந்தருடைய பொறுப்பு. – The Vice Chancellor shall be responsible for maintaining transparency, accountability and good governance in the management of the affairs of the University. உபவேந்தர் கல்வியியல் தலைமைத்துவத்தை வழங்குவதுடன் நிர்வாகக் கொள்கைகளை உருவாக்குவது, அறிமுகப்படுத்துவது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புடையவர். – The Vice Chancellor should provide academic leadership and is responsible for formulating, introducing and carrying out a streamlined management policy.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

”உபவேந்தர் பல்கலைக்கழகத்தினுடைய இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவராக இருக்க வேண்டும். – The Vice Chancellor shall be a person with a vision to carry forward the vision and goals of the University through his/her intellectual as well as managerial brilliance. அத்துடன் தேசத்தினுடைய தேவைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே உயர்கல்விக் கொள்கைகளை வகுக்கவும் பலப்படுத்தவும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி போன்ற பல்கலைக்கழகத்தின் கல்வியியல் செயற்பாடுகளை கால வரையறை மதிப்பீடுகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டும். – In addition, the Vice-Chancellor is called upon to identify needs of the nation in terms of national policies of higher education and should be able to strengthen the time tested values for the advancement of the University through academic activities including research & development.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வியியல் முகாமைத்துவப் பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைக் கல்விச் சமூகம் குறிப்பாக தமிழ் கல்விச் சமூகம் எப்போதும் எதிர்பார்க்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் நிலை:

ஆனால் துரதிஸ்ட்டவசமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் உப வேந்தர் பதவிக்கு வந்தவர்கள் பல்கலைக்கழகத்தின் இலக்கான ‘தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும்’ என்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையான ‘கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது’ என்பதனையோ பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

கல்வியியல் தகமை, நிர்வாகம், நிதிக் கையாள்கை என யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு அம்சங்கள் மிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. இதற்குக் காரணம் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமல்ல. தொண்ணூறுக்களின் நடுப்பகுதியின் பின் யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமே இடம்பெற்றது. தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ தான் யாழ் பல்கலைக்கழகத்தினை கீழ்நிலைக்கு இட்டுச்சென்றது என்பதனை முன்னைய கட்டுரையில் பார்த்துள்ளோம்.

மேலும் ”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என ஓடிற்றர் ஜெனரல் எஸ் சுவர்னஜோதி தனது 2009ம் ஆண்டு ஓடிற் அறிக்கையில் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

செப்ரம்பர் 09 2010ல் Firedrich Ebert Stifung என்ற ஜேர்மன் அமைப்பின் அணுசரணையில் இயங்கும் பருத்தித்துறை அபிவிருத்தி நிதியம், யாழ்ப்பாணத்தின் விவசாய மீன்பிடிப் பொருளாதாரத்தை அறிவியல் பொருளாதாரம் ஆக மாற்றுவது பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள கலிவியியலாளர்களும் மாணவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றுகையில் ”அறிவு என்பது மற்றைய எல்லாத்துறைகளைக் காட்டிலும் செல்வத்தை உருவாக்கக் கூடியது” என்றார் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான HSBC வங்கியின் மதிப்பீடு – அபாய முகாமையாளார் நிரஞ்சன் நடராஜா. யாழ்ப்பாணத்தில் வடக்கில் இயற்கை வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மூளைவளம் நிறையவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பல்கலைக்கழகங்கள் சந்தைக்கு ஏற்ப கல்வியை வழங்கி பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமே ஒழிய, பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகளை சந்தை உள்வாங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் என்பது பொருளாதாரச் சந்தையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஒரு கல்வி நிறுவனமல்ல. பொருளாதாரச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வது அதன் முக்கிய பாத்திரங்களில் ஒன்று. இல்லாவிட்டால் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற புள்ளிவிபரம் மட்டுமே மிஞ்சும்.

அதேசமயம் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் சமூக இயக்கத்தில் – நாட்டின் இயக்கத்தில் பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்கின்றன. இன்று அறிவியல் என்பது சமூகத்தின் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற விடயமாக உள்ளது. இந்த அறிவியலின் மையமாக பல்கலைக்கழகங்களே உள்ளன. அதனால் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம் முன்னரைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதுடன் அதன் தேவை பரந்ததாகவும் உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமூகம் எவ்வாறு இருந்தது என்ற வரலாற்றை ஆராய்வதுடன், அடுத்த சில 10 ஆண்டுகளில் சமூகம் எவ்வாறு மாற்றமடையும் விஞ்ஞர்னம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு அம்சங்களும் எவ்வாறான நகர்வை எடுக்கும், எவ்வாறான நகர்வை எடுக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்களே ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் அரசியலாளர்கள் முடிவுகளை மேற்கொள்கின்றனர்.  இவற்றுக்கான தகமையை யாழ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளதா என்பதற்கு கீழுள்ள மதிப்பீடு சாட்சியாகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5000 மாணவர்கள் பட்டப்படிப்பையும் 600 மாணவர்கள் பட்டமேற்படிப்பையும் மேற்கொள்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களை தொழில் நிறுவனங்கள் கூடுதலாக விரும்புவதாக இலங்கையில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் பல்கலைக்கழகம் போன்ற பாராம்பரிய பல்கலைக்களகங்களின் கல்வியியல் பலவீனங்கள், தலைமைத்துவம் அற்ற தன்மை, நிர்வாகச் சீர்கேடுகள் என்பன தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையைத் துரிதப்படுத்தும் நிலையும் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் 2010 தர வரிசைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10வது இடத்தில் உள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் முதலாவது இடத்தில் உள்ளது. உலகத்தர வரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் 1903ம் இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 9309ம் இடத்தில் உள்ளது. (தகவல்: யூலை 2010: Rankings Web by the Cybermetrics Lab CSIC)

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு:

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சியின் வேகத்தை மறுபக்கம் திருப்புவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடைய ஒருவர் உபவேந்தராக வருவது முக்கியமானது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு கீழ் வருவோர் தங்களை முன்நிறுத்தி உள்ளதாகத் தெரியவருகின்றது. இப்பட்டியல் இன்னமும் பல்கலைக்கழகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Vice-Chancellor
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India) – Dean, Faculty of Arts
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Dean, Faculty of Graduate Studies
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – Department of Bio Chemistry
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
தனேந்திரன் – Unuion Member with 2 A/L s

யாழ் பல்கலைக்கழகத்தைச் சாராத விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் ரட்ன ஜீவன்ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
ராஜரட்னம் – (இங்கிலாந்தில் இருந்து சென்றுள்ள பொறியியல் பட்டதாரி. மேலதிக விபரம் தெரியவில்லை.)

இவர்களில் இருந்து மூவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவரை ஜனாதிபதி உப வேந்தராக நியமிப்பார். பல்கலைக்கழகத்தில் இம்மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்படாதவர் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட மாட்டார். பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் தெரிவுக்காக நடத்தப்படும் வாக்கெடுப்பில் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இப்பல்கலைக்கழகக் கவுன்சிலில் 12 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் (12 + 1) 13 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து, சமூகப் பொறுப்புடையவர்கள் University Grand Commission ஆல் நியமிக்கப்படுவர். இந்தப் 13 பேரினதும் நியமனத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு உண்டு.

ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் மூன்று வெவ்வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். ஒருவருக்கு மட்டும் வாக்களித்து மற்றையவர்களுக்கு வாக்களிக்காமல் விடுவதன் மூலம் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

கடந்த காலங்களில் வேட்பாளருக்கும் வாக்களிக்கத் தகுதி இருந்தது. இம்முறை போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை எனத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் என் சண்முகலிங்கம் – (Vice Chancellor),
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – (Dean/Graduate Studies),
பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine),
பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce),
கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture),
பேராசிரியர் என் ஞானகுமரன் – (Dean/Arts),
பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science),
பேராசிரியர் செல்வி வி அரசரட்ணம் – (Rep of Senate),
பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate),
கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus),
திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus),
திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.),
அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.),
திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.),
திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.),
திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.),
திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.),
இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.),
திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.),
திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCS க்கு பொறுப்பானவர்.),
திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.)
திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்),
சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்),
டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

கல்வியியல் ஆளுமையினதும் முகாமைத்துவத் திறமையினதும் அடிப்படையில் உபவேந்தர் தெரிவு இடம்பெற வேண்டும்:

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம்  அங்கு நீண்டகாலம் பணியாற்றிய துறைத் தலைவர்கள் என் ஞானகுமரன், எஸ் சத்தியசீலன் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்கு போட்டியிடுகின்றனர். இப் பல்கலைக்கழகத்தை அமைச்சர் குறிப்பிட்டது போல் மிகச் சிறந்த முறையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் அவர்கள் முன்னேற்றுவதற்கு மாறாக பல்கலைக்கழகத்தினைச் சீரழிப்பதற்கே பல்வேறு வழிகளிலும் பங்கேற்று இருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுகின்ற பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களுடைய பீடங்களின் நிலையும் மோசமானதாகவே உள்ளது.

இக்கட்டான காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கற்பித்தோம் என்ற தகுதி மட்டும் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றப் போதுமானதல்ல. இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்கள் அதிகாரத் துஸ்பிரயோகமும் பாலியல் துஸ்பிரயோகமும் நிதி, நிர்வாகத் துஸ்பிரயோகமுமே செய்துள்ளனர். வடமாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு இவர்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

கடந்த காலங்களில் இருந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி இறுக்கமான தடுப்பை போட்டு, அப்பல்கலைக்கழகத்திலேயே படித்து, அங்கேயே பட்டம் பெற்று, அங்கேயே வேலையையும் பெற்று விடுகின்றனர். அதற்குள் வெளியே இருந்து யாரையும் அனுமதிக்க விடாப்பிடியாக மறுத்தே வருகின்றனர். வெளியார் நுழைந்தால் தங்கள் பலவீனங்கள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளேயே சமரசம்செய்து உள்ளேயே நியமனங்களையும் மேற்கொள்கின்றனர். அதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வியியல் தகமையும் அனுபவமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இவ்வாறான பலவீனங்களால், இப்பதவிக்காக இவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தயவை மட்டுமே நம்பி தங்கள் விசுவாசத்தை அமைச்சருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அமைச்சர் தனக்கு விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையில், தனக்குக் கட்டுப்படக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தவறான தெரிவுக்கு செல்வது தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்யப்படும் மிகப்பெரும் அநீதியாக அமையும்.

மேலும் பல்கலைக்கழகக் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களுக்கும் தமிழ்க் கல்விச் சமூகம் பற்றிய முக்கிய பொறுப்பு உள்ளது. இந்த உப வேந்தர் தெரிவுக்கு வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள கவுன்சில் உறுப்பினர்களில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களாகவும் 13 பேர் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர். சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத்தின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பெண்ணிலைவாதி என பன்முகத்தன்மையினதாக இந்தப் பல்கலைக்கழகக் கவுன்சில் உள்ளது. இவ்வாறான மதிப்புக்குரிய மிக உயர்ந்த பொறுப்புடையவர்களினால் தெரிவு செய்யப்படும் பல்கலைக்கழக உபவேந்தர் அந்த மதிப்பையும் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்.

 அறியப்பட்ட பேய்களும் அறியக் கூடிய தேவதைகளும்:

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்துள்ள சமூகத்திற்கு எஞ்சியுள்ள ஒரே நம்பிக்கை கல்வி. தமிழ் மக்களுக்கு அந்தக் கல்வியை வழங்குகின்ற உயர்ந்த ஸ்தாபனமான யாழ்பாணப் பல்கலைக்கழகம் கல்விச் சமூகத்திற்கு முன்னுதாரணமாக, தலைமை ஸ்தாபனமாக விளங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள ஒருவரையே மீண்டும் உப வேந்தர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் “Known devil is better than unknown angel” போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவகையில் இந்த கவுன்சில் உறுப்பினர்களே யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு நிற்பவர்களை ‘அறியப்பட்ட பேய்கள்’ என ஏற்றுக்கொள்கின்றனர். இன்று இணைய வலையில் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மறுமூலையில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இணையமும் தொலைபேசியும் சரியான தொடர்புகளும் போதுமானது. அதனால் நீங்கள் அறிய விரும்பினால், ‘அறியாத தேவதைகள்’ என்பதற்கு இடமில்லை. அகவே ‘அறியப்பட்ட பேய்கள்’ என நீங்கள் அடையாளம் கண்டவர்களை – தமிழ் மக்கள் அடையாளம் கண்டவர்களை முற்றாக நிராகரியுங்கள்.

‘அறியப்பட்ட பேய்கள்’ ஆக அடையாளம் காணப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்படுவது பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பீட்டை வெகுவாகப் பாதிக்கும். சமயத் தலைவர்களும் பெண்ணிலை வாதியும், பாடசாலை அதிபர்களும், கல்வியியல் மேதைகளும், உயர் பதிவியில் உள்ளவர்களும் இணைந்து இதுவரை பல்கலைக்கழகத்தைச் சீரழித்தவர்களை, பாலியல் துஸ்பிரயோகங்களுக்காக அறியப்பட்டவர்களை, உரிய கல்வித் தகமை அற்றவர்களை, நிர்வாகத்திறன் அற்றவர்களை உப வேந்தராக வர அனுமதிப்பது ஒரு போதும் நியாயப்படுத்தப்பட முடியாது. இது தமிழ் கல்விச் சமூகத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதி. அதற்கு யாழ் பல்கலைக்கழகக் கவுன்சில் காரணமாக இருக்கக் கூடாது.

உப வேந்தருக்காக போட்டியிடுபவர்கள் கவுன்சில் உறுப்பினர்களின் நீண்ட கால நண்பர்களாக இருக்கலாம். நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களின் தெரிவு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெரிவு. அதனால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அங்கு இடம்கொடாமல் தெரிவு செய்யப்படுபவர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பையும் கௌரவத்தையும் நிலைநிறுத்துபவராக இருக்க வேண்டும்.

அமைச்சர் தேவானந்தாவின் பொறுப்பு:

Douglas_Devanandaதமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்காமையாலேயே யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான விவாதம் பொதுத்தளத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு பற்றிய விவாதம் இதுவரை இவ்வாறான ஒரு பொதுத் தளத்திற்கு வரவில்லை. இம்முறையே இது பரந்த பொதுத்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஒரு மூடிய சமூகமாக யாழ் பல்கலைக்கழகம் இருக்க முடியாது என்பதையே இது காட்டி நிற்கின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டது போல், ”யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்” என்று அவர் விரும்பினால் அதனைச் சாதிக்கக் கூடிய, பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரந்த கல்வியியல் தகமையும் இலங்கையிலும் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய அனுபவமும் ஆளுமையும் உடைய ஒருவரே அப்பொறுப்பான பதவிக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

கல்வியை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராட ஆரம்பித்த அமைச்சரின் கைகளில் தற்போது அம்மக்களின் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கின்ற முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தகுதியானவர் யார் என்பதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு மிக நன்றாகவே தெரியும். இந்தத் தெரிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ‘கல்வித் தகமையினதும் நிர்வாகத் திறனினதும் அடிப்படையில்’ மிகப்பொறுப்புடன் எடுப்பார் என்று தமிழ் மக்களின் கல்வியின்பால் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

 • Suppan
  Suppan

  WORLD RANK UNIVERSITY

  2185 University of Colombo
  2198 University of Moratuwa
  3005 University of Peradeniya
  3848 University of Ruhuna
  5330 University of Sri Jayewardenepura
  6047 Open University of Sri Lanka
  6217 University of Kelaniya
  7885 Sabaragamuwa University
  9173 Postgraduate Institute of Agriculture
  9309 University of Jaffna
  10401 Sri Lanka Institute of Information Technology
  11538 Arthur C Clarke Institute of Modern Technologies
  11733 Postgraduate Institute of Sciences
  11737 General Sir John Kotelawala Defence University
  11746 Rajarata University
  11996 Eastern University of Sri Lanka

  The above list is obtained from-www.webometrics.info/rank_by_country.asp?country=lk :

  Please kindly observe that some newly established Universities are above the rank of University of Jaffna and Eastern University of Sri Lanka and even some small institutes such as Postgraduate Institute of Agriculture. Why???

  Reply
 • Nadchathran Chev-Inthian
  Nadchathran Chev-Inthian

  மறுபடியும் பொறுப்புணர்வுடனும் சத்திரசிகிச்சை கத்தியின் துல்லியத்துடனும் எழுதப்பட்ட நல்ல கட்டுரை ஜெயபாலன். பாராட்டுக்கள்.

  மூதவை உறுப்பினர்களிலிருக்கும் நல்லவர்கள் இக்கட்டுரையில் கூறப்பட்டவற்றை கவனத்திலெடுக்காமலிருக்கமுடியாது.

  தேவா அண்ணையும் டக்ளஸ் தோழரும் அமைச்சருமான தேவானந்தா தன்னால் முடிந்தளவு அழுத்தங்களைப் பிரயோகித்து நல்லதைச்செய்து தன்னை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது.

  -நட்சத்திரன் செவ்விந்தியன்.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  தமிழ் சமூகத்தின் பாரிய பொறுப்புக்கள் கடமைகள் தோழர் டக்ளஸ் அவர்களின் தலைமைத்துவத்திடம் தமிழ் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

  Reply
 • Ajith
  Ajith

  I do not understand who handed over the responsibility of tamil community to the Douglas Devanda.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  யாழ். பல்கலை.வவுனியா வளாகத்தில் ஏராளம் முறைகேடுகள்: அனைத்து பல்கலை.மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு – செய்தி

  இதனையும் விசாரணை செய்யுங்களேன்.

  Reply
 • த ஜெயபாலன்.
  த ஜெயபாலன்.

  நண்பர் சுப்பன் அனுப்பி வைத்த தகவல்களின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்கள் பற்றிய சில தவறான தரவுகள் திருத்தப்பட்டு உள்ளது. நண்பர் சுப்பனது தகவல்களுக்கு நன்றி.

  த ஜெயபாலன்.

  Reply
 • இராஜதுரை
  இராஜதுரை

  விவாத மன்றத்துக்கு எனது பணிவான வணக்கங்கள்,

  யாழ் பல்கலையின் சிதில நிலையும் சீரழிவுப்போக்கும் வெளிப்படையான உண்மைகள். உண்மையை உணர்ந்து விட்டோம் என்று நினைக்கின்றேன். நமது தமிழ் பேசும் சமூகத்தின் அடையாளங்களுள் ஒன்றான இந்தப் பல்கலையின் சீரழிவு – “தீயை விடவும் வெம்மையாக நெஞ்சத்தைச் சுடுகின்றது”. சரிதான்.

  இந்த நிலையை மாற்றியமைக்க நாம் இற்றை வரை என்னதான் செய்திருக்கின்றோம்? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  எந்த அரசியல் தன் தலையை நுழைத்ததால் யாழ் பல்கலை சீரழிந்து போனதோ, அந்த அரசியலின் இன்னொரு பரிமாணத்தை உள்வாங்க நினைக்கின்றோம். இது சரிதானா?

  பெற்றோலியப் பெருங்கிணறுகள் தீப்பற்றி எரியும் வேளைகளில், அவற்றை அணைக்க வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து – ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி தீயைக் கட்டுப்படுத்துவார்கள். அது போன்ற யுக்திதானா (?) மீண்டும் யாழ் பல்கலையினுள் அரசியலின் வேறோர் பரிமாணத்தை உழ்நுழைத்தல்? தெரியவில்லை. இதற்கான விடையை/பதிலை இந்த விவாத மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். இது நம்மனைவரினதும் தார்மிகப் பொறுப்பாகின்றது. இங்கு நாம் தவறிழைப்பின் சரித்திரத்தின் பார்வையில் மன்னிக்கப்படமுடியாத குற்றவாளிகளாகி விடுவோம்.

  ஜெயபாலனார் தொடங்கி வைத்த இந்த விவாதத்துக்கு நிஸ்தாரும், நட்சத்திரனும் தமக்கே உரியதான பரிமாணங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி மெருகூட்டியுள்ளார்கள்.

  தொடரலையாக சுப்பன், அப்பாவி, தேவராசா, N. ஞானகுமாரன், காண்டீபன், ஆய்வு, செ. யாழ்ப்பணன் என்கின்ற முகம்தெரியாத அன்பர்கள் பல தகல்வகளை வழங்கி விவாதத்தை வலுவாக்கியுமுளார்கள். நல்லது, சரிதான்…

  ஆனாலும்… ஆனாலும்… நாம் எங்கு போக நினைக்கின்றோம்? துணை வேந்தர் தேர்தல்தானா – நமது இலக்கு? அல்லது அதையும் விஞ்சி, அகன்ற பார்வையில் “பாரபட்சமற்ற அறிவின் தேடலை” நோக்கி யாழ் பல்கலையை வீறு நடை போட வைப்பதா நம் உள்ளார்த்த நோக்கம்?

  ஹூலோ, அரசரெத்தினமோ, வேறெவரோ துணைவேந்தராக நியமிக்கப்படுவது மட்டும் தீர்வைத் தந்து விடாது. சீரிய நோக்கமும், தெளிந்த பார்வையுமில்லாது போனால் – முள்ளி வாய்க்கலைத் தாண்டியும் பயங்கரம் எமது சமூகத்தை பீடித்து விடும். இந்த நினைவு பயத்தை உண்டு பண்ணுகின்றது.

  நாம் எமது கொள்கைகளுக்கு இற்றைவரை விசுவாசமாக இந்த விவாதத்தை கட்டியெழுப்பியிருக்கின்றோமா? இந்த விவாத மேடையின் அறுதிப் பயன்பாடு என்ன? ஆக்கபூர்வமான கொள்கையியல் மற்றும் செயற்பாட்டியல் மறுமலர்ச்சியை நாம் தூண்டக் கூடியவர்கள்தானா? இற்றைவரை ஆக்கபூர்வமான மாற்றங்களேதாவது நடந்தேறியிருக்கின்றனவா?

  என்னால் கேள்விகளை மட்டுமே கேட்கக் கூடியதாக இருக்கின்றது. பதில்கள் தற்சமயம் என்னிடமில்லை…

  சிந்திப்போம்… செயற்படுவோம்.

  இப்படிக்கு,
  இராஜதுரை (நான் இந்த உலகெங்கும் பரவிச் சிதறிக்கிடக்கின்ற பாமரத் தமிழர்களுள் ஒருவன் மட்டுமே)

  Reply
 • Ajith
  Ajith

  Why we are not interested on the last? because is it in the East?

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  “முள்ளி வாய்க்கலைத் தாண்டியும் பயங்கரம் எமது சமூகத்தை பீடித்து விடும். இந்த நினைவு பயத்தை உண்டு பண்ணுகின்றது.” -இராஜதுரை

  மீண்டும் களம் புகுந்த இராஜதுரைக்கு எனது வாழ்த்துக்கள்.நீங்கள் கூறிய விடையமே இன்று பலர் மத்தியிலும் உள்ள நிலை. எல்லா விடையங்களுமே குழும செயற்பாட்டல் சீரழிந்து போய் உள்ளது. மேலும் அரசியலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எதிர்காலம் பற்றிய பயம் விரவிக் கிடக்கிறது. தழிழ் மாணவர்கள் உயர் கல்வி பற்றிய கனவை தொலைத்து விட்டார்கள்.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” //பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

  மேற்படி அறிக்கையை பேராசிரியர் ஹூல் வெளிப்படையாகவே விடுத்திருந்தாலும், அவரையும் அவரது பெயரையும் தமது சுயலாபச் செயல்களுக்கு பயன்படுத்தாமல் யாழ் பல்கலைக்கழகத்தின் புல்லுருவிக் குழுக்கள் விட்டு வைப்பதாக இல்லை.

  வவுனியா வளாகத்தில் மாணவர்களால் அடையாள உண்ணாவிரதம்/பகிஷ்கரிப்பு நடைபெற்றது. இதன் பின் புலத்தில் Dr. S. கிருஸ்ணகுமாரின் தூண்டுதல் இருப்பதாக அறியக் கிடைக்கின்றது. இடப் பற்றாக்குறை என்னும் விடயத்தை வைத்து 2004ல் இருந்தே பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்த பின்புலம் இந்த ‘பல்கலைக்கழக அரசியல்வாதிகளுக்கு’ இருக்கின்றது. “பம்பைமடு” விடயத்தை தூக்கி வைத்து நீட்டி முழக்கி பகிஷ்கரிப்புக்களும், கதவடைப்புக்களும் செய்ய வைத்து குழப்ப நிலையை ஏற்படுத்தி, அதன் வழியாக தனது குடும்ப வியாபாரமான “பத்மனாதன் கொன்ஸ்ட்றக்சன்ஸுக்கு” வவுனியா வளாக கட்டுமான பணிகள் அனைத்தினையும் திருப்பி எடுத்தவர் புவனேஸ்வரி லோகனாதன். வவுனியா மாவட்ட வைத்தியசாலை நிலத்தை அபகரித்து அதில் தனக்கென்று மூன்று மாடிகளை கொண்ட மாபெரும் வியாபார ஸ்தலமொன்றை இன்று கட்டிக் கொண்டிருக்கின்றார் புவனேஸ்வரி. இதெல்லாம் வளாக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளில் சுருட்டியெடுத்து அபகரித்த பணம் செய்யும் வேலைதான்.

  நிற்க, பேராசிரியர் ஹூலின் முன்னாள் மாணவரும் – பேராசிரியர் ஹூலை ஓரம் கட்டை, அவரிடமிருந்து களவாடிய ஆராய்ச்சி முடிவுகளை திரித்து தனது சுயம்பு கலாநிதிப்பட்டத்தை பெற்றவரான கனகநாதனின் ஆலோசனையுன் பேரில் கிருஸ்ணகுமார் சில சமயங்களில் இயங்குவதும் வழக்கம். தற்போது மாணவர்களால் நடத்தப்பட்ட அடையாள பகிஸ்கரிப்பு இதன் விளைவாகும். கனகநாதன் தனது லாபத்துக்காக எவருடனும் கூட்டுச் சேரக்கூடியவர். இவர் ஒரு புறம் குகனேசனுக்கு கிருஸ்ஹ்ணகுமாரை கவிழ்ப்பதெப்படி என ஆலோசனை வழங்கி விட்டு, மறுபுறம் கிருஸ்ணகுமாருக்கும் குகனேசனை விழ வைக்க ஆலோசனை வழங்குவார்.

  இவ்வளவும் இருக்க, ஆய்வு பற்றி அடிப்படையறிவுமே இல்லாத குகனேசன் தனது முதுமானிப்பட்டத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் திணறி நின்ற பொழுதில் அவருக்கு தோள் கொடுத்து, பேராதெனியவில் சில விடயங்களை சரிக்கட்டி குகனேசனுக்கு பட்டத்தைப் பெற்று உத்தியோகத்தை தக்கவைக்க உதவியவர் கிருஸ்ணகுமாரே.

  அரசியல் சதுரங்கத்தில் இப்போது இவர்கள் இருவரும் எதிர் எதிர் முனைகளில்.

  ஹூலை ஒரு கேடயமாக வைத்து தனது பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக கனகநாதன் தூண்டி விட்டிருக்கும் விடயம்தான் இந்த அடையாள மாணவர் உண்ணாவிரதம். இது இ. நந்தகுமாரனின் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கின்ற நாற்காலியை மேலும் குலுங்கி ஆட வைக்கும். நந்தகுமாரனும் தனது பதவியில் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக அறியக் கிடைக்கின்றது. சண்முகலிங்கன் ஓரம் கட்டப்பட்டல், நந்தகுமாரனுக்கும் அஸ்தமனம்தான்.

  புல்லுருவிகளின் நூதனமான சுயநல வியாபாரங்களுக்கு ஒரு brand nameஆக ஹூலின் பெயர் பாவிக்கப்பட்டு வருவதை அவர் நிச்சயமாக அறிந்திருக்கமாட்டார். பேராசிரியர் ஹூல் அவர்களே, “துரோணர் ஏன் ஏகலைவனின் கட்டை விரலை தானமாகக் கேட்டார்?” என்று இனிமேலாவது விளங்கிக் கொள்ளுங்கள். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி விடுதலும் ஆசிரியனின் கடமைதான்.

  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தலின் களமாற்றங்களின் அடிப்படையில் பல இடமாற்றங்களும் புதுமாற்றங்களும் வவுனியா வளாகத்தில் ஏற்படலாம்.

  நந்தகுமாரன் வெளியேற்றப்பட்டால் பீடாதிபதியாக வியாபாரக்கற்கைகள் பீடத்தில் வந்தமர்ந்திருக்கும் T. மங்களேஸ்வரனுக்கும் கலக்கம் ஏற்படும். குகனேசனுக்கும் அதே கதிதான்.

  யாரோ ஒரு கல்விசாரா ஊழியரும் (minor employee) துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிகின்றோம். அப்படியாயின், குகனேசன் பேசாமல் பிரயோக கற்கை பீடத்தின் உதவிப் பதிவாளர் ஜெயக்குமாரிடத்தில் தனது பதவியைக் கையளித்து விட்டு அப்படியே டியூசன் படிப்பிக்க போய் விடலாமே? ஜெயக்குமார்தான் குகனேசனின் மூளை (brain behind Kuhanesan) – English எழுத வாசிக்கத் தெரியாத குகனேசன் ஆவணங்களை நகர்த்தவும் நிர்வாகத்தை நடத்தவும் நம்பியிருப்பது ஜெயக்குமாரைத்தான். ஜெயக்குமாரும் ராஜதந்திரங்களில் சளைத்தவரல்ல… துரியோதனனுக்கு சகுனி போல குகனேசனுக்கு ஜெயக்குமாரே!

  இவ்வளவுமிருக்க, தனது தம்பி நித்தியானந்தனை எப்படியாவது ஒரு லெக்சரராக்கி அழகு பார்க்க வேண்டும் என்கின்ற புவனேஸ்வரியின் கனவு இனி மெய்ப்படாது. நித்தியானந்தனினதும் அவரது அக்கா புவனேஸ்வரியினதும் நியமனங்களில் உள்ள குழறுபடிகள் இன்று தேசம்நெற் வாயிலாக உலகப் பிரசித்தமாகி விட்டன.

  புவனேஸ்வரி முதல் நந்தகுமாரன் வரை… “சண்முகலிங்கனை நிலைபெறச்செய்து லாபம் காண வேண்டும் “, என்று போட்ட மனக்கணக்குகள் இன்று பிழைத்துப் போகும் நிலையில் உள்ளன. இதன் பின்னால் தேசம்நெற்றின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கின்றது.

  இணையச் செய்தி ஊடகமொன்றன் லாவகமான கையாளுகையால் இன்று யாழ் பல்கலையில் ஒரு புரட்சிகரமான நல்லதொரு மாற்றத்துக்கான வித்துக்கள் தேசம்நெற்றினால் விதைக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  தேசம்நெற் இற்க்கு இருக்கும் அக்கறை அமைச்சருக்கு அன்று இருந்து இருந்தால் ஏன் இந்த அவலம்?

  இப்போது விளங்குகிறதா EROS ஏன் வித்தியானந்தன் விடயத்தில் அப்படிநடந்து கொண்டது என்று.

  ஆகவே, இரத்தினசபாபதியின் கருத்துக்களை அமைச்சர் முன்னுதரணம் காட்டுவதயின் அவர் நீதியின் பக்கம் நிற்க வேண்டும். இல்லையேல் அவரையும் வரலாறு மன்னிக்காது. இதனை நான் கூறவில்லை இரத்தினசபாபதிதான் கூறினார்.

  Reply
 • Varathan
  Varathan

  I don’t think Govt or Douglas will favour to Hoole. Before May 18th Govt and Douglas had a need to find a person who is not a puppette of LTTE. So they appointed Hoole as a VC. Still there is no room to believe that Govt wholeheartly work to improve the the real needs of Tamil. So this time Govt will appoint the person who is ready to follow thier (Govt)agenda without questioning.

  Reply
 • Kandeepan
  Kandeepan

  Information obtained recently on the Protest held at the Vavuniya Campus of the UoJ. [Source: Tamilwin and an un-identified Thesamnet informant]

  யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்! தழிழ்வின் செய்தி

  இங்கு முக்கியமான மாணவர்களின் ஒரு கோரிக்கையை குறிப்பிடவில்லை, அதாவது, “நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான முடிவால் 1ம் வருட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டமையை கண்டித்து!”

  இதில் உள்ள விடையம் என்னவெனில், 1ம் வருட மாணவர்கள் நோய்வாய் பட்டமையால் (சிரேட்ட மாணவர்களினது பகிடி வதை காரணமாக; மருத்துவ அறிக்கையின் படி) கடந்த வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்கபட்டது.

  இதனை காரணமாக வைத்து மாணவர்களை கலாநிதி கிருஸ்ணகுமார் (ஒர் துறைத் தலைவர்) தூண்டிவிட்டதே இந்த போராட்டம். எனெனில் இடப் பற்றாக்குறை என்னும் விடயம் இன்று நேற்று உள்ளது அல்ல இது காலம் காலமாக உள்ள விடையம்.

  இது கிருஸ்ணகுமார் இற்கும் குகநேசனுக்கும் உள்ள தனிப்பட்ட விடையம். மேலும் கிருஸ்ணகுமார் பல நிர்வாக சீர்கேடுகளுடன் சம்பத்தபட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவைகளை மறைக்க மாணவர்களை தூண்டி விடுவது என்பது இவரது வாடிக்கை. ஆனால் மாணவர்களது கல்வி???

  எனவே இங்கு குறிப்பிட விரும்புவது என்னவென்றால் யாழ் பல்கலையில் ஊழல் என்பது தலை முதல் கால் வரை பரவி உள்ளது. எனவே இப் பல்கலை கழகத்தை மீட்டெடுப்பது இமாலய சாதனை தான் என்பதில் அய்யமில்லை.

  I would also like to add on to this information:
  a. Kuhanesan is also capable of triggering-up violence and mahyem in the campus
  b. Now that his stories are well known in Thesamnet – it is very likely that he together with the help of Mr. R. Jeyakumar (Assistant Registrar at the Faculty of Applied Science) will see that more violence occurs in the campus
  c. Jeyakumar is a close affliate with Sritharan (who’s the Senior Assistant Registrar of the Vavuniya Campus). Sritharan had been chased away from the Trinco Campus of the Eastern University for his unethical and professional mis-conduct
  d. Sritharan is one of the puppeteers who controls the way how Mr. R. Nanthakumaran, Rector of the Vavuniya Campus behaves

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  பகிடிவதை என்பது வவுனியா வளாகத்தை பொறுத்தவரையில் குகனேசன் போன்றவர்களால் தூண்டி விடப்படுகின்றதொரு பயங்கரவாதம். குகனேசன் மாணவர்களுடன் “அடேய்… என்னடா? எப்படி?” என்கின்ற தொனியில் சம்பாசணை செய்து, மாணவர்களை தன் கைக்குள் போடுக் கொண்டு – அவர்களை தான் நினைத்தமாதிரி ஆட்டுவிப்பார். இவருக்கும் கிருஸ்ணகுமாருக்கும் உள்ள விரோதம்தான் தற்போதைய பகிஸ்கரிப்பின் மூலம். ஆனாலும், குகனேசனும், புவனேஸ்வரி லோகனாதனும் கூட மாணவர்களை ஏவிவிட்டு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதில் கெட்டிக்காரர்கள். எவருக்கும் அஞ்சாத புவனேஸ்வரிக்கு “மொட்டைக் கடிதங்கள், தொலைபேசி மிரட்டல்கள்…” போன்ற இன்னபிற பயங்கரவாத மிரட்டல் செயல்களிலும் நல்ல நிபுணத்துவம் இருக்கின்றது. நிழலுக பெரும்புள்ளிகள் அரசோச்சும் கட்டுமான கொந்திறாத்து துறையில் கொடிகட்டிப் பறக்கும் புவனேஸ்வரியால் வவுனியாவில் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி எவருக்கும் மிரட்டல் விடுத்து சேதம் விளைவிக்கும் வல்லமை இருக்கின்றது.

  2009/10ம் ஆண்டில் பகிடிவதை காரணமாக நடந்த பல அநியாயங்களில், குகனேசன் கட்டவிழ்த்து விட்ட இனத்துவேச முரண்பாடுகளும் முக்கியமானவை. ஆதலால், மாணவர்களை சிங்களவர், தமிழர் (அதிலும் பல பிரிவுகள்), முஸ்லீங்கள் என்று பிரித்து வைத்து தன் விருப்பத்துக்கேற்ற மாதிரி ஆட்டிப்படைக்கின்றார் இவர். ஒரு பீடாதிபதியாக குகனேஸன் செய்த மாபெரும் சேவை வளாகத்தில் மாணவர்களின் பொது அறைக்கு (student common room) சட்டெலைட் டிஸ் அன்ரெனா பொருத்தி விட்டதுதான். இன்றும் விருவுரை நேரங்களில் விரிவுரைகளை ‘கட் அடித்து விட்டு’ தொலைக்காட்சியில் தென்னிந்திய தொலைக்காட்சி மெகா தொடர்களை பார்ப்பது மாணவர்களின் வழக்கமாகி விட்டது.

  அறிவார்த்தமற்ற சிந்தனைகளையும், மந்தப்போக்கினையும் இளம் சமுதாயத்தில் வளர்த்தெடுத்து, அதனை தத்தம் சுயலாபத்துக்காக பயன்படுத்தும் புவனேஸ்வரி, குகனேசன், கிருஸ்ணகுமார், நந்தகுமாரன், ஜெயக்குமார் (உதவி பதிவாளர்), புவனேஸ்வரியின் தம்பி நித்தியானந்தம், அவரின் சகபாடியும் சிஸ்டம்ஸ் எஞ்சினியராக வேலைபார்ப்பவருமான பிரதீபன் என்பவர்களின் ஊழல்கள் அளவுக்கடங்காதவை. இதில் சாதாரண பி.எஸ்.சி (மூன்றாம்தர) பட்டதாரியான K. பிரதீபன் என்பவர் (http://www.vau.jfn.ac.lk/Staff_Profile/Faculty/Applied_Science/Department/Physical_Science/Mr.%20K.%20Pratheepan.php) எஞ்சினியர் படிப்பு படிக்காமலேயே சிஸ்டம்ஸ் எஞ்சினியராக வேலை பார்க்கின்றார். இவருக்கு இந்த வேலை கிடைக்க காரணம் ஜே.சி.என். ராஜேந்திராவும் எஸ். ராசதுரையுமாவார்கள். பிரதீபன் அவர்கள்தான் வவுனியா வளாகத்தில் தேசம்நெற்றை தடை செய்தவர் எனவும் குற்றச் சாட்டுண்டு. இதற்கு ஒருவரும் அதாவது (பல்கலைக்கழக மூதவையோ, பேரவையோ) உத்தரவிடவில்லை – பிரதீபன் அவரது நண்பர் நித்தியானந்ததின் அக்கா புவனேஸ்வரி லோகனாதனைப் போல எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்.

  Reply
 • Palaiya maanavan
  Palaiya maanavan

  குகனெசன், ஷ்ரிகனேசன்(ஆங்கிலம்) பல திருகுதாளம் செய்வதாக கேள்வி…
  கூல் இற்கு பதவி கிடைத்துவிட கூடாது என மும்மரமாக இயங்குகிறார்க்ள்..
  இவனுகள் படிபீக்க வாரதில்லை…

  மாணவர்களின் கருத்துப்படி கிருஷ்ணகுமார் மேலே சொன்னது போல நடப்பவர் இல்லை என்ரும்..
  பல கூட்டங்களில் மாணவர்களுக்காகவும் கம்பசுகும் கதைதவரும் அவரே…. அவர் கூலிற்கு ஆதரவு தருவது தவறாக தெரியவில்லை… ஒரு உண்மையான படித்த நபருக்கு ஆதரவாக செயல்படுவது தவறா??

  அவர் மாணவர் இட பிரச்சனையை முதலே சொன்னவர் எனவும் சொல்கிறார்கள். இதைவிட மங்களேஷ்வரனால் பல மாற்றம் நடைபெறுவதாயும் சொல்கிறார்கள்… பழைய தலைவியும் குழப்பம் ஏற்படுதுவதாக தகவல்…

  இதைவிட புஷ்பனாதன் மாணவர்களுடன் (மாணவிகள் இல்லை) குறிப்பாக சில (2ம்) வருட மாணவர்களுடன் சில்மிசம் செய்வதாக தகவல்.

  தமது பதவி மற்றும் கலானிதி பட்டங்களை கருத்தில் கொண்டு யாழ் அதி மேதாவிகள் சண்ணுக்கு வாக்களிப்பார்கள் என எண்ணுகிறோம்.. ஏனென்றால் அவர்கள் படித்து பட்டம் பெறவில்லை….

  Reply
 • தேவராசா
  தேவராசா

  திரு. ‘பழைய மாணவன்’ அவர்களின் கருத்துக்கள்/தகவல்களுக்கு நன்றி.

  இணைய வழியாகவும் இன்னபிற மூலங்களிலும் இருந்தும் பெற்ற உண்மைத் தகவல்களின் கோப்புக்களின் அடிப்படையில் சில விடயங்களை இத்தால் தருகின்றேன்.
  மங்களேஸ்வரன், ஜெயசீலன், கிருஸ்ணகுமார், Mrs. கோப்பெருந்தேவி கலைநாதன் (முன்னைய பெயர் Miss. குமாரசாமி) ஆகியோர் வவுனியா வளாகத்தின் ஆரம்பகால நிறுவனமான Northern Province Affiliated University College (NPAUC)ல் தமது தொழில் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் வவுனியா வளாகத்தின் பீடங்களில் தம்மை உள்சேர்த்துக் கொண்டவர்கள்.

  இவர்கள் நால்வரும் நிறுவனத்துக்குள் தமது சுயலாபங்களுக்காகவும், அதிகாரத்துவத்தை நிலைநாட்டவும் கையாளும் அஸ்திரம்தான் “மாணவர்களை பகிஸ்கரிப்பு போன்ற செயல்களில் முடுக்கி விடுதல்”.

  ‘Mr. பழையமாணவன்’ கிருஸ்ணகுமாரைப் பற்றியும் மங்களேஸ்வரனைப் பற்றியும் சாதகமான விடயங்களை அடுக்க விரும்புவதன் மைய காரணம் என்னவென்றால் – மங்களேஸ்வரன், ஜெயசீலன், கிருஸ்ணகுமார், கோப்பெருந்தேவி ஆகியோர் தம்மை ‘வெளிப்படையான புரட்சிக்காரர்களாய் காட்டிக் கொண்டு’ மாணவர்களுடன் நெருக்கமாக பழகுதலாலும், மாணவர்களின் நாடித்துடிப்பை அறிந்து சில கவர்ச்சிகரமான யுக்திகளை கையாள்தலாலும் உருவாக்கிய மாயையே.

  இங்கு இந்த நால்வருமே, ஒரு கட்டத்தில் முதுமானிப்பட்ட ஆய்வுகளில் முடிவு காணமுடியாது தவறியவர்கள்/திணறியவர்கள். செல்வாக்குகளையும் முகஸ்துதியையும் மைய மூலதனமாக வைத்து தற்போதைய நிலைக்கு வந்து சேர்ந்தவர்கள்.

  இவர்கள் அனைவருமே தம் தமது ஆராய்ச்சி மேற்பார்வையாளர்களின் அறிவுபூர்வமான சிந்தனையை தொடர்ந்தும் பிரதி பண்ணிக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருவதாக பாசாங்கு காட்டுபவர்கள். இவர்களால் ஆக்கபூர்வமான பங்களிப்பேதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. இளம் சமுதாயத்துக்கு தம் ‘புரட்சிக்கார வார்த்தைகள்” கொண்டு மயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் குழப்பம் விளைவிக்க எத்தனிப்பவர்கள்.
  ஆனால், இவர்களை இ.நந்தகுமாரன், புவனேஸ்வரி லோகனாதன் போன்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் தம்மை அவர்கள் ஓரங்கட்டிவிடலாம் என்கின்ற பயம்தான் அடிப்படை காரணம்.

  இவர்களில் மங்களேஸ்வரன் நந்தகுமாரனுக்கும் ‘ஆமாம்’ போட்டுப் பதவியை தக்க வைக்கக் கூடியவர்.

  பழைய மாணவன் அவர்கள் அவசரமாக தமிழில் எழுதிய வசனங்களின் பின்னால் ஜெயசீலனும், மங்களேஸ்வரனும் செல்வாக்குச் செலுத்தி நிற்பது போல தென்படுகின்றது. பழைய மாணவரே, உண்மையான கல்விபுகட்டல் உங்களுக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது. “ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூவை சர்க்கரையாக நினைக்கும் நிலை”தான் உங்களது.

  கிருஸ்ணகுமார் தனது பி.எச்.டி பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பான ‘Appropriate Finite Element Method for Particular Inverse Problem- Special Mesh Generator’ என்பதனை பல பல வழிகளிலும் கொப்பி பண்ணி வெவ்வேறு புறொஜெக்ட்களாக மாற்றுவதில் வல்லுனர். தன்னை தானே கொப்ப்யடிப்பதில் இவர் வல்லவராவார். ஆக்கபூர்வமான சிந்தனை இவரிடத்தில் இம்மியளவும் இல்லை. அதிலும் மாணவர்களின் ஆய்வறிக்கைகளை ஆய்வுக்கட்டுரைகளாக்கி தன் பெயரை முதற்பெயராய் போடுவதிலும் இவர் வல்லுனர். எல்லாமே பேராசிரியர் பதவிக்காக பொயின்ற்ஸ் சேர்க்கும் யுக்திகள்தான்.

  ஆனாலும், கந்தையா சிறீகணேசன் பற்றி பழைய மாணவர் சொல்ல முயற்சி செய்தமைக்கு நன்றிகள். தமிழ் நாடக பின்னணி கொண்டவரும் சண்முகலிங்கனின் அபிமானியுமான இவர் ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர். எழுதுவதோ தமிழ் இலக்கியம் பற்றி. அதிலும் சமீபத்தில் இவர் தமிழ் இலக்கியம் (இலங்கை எழுத்தாளர்கள்) பற்றிய புத்தகமொன்றை வெளியிட்டார், அதில் ஆய்வும் இல்லை – தர்க்கமும் இல்லை. இந்தப் புத்தகம் கூட ஊவா வெல்லச பல்கலையின் விரிவுரையாளரொருவரின் முதுமானிபட்ட அறிக்கையின் அப்பட்டமான பிரதி என்றும் பலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். மேடையேறி பேசுதலிலும் சுயவிளம்பரம் தேடுதலிலும் அபிமானமுள்ள சிறிகணேசன் காலம் காலமாக ஜெயசீலனாரை ஓரம்கட்டியவர். இவர் இன்று குகனேசனுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றார் சண்முகலிங்கனுக்காக பிரச்சாரம் செய்ய.

  இங்கு ஜெயசீலனுக்கும் சிறீகணேசனுக்கும் உள்ள பகை பல்கலைக்கழக மட்டத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுமிருக்கின்றது.

  குகனேசன் இந்தக் குழுக்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்தும் விலகியும் செயற்படுவார் தனது சுயலாபத்துக்காக. இப்படியாக, குழுப்பூசல்களின் வெளிப்பாடான அரசியல்கள் இன்று கல்விச் சமூகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றது. இது ‘முள்ளிவாய்க்காலை விடவும் மாபெரும் அவலம்தான்’, இராஜதுரை (தேசம்நெற் பின்னூட்டாளர்) சொன்னாற் போல.

  //பல கூட்டங்களில் மாணவர்களுக்காகவும் கம்பசுகும் கதைதவரும் அவரே…. அவர் கூலிற்கு ஆதரவு தருவது தவறாக தெரியவில்லை… ஒரு உண்மையான படித்த நபருக்கு ஆதரவாக செயல்படுவது தவறா??// என்கின்ற பழைய மாணவனின் கருத்தை என்னால் ஏற்க முடியாது.

  ஒரு விரிவுரையாளனாக கிருஸ்ணகுமாரினதும் மங்களேஸ்வரனினதும் கடமை பாரபட்சமற்ற அறிவின் தேடலின் வழியில் கற்பித்தலும் ஆய்வும். இதனை இவர்கள் செய்யாமல் ஒருவருக்கு சார்பாகவும் இன்னொருவருக்கு விரோதமாகவும் அரசியல் பண்ணுகின்றார்கள். இது சரிதானா?
  மாணவர்களுக்கு ஆதரவு என்பது… அவர்களை நல்வழிப்படுத்தி ஆய்விலும், அறிவிலும் மேம்படச் செய்தல் – இதனை எவராவது செய்திருக்கின்றார்களா?

  உண்மையான கற்பித்தலுக்கும் அறிவின் தேடலுக்கும் இடப்பற்றாக்குறை ஒரு பொருட்டல்ல – ஆக்கபூர்வமான சிந்தனைகளில் தமக்குள்ள பற்றாக்குறைகளை மாணவர்களை வன்முறைக்கு இட்டு செல்வதன் மூலம் மூடி மறைத்தல் இவர்களுக்கு கைவந்த கலை.

  கற்பித்தலை விடுத்து அரசியல் பண்ணும் இவர்களும் புவனேஸ்வரிக்கும் சண்முகலிங்கனுக்கும் ஒப்பான பயங்கரவாதிகள்தான். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  நிற்க, புஸ்பனாதன் பற்றி சொல்லியிருந்தீர்கள். இவர் ஜயவர்த்தனபுரவில் எம்.பி.ஏ இனை முடிக்க முடியாமல் திணறி, பின் சீனாவுக்கு சென்று பெயரே தெரியாத பல்கலைக்கழகமொன்றில் பி.எச்.டி “வாங்கி” வந்த கெட்டிக்காரர். மூலைகளில் நின்று விடுப்பு கதைத்தல் தவிர வேறொன்றுமே செய்யாத மாமனிதர் இவர். இவரும் இன்று ஒரு சிரேஸ்ட விரிவுரையாளர், வவுனியா வளாக ஆய்வு மாநாட்டின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார் – சாதனைதான்!!!

  இவர் நந்தகுமாரனுக்கு முகஸ்துதி பாடி தன் இருப்பை நிலைபெற வைக்க முயன்று வருவதாக அறியக்கிட்டுகிறது. நந்தகுமாரன் கதிரையே ஆட்டம் கண்டிருக்கும் போது – இது எப்படிச் சாத்தியமாகும்?

  Reply
 • Palaiya maanavan
  Palaiya maanavan

  திரு தேவராசா அவர்களுக்கு நன்றி

  திரு ஜெயசீலனோ.. மங்கலேசஷ்வரனோ.. எனது பின்னால் இல்லை…

  துதி பாடுவது எமக்கு எந்த நலனையும் தராது…

  மாணவர்களின் கருத்தை முன் வைதேன்…
  இவற்றை மாணவர்களின் மூலமாக அறிந்தேன்…

  தயவு செய்து என்னையும் அவற்றுடன் இணைக்காதீர்கள்…

  விரிவுரையாளர்களின் ஆய்வுகள் பற்றி நமக்கு தெரியாது… அவர்களின் தற்போதைய விரிவுரைகள் எமக்கு போதுமனதாக இருந்தது.. அதனால் நாம் இப்போதுநல்ல நிலையில் இருக்கிறோம்… எம்முடன் இருந்த பல யாழ் பல்கலை மாணவர்கள் … பல இடங்களில் ஆங்கில மொழி தெரியாததால் ஓரம் கட்டியது நமக்கு தெரியும்….

  ஆகவே இப்போது என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்… எனநாம் எண்ணுகிறோம்….

  வணக்கம்…

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  பழைய மாணவனே உங்களுக்கு ஒரு விடையத்தை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்:

  யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவு, அது அவர்களது சூழ்நிலை. ஆனால் வவுனியா வளாக மாணவர்களது பாட அறிவு குறைவு. காரணம் மேற்குறிப்பிடவர்களின் இயலாமை. இதனால் உங்களது ஆராச்சி பின்னணி குறைவு. இது உங்களது குற்றமல்ல. இவற்றை நிவர்த்தி செய்யவே நாம் போராடுகின்றோம்.

  இதில் எமது சுயநலன் ஏதும் இல்லை. மாறாக எமது நலன்கள் பாழடிக்கபடுகின்றது.

  Reply