நேற்று வியாழக்கிழமை யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் கற்பூரச்சட்டிக்குள் விழுந்து ஐந்து போர் காயமுற்றனர். அதிகளவான சன நெருக்கடி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விழுந்தவர்களில் நான்கு பேருக்க சிறு காயங்களும், ஒருவருக்கு படுகாயமும் எற்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வின் போது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக இம்மாணவன் கேணிக்குள் தவறி விழுந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கந்தர்மடம் பழம் வீதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் கனுசன் என்ற மாணவனே இவ்வாறு நீரில் முழ்கி மரணமானவராவார். நேற்று யாழ் மாவட்ட ஆலயங்களில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்து கொண்டதால் சனநெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
karuna
சிங்கள அரசின் திட்டமிட்ட இந்த கற்பூர இனஅழிப்பை உடன் நிறுத்த வேண்டுமென வெகுவிரைவில் ததேகூ சுரேஸ் பீரேமச்சந்திரன் அறிக்கை விட்டாலும் விடுவார். கேணியில் அதிகளவு தண்ணீரை இலங்கை இராணுவ உதவியுடன் இன அழிப்பு நோக்கில் சிங்கள ஏகாதிபத்திய வாதிகள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் இதை அரசியல் படுத்த சுரேஸ் தயங்கமாட்டார்!
மாயா
இந்த ‘சூரன்போர்’ எதிரிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று ஒரு யாழ் பத்திரிகை ஆசிரியர் தலையங்கமாக எழுதியிருந்து. அந்த எதிரி இந்த பச்சை பாலகனா? எவர் சாவிலாவது வயிறு வளர்க்கும் ஊடகங்களை மக்கள் எரிக்க வேண்டும்.